பாபிகள் சேர்க்கை பெற்றால் மனைவி விஷம் குடிக்கலாம்.
சொறி சிரங்கு கண்நோய் சூரிய சுக்கிரன் சேர்க்கை பெற்று சுபர் பார்வை இல்லாவிட்டால் கண் கோளாறு ஏற்படும்.
குடும்பத்தில் இருந்து பிரிந்து வாழ்வார்.
தாய் தந்தை உறவு அவ்வளவாக இருக்காது.
விவாக காரியம் தடைபடும்.
களத்திர பீடை ( பெண் களுக்கு ) பரிகாரம் மூலம் ‘ நிவர்த்தி செய்யலாம்.
விவாகத்திற்கு பிறகு பிறந்த இடத்தை விட்டு சென்று விடுவான்.
ஒரு மனைவி இருக்கும் போதே மற்றொரு மனைவியும் ஏற்பட நியாயமுண்டு.
சுக்கிரன் பலம் இருந்தால் ஏகதாரம்.
படிப்பு குறைந்துவிடும்.
செல்வந்தராக இருக்க முடியாது.
பேசுவதிலும் சில சமயம் தடுமாற்றம் வரும்.
முகத்தில் வடு , மச்சம் போன்ற ஏதாவது அடையாளம் இருக்கும்.
முன் எச்சரிக்கை எதிலும் இருக்காது.
நிரம்ப சம்பாதித்து நிறைய செலவு செய்யும் மனிதன்.
25,26 , வயதில் ஒரு கண்டம் உண்டு.
சலிக்காது மணிக் கணக்கில் பேசுவதில் வல்லவர்.
வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்.
பெண்பித்துடையவன்.
கவிஞனாவான்.
ஜோதிடத்திலும் சிறந்து விளங்குவான் , பயம் அறியாதவன்.
அம்சத்தில் பாவ கிரக வீட்டில் சூரியன் இருந்தால் மனைவி – புத்திரன் இல்லாதவன். நேத்திர ரோகி.பிளவையால் உபத்திரவம். ராஜ தண்டனை , தனவிரயம் ஆகும்.
அம்சத்தில் பாபர் சேர்க்கை , பாபர்நடுவில் இருந்தால் 25 லிருந்து 35 வயதில் ராஜ தண்டனையால் உபத்திரம் திரவிய நாசம் ஏற்படும்.
சுய நவாம்சத்தில் இருந்தால் திரவியலாபம். பிதுராஜித தனம் உண்டு. சொத்துக்களை அரசாங்கம் கைப்பற்றலாம்.
இவர் சொத்து உலோக வகையாக இருக்கும். விநயமாக பேசுவான்.
சூரியனும் , புதனும் சேர்ந்தால் திக்கி திக்கி பேசும் தன்மையுடையவன்.
தலைவலி , குடும்பப் பிரிவு , கெட்ட சகவாகசம் , வீண் முயற்சிகளில் , பிறரால் ஏமாற்றப்படுதல் , கடன் சுமை , திருட்டு , கெட்ட கனவுகள் தோன்றும் , தன் வயதிற்கு மூத்த வயது ஆண் , பெண்களுடன் கட்டாய உடல் உறவு , முன் எச்சரிக்கை இல்லாமையால் தவறுக்கு ஆளாதல், அரசாங்கத்தால் ஸ்திர சொத்துக்கு பாதிப்பு , இடையூறுகள் வரலாம்.
சூரியன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்னம் சந்திரன் , தசா புத்தி அந்தர நாதன் இருப்பின் சொல்லப்பட்ட சுப பலன்கள் மாறி எதிரிடையான பலன்கள் நடக்கும். தீய பலன்கள் செயல்படாது.
சூரியன் நின்ற நட்சத்திரத்தின் சாதக நட்சத்திரத்தில் லக்னம் சந்திரன் , தசா புத்தி அந்தரன் இருப்பின் சுபபலன்கள் பலப்பட்டு சிறப்பு தரும். தீய பலன்கள் பலப்படும். சொல்லப்பட்ட பலன்கள் சூரியன் தசாபுத்தி-அந்தர காலங்களில் நடை முறைக்கு வரும் .