பல்லி விழும் பலன்–Palli vilum palangal
பஞ்சாங்க அடிப்படையில் பல்லி சத்தமிடுவதற்கும் ,நம் மேல் விழுந்தால் ஏற்படும் பலன்களை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்
தலையில் பல்லி விழுந்தால்
இது அபசகுனமாக பார்க்கப்படுகிறது.குடும்பத்தில் சண்டை ,கலகம் போன்றைவை ஏற்படலாம்.அன்றைய தினம் கவனமாக இருப்பது நல்லது.
குடுமி, கூந்தல், முகம், நெற்றி இவற்றில் பல்லி விழுந்தால்
நல்ல சகுனம் சுகம் ,லாபம் ,பந்து தரிசனம் ,பட்டாபிஷேகம் போன்ற நல்ல பலன்கள் கிட்டும்.
சிரசு, வலது இடது புருவ மத்தியில், மூக்கு இவற்றில் பல்லி விழுந்தால்
இது அபசகுனமாக பார்க்கப்படுகிறது.பிள்ளைகளுக்கு பிரச்சினை,கண்டம்,வியாதி போன்ற தீய பலன்கள்
வலப்புருவம், இடப்புருவம், வலது கபாலம், இட கபாலம், வலக்கண், இடக்கண் இவற்றில் பல்லி விழுந்தால்
நல்ல சகுனம் ராஜானுக்கிரகம்,சம்பத்து ,அன்பு ,சுகம்,கட்டுப்படுதல் போன்ற நல்ல பலன்கள்
மூக்கு நுனி, மேல் உதடு, மேவாய்க்கட்டை, வாய் இவற்றில் பல்லி விழுந்தால்
இது அபசகுனமாக பார்க்கப்படுகிறது.விசனம் ,பொருள் நாசம்,ராஜ தண்டனை,பயம் போன்ற தீய பலன்கள்.
கீழ் உதடு, வலது காது, இடது காது, கழுத்து, வலது புஜம், இடது புஜம் இவற்றில் பல்லி விழுந்தால்
நல்ல சகுனம் தன லாபம்,தீர்க்காயுள்,சத்ரு நாசம்,வியாபார முன்னேற்றம்,ஆரோக்யம் ,ஸ்த்ரீ சுகம் போன்ற நல்ல பலன்கள்
வலக்கை ,இடக்கை ,வலது மணிக்கட்டு,இடக்கைவிரல்,இடது விலா எலும்பு இவற்றில் பல்லி விழுந்தால்
இது அபசகுனமாக பார்க்கப்படுகிறது.துக்கம் ,துயரம்,பீடை,கண்டம் போன்ற தீய பலன்கள்.
இடது மணிக்கட்டு,வலது கைவிரல்,மார்பு,தேகம்,இருதயம் இவற்றில் பல்லி விழுந்தால்
நல்ல சகுனம் ராஜசன்மானம்,தன லாபம்,சௌக்கியம்,தீர்க்காயுள்,போன்ற நல்ல பலன்கள்.
வலது இடது மார்பு ஸ்தானங்கள்,முதுகு,ஆண்குறி,வலது இடது தொடைகள் இவற்றில் பல்லி விழுந்தால்
இது அபசகுனமாக பார்க்கப்படுகிறது.தரித்திரம் ,நாசம்,தந்தைக்கு கண்டம்,பாப சம்பவம் போன்ற தீய பலன்கள்.
வயிறு,வலது இடது அபானம்,வலது விலா எலும்பு,வலது இடது முழங்கால்கள்,நாபி,தேகத்தில்ஓடல்,வலது இடது கணுக்கால்,வலது இடது பாதங்கள் இவற்றில் பல்லி விழுந்தால்.
நல்ல சகுனம் சுக வாழ்வு,தான்ய லாபம்,தன லாபம்,ரத்தின லாபம்,சுபம்,பிரயாணம்,தீர்க்காயுள் போன்ற நல்ல பலன்கள்.
வலது பாதம் ,இடது பாதம்,வலது பாத விரல்கள்,இடது பாத விரல்கள்,வலது இடது கால் விரல் நகங்கள் இவற்றில் பல்லி விழுந்தால்.
இது அபசகுனமாக பார்க்கப்படுகிறது.ரோகம்,துக்கம்,ராஜ பயம்,நோய்,தன நாசம் போன்ற தீய பலன்கள்.
தோஷ பரிகாரம்
தோஷமுள்ள இடங்களில் பல்லி விழுந்தால் உடனே தலைக்கு குளித்துவிட்டு இஷ்ட தெய்வத்தை வணங்கவும்.காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள தங்க வெள்ளி பல்லியை நினைத்து கொள்வது உத்தமம்.
பத்து திக்கில் பல்லி சொல்லுக்கு பலன்-palli vilum palangal