முக்கிய ஜோதிட விதிகள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

முக்கிய ஜோதிட விதிகள்

  • சனி சுக்கிரன் இல்லத்தில் இருப்பது இல்லறத்தை பாதிக்கலாம். சனி லக்னாதிபதி சுக்கிரன் வீட்டில் இருப்பது நலமே.
  • லக்னாதிபதி 6, 8 ,12 போன ஸ்தானங்களில் அமையப் பெற்றவர்களுக்கு 5, 7, 10 ,11க்குரியவர்கள் பலம் பெற்று நல்ல இடத்தில் நிற்பது நலமே.(திறத்தால் உயராவிடினும்,இணைந்தால் கை தூக்கி விடுவார்).
  • லக்னாதிபதி பலம் பெற்று 5, 7, 10 ,11 ஆகிய இடத்தின் அதிபதிகளோடு சேர்ந்து உள்ளவர்கள் பெரிய நிலையை தொடமுடியும்.
  • 7 ல் செ , ( அ ) 8 ல் சனி ( அ ) சந்திரன் – சுக்கிரன் 6 , 8 ஆக வருவது கூடாது . இல்லற பாதிப்பு , மறுமணம் , திருமணமானவர்களை சேரும் அமைப்பு தரும்.
  • கேந்திராதிபதி தோஷம் , சகடதோஷம் அஸ்தமன தோஷம் இருப்பின் , குரு , சுக் , புதன் பார்வையால் நன்மை இல்லை .
  • ராகு , கேது , 2 , 8 ல் இருந்தால் தோஷம் ஆனால் மேஷம் , ரிஷபம் , மிதுனம் , சிம்மம் , தனுசு ராசியில் இருப்பின் தோஷம் இல்லை.
  • சனி , சுக்கிரன் , சேர்க்கை 3 ல் இருப்பின் முன்பின் யோசிக்காமல் எதும் செய்யநேரிடும் . மணவாழ்வில் சச்சரவு உண்டு.
  • சனி , சுக் , சேர்க்கை 6 ல் இருப்பின் நல்ல விஷய ஞானங்கள் இருந்தும் சோபிக்காது. பல பெண்களை போகித்தவன் , தாரதோஷம் உண்டு.பெண்களால் அபகீர்த்தி உண்டு.பல ஊர்களை சுற்றிய காமுகன் ஆவான்.
  • 7 க்குரியவர் சுபராகி பலமான சனியோடு எங்கு சேர்ந்து இருப்பினும் புனர்பூயோகம் . மறுமணம் புரியும் யோகம் வரலாம்.
  • லக்கினாதிபதி நின்ற வீட்டிற்கு 5 , 9 ல் சந் , சூரி , இருப்பின் ஜாதகர் உயர்ந்த அந்தஸ்தை பெறுவர் .லக்கினாதிபதியோடு எத்தனை கிரகம் சேர்ந்தாலும் அத்தனை பலமும் லக்கினத்திற்கு கிடைக்கிறது.
  • 6 – ம் பாவம் பலம் பெற்று இருந்தால் வாத பித்த சிலோத்தும் மாதுஸ்திரிதோஷத்தால் உடல் பாதிப்பை அடைவர் . நவாம்சநிலையை பார்க்கவும்.
  • 8 ம் பாவம் பலமாக இருந்தால் ஸ்திரி கோபத்தால் தேவ-குரு,பிதுர், தெய்வ தோஷத்தால் பாதிப்பை அடைவர்.நவாம்ச நிலையை பார்க்கவும்.
  • 12 ம் பாவம் பலமாயிருந்தால் ஸ்தீரி சாபத்தால் போட்டி பொறாமை வைராக்கியத்தால் தோஷத்தால் மாந்தீரிக குற்றத்தால் பாதிப்பை அடைவர்.நவாம்ச நிலையையும் பார்க்கவும்.
  • புதன் தான் நின்ற வீட்டிற்கு 5,7 ஆதிபத்திய பலனோ ( அ ) அந்த வீட்டு ( அ ) அந்த வீட்டின் அதிபர் நின்ற இடத்தின் பலனை சிறப்பாகத் தருவார்.
  • சனி , அந்தந்த பாவத்துக்கு 8 க்குரியவர் நவாம்ச ராசியில் உள்ள இடத்தை அடையும்போது அந்த பாவத்துக்கு தீங்கு ஏற்படும்.
  • சூரியனுடைய அஷ்டவர்க்கத்தில் சூரியன் தான் இருக்கும் ராசியில் எத்தனை பரல் உள்ளதோ அத்தனையாவது கர்ப்பமான நபராக இருப்பார்.
முக்கிய ஜோதிட விதிகள்
  • ஒரு வீட்டில் தனியாக ஒரு கிரகம் யார் சேர்க்கை பார்வை பரிவர்த்தனை இன்றி இருப்பின் , அக்கிரகத்தின் காரகத் தன்மைக்கு பிரபலம் இராது .
  • தனித்தனியாக கிரகங்கள் நிற்குமாயின் , அக்கிரகங்களின் சுயபலம் எவ்விதத்திலும் அதிக பலம் ஏற்பட்டு இருந்தாலும் அது வேறு கிரகத்தின் இணைவு பலத்தை காட்டிலும் குறைவானதே.
  • தனி கிரகமாய் நிற்கும் கிரகம் எவ்விதத்தாகிலும் பலம் பொருந்தியதாயினும் அந்த பாவகத்தின் காரக பலனைத் தவிர கூட்டுப்பலன் கிடையாது.
  • ஒரு கிரகம் தனியாக இருப்பதைவிட வேறு கிரகத்துடன் இணைந்து இருப்பது அதிக பலத்தைத் தரும் . அப்படி இணைந்து இருப்பதால் , அந்த பாவக பலன் அதிகப்படும்.
  • சுக்கிரனோடு , குரு , சனி , கேது சேர்ந்தாலும் பார்த்தாலும் , மனைவியோகம் கிட்டாது.

