குரு-சந்திரன் இணைவு
மிதுன லக்னத்தினருக்கு சந்திரன் தனாதிபதி, குரு களத்திர ஸ்தானாதிபதி , மாரகாதிபதி,பாதகாதிபதி , தொழில் ஸ்தானாதிபதி.
தனாதிபதி சந்திரன் தொழில் ஸ்தானாதிபதியான குருவுடன் சம்பந்தம் பெறுவதால் பேச்சை மூலதனமாகக்கொண்ட தொழிலைச் செய்பவர்களுக்கு வருமானம் அதிகமாக இருக்கும். வாழ்நாள் முழுவதும் வருமானம் வந்துகொண்டே இருக்கும்.
7 – ஆம் அதிபதியாகி தன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் வாழ்க்கைத் துணையால் , நண்பர்களால் , தொழில் கூட்டாளியால் , வாடிக்கையாளர்களால் சகாயமான பலனுண்டு.
குரு , சந்திரன் தசை புக்திக் காலங்களில் மாரகம் , பாதகம் மிகைப்படுத்தலாக இருக்கும்.
கூட்டுத் தொழிலில் பிரிவினை , கருத்து வேறுபாட்டால் தம்பதிகள் விவாகாரத்து பெறுவது , நண்பர்கள்மூலம் வம்பு , வழக்கு உருவாவது போன்றவற்றால் நிம்மதி குறையும்.
பரிகாரம்
புதன்கிழமை காலை 7.00-8.00 மணிவரையிலான சந்திர ஓரையில் மகாவிஷ்ணுவை வழிபட நிம்மதி அதிகரிக்கும்.