சூரியன்+சந்திரன்+ செவ்வாய் :
லக்னத்தில் இம்மூவரும் கூடியிருந்தால் , அந்த ஜாதகர் முடையவன் ; பொய் சொல்லுபவன் ; குரூர குணம் கொண்டவன் . பெரியோர்களுக்குப் பிரியமுள்ளவனாக இருப்பான் ; அங்கவீனன்
விளக்கம் :
இந்த மூன்று கோட்களில் சந்திரன் மட்டும் சுபர் ; மற்ற இருவரும் பாவிகள் ; எனவே , பாவ பலன்கள் உண்டாகுமென முனிவர் கூறினார்.ஆனால் , இவர்கள் நட்பு , ஆட்சி உச்சமாக இருந்தால் நன்மை செய்ய இடமுண்டு.
சூரியன் + சந்திரன் + புதன்:
மந்த புத்தியுடைவர்.
விளக்கம்:
இம்மூவரில் புதன் மட்டும் சுபர்.மற்ற இருவரும் பாவிகள்.எனவே , பாவ பலன் கூறப்பட்டது . ஆனால் , ஜென்மத்தில் சூரியன் , புதன் இருப்பது இராஜயோகமாகும்.எனவே , சமமான பலன் நடைபெறும் எனக் கூறலாம்.
சூரியன்+சந்திரன்+ குரு:
அதிக சுப பலன்களை அனுபவிப்பவர். நல்ல குணங்களில் ஆசையுடைவர் ; புத்திமான். பணக்காரன். வீரம் நிறைந்தவன்.ஸுகமாயிருப்பவன்.
விளக்கம் :
சூரியன் , சந்திரன் , குரு ஆகிய மூவரும் நண்பர்கள்.குரு ஒரு பூரண சுபக் கிரகம் . லக்ன பலம் வேறு . எனவே , சுப பலன்கள் கூறப்பட்டது . ஆட்சி , உச்சமாக இருந்தால் இன்னும் விசேஷமான சுப பலன்களைக் கூற முடியும்.
சூரியன்+சந்திரன்+சுக்கிரன் :
சுப குணம் உள்ளவர் ; கீர்த்திமான் ; மானமுள்ளவர் ; ஸம்பத்து நிறைந்தவர் ; ஜனப்பிரியர் ; நீதிமான்.
விளக்கம் :
லக்னத்தில் சூரியன் , சுக்கிரன் கூடி நிற்பது இராஜயோகமாகும்.சூரியன் , சந்திரன் கூடுவது அமாவாசை யோகமாகும்.எனவே , சுப பலன்கள் கூறப்பட்டது. சூரியனும் , சுக்கிரனும் பகைவர்கள்.எனவே , க்ஷை சுப பலன்களை அடைவதற்கு ஜாதகர் கடுமையாக போராட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
சூரியன்+சந்திரன்+சனி :
பயங்கரமான சரீர தோற்றம் உள்ளவர் . அற்ப ஆயுள் உள்ளவர் . நோயாளி ; பாவி ; கலகக்காரன் ; பந்து துவேஷி !
விளக்கம் :
சூரியன் , சனி ஜென்மத்தில் கூடுவது கூத்தாடி யோகமென்பர்.சந்திரன் , சனி லக்னத்தில் கூடுவது தரித்திர யோகமென்பர்.மூவரும் பாவிகள் ! எப்படி நற்பலனை எதிர்பார்க்க முடியும் ? ஆட்சி , உச்சமாக இருந்தால் நிவாரணம் பெற வாய்ப்பு உண்டு !
சூரியன்+செவ்வாய்+ புதன் :
அதிக கஷ்டங்களை அனுபவிப்பவர் . எப்போதும் நோயினால் கஷ்டப்படுபவர் ; விரோதம் செய்பவர் ; செய்ந்நன்றி மறப்பவர் ; கபம் , வாயு உடையவர் .
விளக்கம் :
இந்த மூவரில் , புதன் ஒருவரே சுபர் ; மற்ற இருவரும் பாவிகள் ; எனவே , பாவ பலன்கள் கூறப்பட்டன . இவர்கள் ஆட்சி , உச்சமாக இருந்தால் , நற்பலன்கள் ஏற்பட இடமுண்டு !
சூரியன்+செவ்வாய்+ குரு:
எப்போதும் கர்வம் கொண்டவர் ; அதிக ஆங்காரம் உள்ளவர் ; குதிரை , வாகன விருத்தி கொண்டவர். மற்றவர்களுக்கு துன்பம் விளைவிப்பதில் ஆர்வம் கொண்டவர்.
விளக்கம் :
இந்த மூவரில் குரு மட்டும் சுபர் ; மற்ற இருவரும் பாவிகள் ; சூரியன் , செவ்வாய் , குரு ஆகிய மூவரும் நண்பர்கள்.எனவே , சம பலன்களாக நடைபெறும் என்பது முனிவரது கணிப்பு ! ஆனால் , இவர்கள் ஆட்சி , உச்சமாக இருந்தால் , நற்பலன்கள் ஏற்படுமென அறிக.
சூரியன்+செவ்வாய்+சுக்கிரன் :
நீதி நேர்மை தவறாதவர் ; பிரதானமாய் இருப்பவர்.எதிரியை வெல்லக் கூடியவர் . அதிக குணசாலி ; பந்துக்களுக்கு இனியவர்.
விளக்கம் :
ஜென்மத்தில் சூரியன் , சுக்கிரன் கூடியிருப்பது இராஜயோகமாகும் . செவ்வாய் , சுக்கிரன் கூடுவது பிருகு மங்கள யோகமாகும்.சுக்கிரன் ஒரு சுபர் லக்ன பலம் வேறு ! எனவே , சுப பலன்கள் கூறப்பட்டது.சூரியன் , செவ்வாய் தீக்கோட்கள் என்பதால் , சிறு சிறு தீய பலன்கள் ஏற்பட காரணமுண்டு !
