மாந்தி தரும் அசுபயோகங்கள்
வஞ்சன, சோர, யோகங்கள்
லக்னத்தில் பாவிகள் இருந்து அதனுடன் ‘மாந்தி’ இருக்க அல்லது மாந்தியானவர் கேந்திராதிபதி அல்லது திரிகோண அதிபதிகள் உடன் இருந்தால் ,அல்லது லக்னாதிபதி ராகு, சனி அல்லது கேதுவுடன் இருந்தால் இந்த யோகம் ஏற்படும்.
பலன்கள்:
இந்த நிலையில் உள்ள ஜாதகர்கள் தங்களை சுற்றியுள்ளவர்களை சந்தேகத்துடன் பார்ப்பார்கள். தன்னை ஏமாற்றுவார்களா, சுரண்டுவார்களா, கொள்ளை அடிப்பார்களா என்ற பய உணர்வு உள்ளவர்கள்.
ஜட யோகம்
இரண்டாமிடத்து அதிபதி பத்தாம் இடத்தில் பாவிகள் உடனிருக்க, இரண்டாம் இடத்தில் சூரியனும் மாந்தியும் சேர்ந்து இருந்தால் இந்த யோகம் ஏற்படும்.
பலன்கள்:
பொது இடங்களில் நடுங்குவார்கள்.
கபட யோகம்
4-ஆம் இடத்து அதிபதி சனி, மாந்தி அல்லது ராகுவுடன் சேர்ந்து இருந்து 4ம் வீட்டை பாவிகள் பார்த்தால் கபட யோகம் ஏற்படும்.
பலன்கள்:
ஆழ்ந்த ஈடுபாட்டினால் குடும்ப குன்றியவர்
சர்ப்ப கண்ட யோகம்
ராகுவும் மாந்தியும் சேர்ந்து இரண்டாம் இடத்தில் அமர்ந்தால் சர்ப்ப கண்ட யோகம் ஏற்படும்.
பலன்கள்:
ஜாதகருக்கு பாம்பு கடிக்கும் நிலை ஏற்படும்.
காலகர்ண யோகம்
சஷ்டியாம்சத்தில் மூன்றாமிடத்தில் ராகு, மாந்தி அல்லது மாந்தி செவ்வாய் சேர்ந்து இருந்தால் இந்த யோகம் ஏற்படும்.
பலன்கள்:
ஜாதகருக்கு காது மந்தமாக அல்லது காதில் பிணிகள் ஏற்படும்.
க்ஷயரோக யோகம்
6-ல் ராகு அமர்ந்திருக்க, கேந்திரத்தில் மாந்தி அமர, லக்னாதிபதி 8-ல் இருப்பின் இந்த யோகம் ஏற்படும்.
பலன்கள்:
ஜாதகருக்கு க்ஷய ரோகம் ஏற்படும்.
துர்மரணம் யோகம்
லக்னத்திலிருந்து 6, 8, 12-ஆம் இடத்தில் சனி, மாந்தி, ராகுவுடன் இருக்க, லக்னத்தையும் சந்திரனையும் பார்த்தால் இந்த யோகம் ஏற்படும். பல ஜாதகர் மரணம் துர்மரணம் ஆகும்.
யுத்த மரணயோகம்
6,8-ம் பாவாதிபதியாக செவ்வாய் இருக்க, மூன்றாம் இடத்தில் ராகு, சனி அல்லது மாந்தி கொடூர அம்சத்தில் இருந்தால் அது யுத்த மரண யோகம் ஆகும்.
பலன்கள்:
ஜாதகர் யுத்தத்தில் கொல்லப்படுவார்.
அபுத்திர யோகம்
ஜென்ம லக்னத்திற்கு 5ஆம் பாவமாக சனி புதன் இவர்களின் ராசிகள் ஆகி அங்கு சனி மாந்தி இவர்கள் கூடி இருந்தாலும், சனி மாந்தி இவர்களால் மேற்படி புத்திரதோஷம் பார்க்கப்பட்டாலும், அப்போது ஜாதகருக்கு தத்து முதலியவை மூலம் சந்ததி உண்டாகும்.
- ஜென்ம லக்னம் சிம்மமாகி, தனுசு ராசி கேஷத்திரமாகி மேற்படி கிரகங்கள் சனி, மாந்தி இவர்கள் அங்கு இருந்தால் ஜாதகன் (குரூரமான) அற்ப சந்ததி உடையவன்.
- ஜென்ம லக்னம் மீனமாகி கடகம் கேஷத்திரமாகி மேற்படி சனி ,மாந்தி இருந்தால் சந்ததி இல்லாதவன்.
தரித்திர யோகம்
மாந்தி உதய நேரம் ஆனது தியாஜ்ய காலமாக (விஷக்கடிகை)நேரமாக இருப்பின், அந்த ஜாதகர் கோடீஸ்வரன் ஆனவனாகவும், பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும்.
பகுஸ்திரீ யோகம்
ராசியில் 4ம் இடத்து அதிபதி அம்சத்தில் எதிரி வீட்டில் அமர்ந்திருந்தாலும், பாவிகள் அல்லது மாந்தியுடன் கூடி இருந்தாலோ, மாந்தி அல்லது பாவிகளால் பார்க்கப்பட்டாலும், அந்த ஜாதகர் பல பெண்கள் தொடர்புடையவர். ஜாதகி ஆனால் பல ஆண்களுடன் தொடர்பு உடையவர் ஆவார்.