மாந்தி தோஷம்-நீக்கும் பரிகார ஸ்தலம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR


உங்கள் ஜாதகத்தில் மாந்தி தோஷம் அல்லது குளிகன் தோஷம் உள்ளதா?
ஜென்ம சனி , அஷ்டம சனி அல்லது அர்த்தாஷ்டம சனி நடைபெறுகிறதா ?
திருவாலங்காடு-மாந்தீஸ்வரர் கோயில்

காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் வடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின சபையாகத் திகழ்கிறது. காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார்.
ஊர்த்துவ தாணடவம்
திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாணடவம் என்று சொல்லப்படும்.வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்கு த்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும்

மாந்தி தோஷம்
மாந்தி தோஷம்


மாந்தீஸ்வரர்:
ஜாதகத்தில் 9,10,11 ஆகிய இடங்களை தவிர 1,2,3,4,5,6,7,8,12 போன்ற இடங்களில் மாந்தி இருந்தால் தோஷம் ஆகும்.இந்த கோயிலில் உள்ள மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜைகள் செய்வதன் மூலம், அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஜன்ம சனி ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். மேலும், திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமும் நடைபெறும். கடன் தொல்லை நீங்கி நிம்மதி ஏற்படும்.


மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜை:
இக்கோயில் சனி பகவானின் மகன் மாந்தீஸ்வரர் இறைவனை நோக்கி தவம் புரிந்து தோஷத்திலிருந்து விடுபட்டார் ஆதலால் இக்கோயிலில் மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜை செய்தால் அனைத்து விதமான சனி தோஷங்களிலும் இருந்து விடுபடலாம் .
சனிக்கிழமை காலை, 6:30 மணி முதல், காலை, 10:30 மணி வரை நடைபெறும்
வாரந்தோறும் சனிக்கிழமை காலை, 6:30 மணி முதல், காலை, 10:30 மணி வரை நடைபெறும் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடைபெறும்.சனிக்கிழமைகளில் காலை நேரத்தில் மட்டும் நடைபெறுகிறது. சில ஆண்டுகளாக, மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது


எப்படிப் போவது:
சென்னை – அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் கோவில் உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதிகள் உண்டு. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால் கோவில் மிக அருகிலேயே இருக்கிறது. திருவள்ளூரில் இருந்து 18 கி.மி. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 14 கி.மி. தொலைவிலும் திருவாலங்காடு தலம் உள்ளது

இந்த கட்டுரையை எழுதியவர் :
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

Google Map :

Leave a Comment

error: Content is protected !!