சூரியன்+செவ்வாய்+ சனி :
துஷ்ட பத்தினியுடையவர் ; ஆயுள் இல்லாதவர் ; நோயினால் கஷ்டமடைபவர் . சத்தியம் தவறுபவர் ; மந்தப் புத்தியுடைவர் .
விளக்கம் : மேற்படி மூன்று கோட்களும் பாவிகள்.கேந்திரத்தில் நிற்பதால் , கடுமையான கேந்திர தோஷமுண்டாகும். சூரியன் , சனி கூடுவதால் , கூத்தாடி யோகம் ஏற்படுகிறது. எனவே , தீய பலன்கள் அபரிமிதமாக ஏற்படுமென அறிக . ஆட்சி , உச்சமாக இருந்தால் , சொற்ப நிவாரணம் பெற முடியும் !
சூரியன்+புதன்+குரு:
சமர்த்தர் ; நல்ல அபிப்பிராயம் உள்ளவர் . ஆரம்பித்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கக் கூடியவர்.அதிநட்புடையவர் ; யுத்தத்தில் வெற்றிவீரராகத் திகழ்வார் .
விளக்கம் :
குரு , புதன் ஆகிய இருவரும் சுபர்கள். சூரியன் ஒருவரே பாவி சூரியன் , புதன் ஆகிய இருவரும் ஜென்மத்தில் கூடி நிற்பது இராஜயோகமாகும்.எனவே , நற்பலன்கள் கூறப்பட்டது.பகை , நீசமாக இருந்தால் , அசுப பலன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு !
சூரியன்+ புதன்+ சுக்ரன் :
விநயமாக பேசக்கூடியவர் ; சூரர் ; பிராமணர்களில் தலைவராக திகழ்வார் . நல்ல யோகபலம் உள்ளவர்.
விளக்கம் :
புதனும் , சுக்கிரனும் சுபர்கள் ; சூரியன் ஒருவரே பாவி / சூரியன் , சூரியன் , புதன் சேர்க்கை இவ்விரண்டும் சுக்கிரன் சேர்க்கை இராஜயோகத்தைத் தரக்கூடியவை ! லக்ன பலம் வேறு ! எனவே , இவர் சுப பலன்களை அடைவதில் எவ்வித தடையும் ஏற்படாது.தடைகள் ஏற்பட்டாலும் உடனடியாக நிவர்த்தி ஆகி விடும்.
சூரியன்- புதன் – சனி :
தரித்திர யோகம் உள்ளவர் ; ரோகி ; துஷ்ட குணமுள்ளவர் ; நீதி , நேர்மை தவறுபவர் ; பந்துக்களாலும் , அந்நிய மனிதர்களாலும் கைவிடப்பட்டவர்.
விளக்கம் :
சூரியன் , சனி கூடுவது கூத்தாடி யோகமாகும்.பாவிகளின் பலம் அதிகமாக உள்ளது.கேந்திர தோஷம் வேறு உள்ளது . எனவே , பாவ பலன்கள் கூறப்பட்டது ! இவர்கள் ஆட்சி உச்சமாக இருந்தால் , ஷே தோஷம் விலகுமென கூறுக.
சூரியன் – குரு – சுக்ரன் :
மனிதர்களுள் மாணிக்கம் போன்றவர் . அநேக பிள்ளைகளைப் பெறுவதில் ஆர்வமுள்ளவர் . சத்ரு தொல்லைகளையும் , மற்ற தொல்லைகளையும் முறியடிக்கக் கூடியவர்.
விளக்கம் :
சூரியன் சுக்கிரன் சேர்க்கை இராஜயோக அமைப்பாகும்.மூவரில் இருவர் சுபராக உள்ளது சுப பலன்களை அதிகரிக்கச் செய்யும் ! சூரியன் , குரு சேர்க்கைகூட நல்லதுதான் ! எனவே , நற் பலன்கள் ஏற்பட அதிக காரணமுண்டு !
சூரியன் – குரு – சனி :
சத்ரு வாதை , வீண் செலவு நிறைந்தவர் . பாவம் செய்வதில் ஆர்வம் உள்ளவர் . அங்க ஹீனர் ; தேக பலம் இல்லாதவர் .
விளக்கம் : இந்த மூவரில் குரு ஒருவரே சுபர் ; மற்ற இருவரும் பாவிகள் ! சூரியன் , சனி சேர்க்கை மிகவும் கொடியதாகும் . குரு , சனி சேர்க்கையும் நல்லதல்ல . எனவே , அசுப பலன்கள் கூறப்பட்டது ! ஆட்சி , உச்சமாக இருந்தால் , தோஷ நிவாரணம் பெற வாய்ப்பு உண்டு !
சூரியன் – சுக்கிரன் – சனி :
அற்ப சௌக்கியம் உள்ளவர் ; குறைவான தனவிருத்தியுடைவர் . விசனம் கொண்டவர் . தேசாந்திர சஞ்சாரத்தில் விருப்பம் உள்ளவர் . ஹோமம் செய்து சாப்பிடுபவர்.
விளக்கம் :
சூரியன் சுக்கிரன் சேர்க்கை இராஜயோக அமைப்பாகும் . சூரியன் , சனி சேர்க்கை கொடியதாகும் . எனவே , அற்ப சௌக்கியம் ஏற்படுமென கூறப்பட்டது!ஆட்சி உச்சமாக இருந்தால் நல்ல சுப பலன்களை எதிர்பார்க்க முடியும்.