மீன ராசி -மீன லக்னம்
🎯இவர்களின் கணவன் அல்லது மனைவிக்குரிய வீடு கன்னியாகும் புதனின் வீடு.இதில் சூரியன் , சந்திரன் , செவ்வாய் சார நட்சத்திரங்களான உத்திரம் . அஸ்தம் , சித்திரை உள்ளன .
🎯மீன லக்ன துணைவர்கள் பொதுவாக பொறுமை உடையவர்களாகவும் , கோபம் வந்தால் கத்தித் தீர்ப்பவர்களாகவும் இருப்பர்.
🎯நல்ல புத்திசாலிகள் சற்று ஆரோக்கியம் குறைந்தவர்கள் உழைப்பாளிகள் .
🎯இவர்களின் 7 – ஆம் அதிபதி உச்சமானால் , இவர்களுக்கு மிகப்பெரிய வேலை செய்பவரோ , நல்ல கல்வி கற்றவரோ , தொழிலில் கொடிகட்டிப் பறப்பவரோ வாழ்க்கைத் துணையாக அமைவார்.
🎯மிகவும் புத்திசாலியாக இருப்பார் சிலர் வியாபாரத்தில் மிகச்சிறப்பாக இருப்பர்.
🎯மீன லக்ன 7 – ஆம் அதிபதி நீசமானால் , மிகக் கஷ்டம் ஏனெனில் மீன லக்ன 7 – ஆம் அதிபதி மீனத்திலேயே நீசமாவார் . கல்யாணம் ஆனவுடன் இவர்களுடனே தங்கி இவர்களுக்கு தர்மசங்கடத்தையும் , கஷ்டத்தையும் கொடுப்பார். நீசபங்கம் ஆனால் சரியாகி விடும்.
🎯மீன லக்ன மாமியார் தர்ம சிந்தனையும் பக்தியுடனும் இருப்பார். மாமனார் அழகை விரும்புகிறவராகஇருப்பார்.
🎯இவர்களின் மாமனார் வீடு கோவில் , கல்வி நிலையங்கள் அருகில் இருக்கக்கூடும்.
🎯தெற்கு , வடக்கு திசைகளில் வீடு இருக்கலாம்.
🎯டோ , ப , பி , பூ ஷந . ட . பே , போ , அம் , அஃ (D,P,S,A,)ஆகிய எழுத்துகளில் பெயர் ஆரம்பிக்கக் கூடும் .