Homeஜோதிட குறிப்புகள்லக்கினத்தில் சூரியன்

லக்கினத்தில் சூரியன்

லக்கினத்தில் சூரியன்

  • காரியக்கேடு , கைப்பொருள் சேதம் , மனவிரக்தி , கண் நோய் கோளாறு , தலைவலி , வீண் வகை , ஸ்தான பேதம் , அலைச்சல் , நண்பர் , விரோதம் , பதவி இழத்தல் அல்லது இறக்கம் , சீதபேதி முன்கோபம் , ஜுர ரோகம் , மனைவிக்குப் பீடை , பல் வலி , பொறுமையை இழக்க வேண்டிய நிலை ஏற்படுதல் , மனைவி மக்கள் மீது பற்று பாசம் குறைதல் , பூர்வீக சொத்து விரயம் , காம எண்ணம் அதிகரித்தல் , ஆகிய தீய பலன்களைத் தரும்.
  • தொழில் வகையில் நற்பெயர் கிட்டும் . அரசியல் துறையில் பிரகாசிக்கலாம்.
  • சூரியன் – ராகு சேர்ந்து இருப்பின் களத்திர தோஷம்.
  • 7 க்குரிய ஆதிபத்தியம் பெற்ற சூரியனாக இருப்பின் மனைவியை உபாதிப்பான் . துன்புறுத்துவான் , மாங்கல்யத்திற்கு முன்னரே கணவன் பந்தம் ஏற்படலாம்.
  • சூரியனுக்கு 12 – ல் சந்திரன் இருப்பின் , 5 , 9 வயதில் நீரினால் ( ஜலத்தால் ) ஆபத்து .
  • லக்கினத்தில் சூரியன் இருந்து தசா புத்தி நடந்தால் சரீரத்தில் உஷ்ணம் அதிகரித்தல் , தேககாந்தி குறைதல் , இருந்த இடம் விட்டு மாற்றம் ஏற்படும்.
  • சூரியன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்னம் சந்திரன் – தசாபுத்தி நாதன் இருப்பின் சுப பலன்கள் பலப்பட்டு சிறப்பு தரும். தீய பலன்கள் பலப்படும் . சொல்லப் பட்ட பலன்கள் தசா புத்தி அந்தர காலங்களில் நடைமுறைக்கு வரும்.
  • சூரியன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்னம் சந்திரன் , தசா புத்திநாதன் இருப்பின் சொல்லப்பட்ட சுயபலன்கள் மாறி எதிரிடையான பலன்கள் நடக்கும்.தீய பலன்கள் செயல்படாது.
  • சூரியன் நின்ற நட்சத்திரத்தின் சாதக நட்சத்திரத்தில் சந்திரன்-தசா புத்திநாதன் இருப்பின் சுப பலன்கள் பலப்பட்டு சிறப்பு தரும்.

    சொல்லப்பட்ட பலன்கள் சூரிய தசா புத்தி அந்தர காலங்களில் நடைமுறைக்கு வரும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!