எந்த விஷயத்தை எடுத்துகொண்டாலும்,எத்தனை முறை தோல்விகண்டாலும் இறுதியில் பெறு முயற்சி எடுத்துக் காரியங்களில் வெற்றியைப் பெறுவான்.
விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்கள் புதிய கண்டு பிடிப்புகள் – கண்டுபிடிப்பர்.
பெரிய அரசியல்வாதி ஆகலாம்.
உடன் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படலாம்.
சூரிய தசா புக்திகளில் இவர்கள் தன் திறமையைக் காட்ட சந்தர்ப்பம் இருக்காது.
இவர்களுக்கு எந்தவித தோஷமும் இல்லை. வேலை செய்வதும் இல்லை.
பாவிகளுடன் சேர்ந்தால் இருதாய் உள்ளவன்.
உறவினர்களிடம் அன்பும் மரியாதையும் உள்ளவர்.
அதிகம் பொருள் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அடிக்கடி ஏற்படும்.
இரத்தின ஆபரணங்களை அணிவார்.அணிந்தால் நன்மை.
நல்லவனுக்கு நல்லவன் ; கெட்டவனுக்கு கெட்டவன்.
பாபர் மத்தியில் சுபருடன் கூடி இருந்தால் வாத ரோக பீடையும் , காமமும் – ரோகமும் ஜீவஹத்தி செய்தலும் உண்டாம்.
ஆட்சி பெற்றால் பிறந்த 5 – வது வயதில் நாற்கால் பிராணிகளால் பயம் – கண்டம் அடைவான்.
20 வயதிற்குமேல் மேலான சுகம் அடைவான்.
வேறு கிரந்தம் சொல்வது
17 வயதிலிருந்து 22 வயது வரையில் விரோதிகளால் பயம் உண்டாகும்.
47 லிருந்து 49 வயதிற்குள் பெருவியாதியால் கஷ்டம் உண்டாகும்.
56 வயதில் மத்திய ஆயுளில் மரண மேற்படும்.
புதனுடன் கூடினால் கல்விக்கு ஆபத்து.
பிதுரார்ஜிதத்தினால் ஜீவனம் உண்டாம்.
இங்கு சூரியன் – புதன் சேர்க்கை இருந்து இந்த இடத்திற்கு உரியவர் பாவருடன் கூடி இருந்தால் பேச்சு பலவிதமாக இருக்கும்.
பிறர் சொத்து,பிறர் பெண்களையும் அடைவான்.
மேற்படி கிரகம் பாப அம்சத்தில் இருந்தால் ஜாதகனுடைய பாட்டனுக்கு இப்பலன் பொருந்தும்.
கெட்டவர்கள் இவர்களுக்கு உதவிகள் செய்வார்கள்.
சகோதரர்கள் செல்வந்தர்களாக இருப்பார்கள்.
பாபர்களுடன் சேர்ந்தால் நஷ்டம் – துஷ்ட சகவாசம் உண்டு. சகாயம் கிட்டும் , தனவரவு , எதிரிகள் பலமிழத்தல் , கர்ப்பம் ஏற்படுதல் , தொழில் பலம் , லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு மிக விசேஷம்.
இதில் பிறந்து சூரியனை குரு பார்த்தால் நூதன தொழில் கண்டுபிடிப்பான்.
நிறைய பொருள் சேர்க்கும் வாய்ப்பு 20 வயதுக்கு மேல் மேலான சுகம் உண்டு.
9 – ல் எந்த கிரகம் இருப்பினும் இச்சூரியன் சுப பலனை தரார்.
சூரியன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்கினம் சந்திரன் , தசா புக்தி அந்தரநாதன் இருப்பின் சொல்லப்பட்ட சுப பலன்கள் மாறி எதிரிடையான பலன்கள் நடக்கும் . தீய பலன்கள் செயல்படாது.
சூரியன் நின்ற நட்சத்திரத்தின் சாதக நட்சத்திரத்தில் லக்னம் சந்திரன் , தசா புக்தி அந்தர நாதன் இருப்பின் சுப பலன் கள் பலப்பட்டு சிறப்பு தரும். தீய பலன்கள் பலப்படும். சொல்லப்பட்ட பலன்கள் சூரிய தசா புக்தி அந்தர காலங்களில் நடைமுறைக்கு வரும்.