ராகு-கேது நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர பலன்கள்
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ராகு – கேது நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தை லக்கினமோ, சந்திரனோ, லக்கினத்தின் அதிபதியோ பெற்றால் ராகு கேதுவின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் ஜாதகருக்கு தடைப்படும் .
அவரவர் ஜாதகத்தில் ராகு – கேது நின்ற பாவம் எதுவோ அந்த பாவத்தின் அதிபதி ராகு – கேதுவின் எதிரிடை நட்சத்திரத்தை பெற்று இருப்பின் அந்த பாவத்திற்கு ராகு – கேதுவின் பலன்கள் கிடைக்காது
1. இதன் பலன்கள்:
விஷ சூன்யாதிகளால் ஏற்படும் பயம், தொழில் தடை, பாதிப்பு,உடல் நலம் கெடுதல், பிற மதத்தினரால் ஏற்படும் ஆபத்துக்கள், எதையும் துரிதமாக செயல்படுத்த முடியாமல் தவிப்பது , மறைவான செயல்களை செய்ய துண்டுவது
2. இதன் பலன்கள்:
நாஸ்தீக தன்மை , மதம் மாறுவது, ஆஸ்திகன் நாஸ்தீகனாக மாறுவது , வேண்டாத நண்பர்களின் உறவால் வரும் சங்கடங்கள் , போதை மருந்துகளால் வரும் விளைவுகள் கெட்ட செயல்களால் வரும் நோய்கள் கெட்ட தேவதை களால் ஆவி போன்றவைகளால் வரும் பயம்.
ராகு- கேது நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் 2-3-5-7-8-12 க்குரியவர்கள் இருந்தால் அந்த ஜாதகரை மிகவும் கீழ்த்தரமான பேச்சுக்களிலும்,செயல்களிலும் ஈடுபடுத்தி சமுதாயத்தை விட்டு விலக்கும்.
1,2,3க்குரிய எண்களின் பலன்கள் ராகு-கேது-வின் தசாபுத்தி அந்தர காலங்களிலும் அசுவினி,திருவாதிரை,மகம்,சுவாதி,மூலம்,சதயம் போன்ற நட்சத்திரம் வரும் நாட்களிலும் ஞாயிறு-திங்கள்-செவ்வாய் கிழமைகளிலும்,ராகு காலம் வரும் நேரங்களில் மேற் சொல்லப்பட்ட பலன்கள் நடைபெறும்.
ராகு -கேது நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர அட்டவணையை பெற கீழே சொடுக்கவும்.