ஜென்ம நட்சத்திராதிபதி தன் உச்ச ராசி அம்சத்தில் இருப்பின் லட்சுமி யோகம்.

  • லக்கினத்தில் குரு சுக் சேர்க்கை 3 ல் செவ் , சனி சேர்க்கை இருப்பின் லட்சுமி யோகம் , 25 வயதுக்கு மேல் யோகம் தரும்.
  • இரு ஆதி பத்தியம் பெற்று உள்ள கோள்கள் முதலில் மூலத்திரிகோணராசி பாவபலனையும் பின் சுயக்ஷேத்திர பலனையும் தரும்.
  • நவாம்ச லக்கினாதிபதி ஆண் கிரகத்தோடு 3,7 , 8 , 9 ல் இருப்பின் திருமண வாழ்வு இராது.சரிபடாது.
  • எந்த லக்கினமானாலும் சரி , துலாராசியில் தனித்த சுக்கிரன் , விருச்சிக ராசியில் தனித்த செவ்வாய் பார்வையும் பெறாமல் இருந்தால் மேற்படி தசாபுத்திகாலங்களில் , கணவன் ( அ ) மனைவி பிரிவினை ஆயுள் தோஷம் கண்டம் ஏற்படலாம்.
  • அஸ்தமனத்தில் இருக்கும் கிரகம் தசாபுத்தி காலங்களில் சிறப்பைத் தராது ஜெனன காலத்தில் அஸ்தமனமான கிரகம் . கோச்சாரத்தில் அஸ்தமனம் பெற்று அக்கிரகத்து தசாபுத்தியும் இருப்பின் எக்காரியமும் சோபிக்காது.
  • 6,8ம் பாவாதிபதிகள் ஒன்றாய் கூடி சனி சேர்க்கை பார்வை பெற்று இருப்பின் அற்ப ஆயுள்.
  • மேஷம்,மிதுனம்,கடகம், துலாம்,விருச்சிகம் இவற்றில் 8க்குரியவர்,மீனத்திற்கு2,7க்குரியவர்,தனுசு ,கன்னிக்கு11க்குரியவர்,ரிஷப மகரத்திற்கு 6க்குரியவர்,சிம்மத்திற்கும்7க்குரியவர்பலத்தை அறிந்து

Leave a Comment

error: Content is protected !!