லக்னத்தின் சிறப்பம்சங்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

லக்னத்தின் சிறப்பம்சங்கள்

💚பொதுவாக ஜென்ம லக்னத்தை எவ்வளவு கிரகங்கள் பார்வை செய்கின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு யோகமாகும். சுப கிரகங்கள் லக்னத்திலிருப்பது சிறப்பான அமைப்பாகும். பாவ கிரகங்கள் லக்னத்திலிருப்பது கிரகங்களின் இயல்பிற்கேற்ப சோதனையைத் தரும் எப்பொழுதுமே லக்னாதிபதி ஜாதகருக்கு அனுகூலத்தைத் தருவார்.

💚லக்னாதிபதி பாவியாக இருந்தாலும் அந்த ஜாதகருக்கு முழு சுபராகத்தான் விளங்குவார்.பொதுவாக சுபர் பார்வை நல்லது.பாவிகள் பார்வை கெடுதி.

💚சனி பார்வை கெடுதி என்றாலும் , சனி லக்னாதிபதியாக வரும்போது சனி பார்வை கெடுதியைத் தராமல் நன்மையைத் தரும். அதுதான் லக்னாதிபதியின் சிறப்பு.

💚ஜென்ம லக்னத்தைக்கொண்டு ஒருவரது தோற்றம் உடலமைப்பு , இயல்பு , சந்தோஷம் , பழக்க வழக்கங்கள் , தலை , தலைசார்ந்த பகுதி , உடம்பு , தாயின் தந்தை,தந்தையின் தாய் போன்றவற்றைப் பற்றி தெளிவாக அறியலாம்.

💚ஜென்ம லக்னாதிபதி வலுவாக அமையும்போது சிறப்பான உடலமைப்பு , நல்ல அழகான தோற்றம் , தைரியம் , துணிவு உண்டாகும்.

💚ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி ஆட்சி , உச்சம் பெற்றாலும் , கேந்திர திரிகோணத்தில் அமைந்திருந்தாலும் சிறப்பான வாழ்க்கை செல்வம் , செல்வாக்குடன் வாழும் யோகம் உண்டாகும்.

💚லக்னாதிபதி நீசம்பெற்றால் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும் . நீசம்பெற்ற லக்னாதிபதி நீசபங்க ராஜயோகம் பெற்றால் தடைக்குப் பின்பு நல்ல வளர்ச்சி ஏற்படும்.

💚லக்னாதிபதி 6 , 8 , 12 – ல் மறைந்திருந்தாலும் , வக்ரம்பெற்றாலும் வாழ்வில் பல்வேறு தடைகளை சந்திக்க நேரிடும்.

💚ஜென்ம லக்னத்திற்கு 6 , 7 , 8 – ல் தொடர்ந்து சுப கிரகங்கள் அமைவதும் அற்புதமான அமைப்பாகும். இதன்மூலம் பலமான லக்னாதிபதி யோகம் உண்டாகும். குறிப்பாக 6 , 7 , 8 – ல குரு , புதன் , சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் அமையப்பெற்றால்ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டாகும்.

💚குறிப்பாக 6,7 , 8 – ல் தொடர்ந்து சுபகிரகங்கள் அமைந்தால் அனுகூலப் பலனை உண்டாக்கும்.

💚ஜென்ம லக்னத்தில் ஒரு சுபகிரகம் பலமாக அமையப்பெற்றால். நல்ல உடலமைப்பு இருக்கும்.பாவகிரகம் பலமாக அமையப்பெற்றால் கெடுதிகள் ஏற்படும். குறிப்பாக லக்னத்தின் முற்பாதியில் அமைந்தால் தலையில் இடது பாகத்தில் பாதிப்பும் , பிற்பாதியில் பாவகிரகம் பலமாக அமைந்தால் தலையின் வலது பாகத்தில் பாதிப்பும் உண்டாகும் .

💚லக்னத்தில் பாவகிரதங்கள் அமையப்பெற்றால் தலையில் ஒரு தழும்பு ஏற்படும்.

💚ஜென்ம லக்னத்தில் சந்திரன் பலமாக அமையப்பெற்றால் வசீகரமான உடலமைப்பு , அழகான தோற்றம் இருக்கும் லக்னத்தில் அமையும் சந்திரன் தேய்பிறைச் சந்திரனாக இருந்தாலோ , சர்ப்ப கிரகத் தொடர்போடு இருந்தாலோ சற்று குழப்பவாதியாகவும் , நீர் தொடர்புடைய உடம்பு பாதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும்.

லக்னத்தின் சிறப்பம்சங்கள்

💚லக்னாதிபதி செவ்வாயாக இருந்தாலும் , லக்னத்தில் செவ்வாய் வலுப்பெற்றாலும் என்றும் இளைஞராக- அதாவது முதுமையிலி லும் இளமைத் தோற்றம் இருக்கும் தைரியம் , துணிவு , சிறப்பான உடலமைப்பு ஏற்படும்.

💚லக்னாதிபதி புதனாக இருந்தாலும் , லக்னத்தில் புதன் வலுப்பெற்றாலும் குழந்தைத்தனம் அதிகமிருக்கும். நல்ல அறிவாளியாக இருப்பார்கள். பலருக்கு வழிகாட்டக்கூடிய திறனிருக்கும்.

💚குரு லக்னத்தில் அமையப்பெற்றாலும் , லக்னாதிபதி குருவாக இருந்து வலுப்பெற்றாலும் நல்ல உடலமைப்பும் , மற்றவர்களிடம் பழகும்போது இனிமையாகப் பேசும் சுபாவமும் , உதவிசெய்யும் பண்பும் , ஆன்மிக தெய்வீக எண்ணமும் இருக்கும்.

💚சுக்கிரன் லக்னத்தில் அமையப்பெற்றால் ஆடம்பரப் பிரியராக இருப்பார். கவர்ச்சியான உடமைப்பும் , சிறப்பான பொருளாதார நிலையும் இருக்கும் .

💚ஜென்ம லக்னத்தில் சூரியன் , செவ்வாய் அமையப்பெற்றால் தைரியம் , துணிவு , மற்றவர்களை அதிகாரம் செய்யும் திறமை , தலைமைப் பண்பு கொண்டவராக இருப்பார்கள்.

💚லக்னத்தில் செவ்வாய் , சனி அமையப்பெற்றால் முரட்டுத் தனம் , பிடிவாதகுணம் இருக்கும் . மற்றவர்களை அதிகாரம் செய்யும் அமைப்பு , உடம்பில் ஏதாவதொரு இடத்தில் சிவப்புநிறத் தழும்பு உண்டாகும்.

💚சனி , ராகு லக்னத்தில் அமையப்பெற்றால் முரட்டுத்தனம் , பிடிவாதகுணம் , அசட்டு தைரியம் , மூர்க்க குணம் கொண்டவராக இருப்பார்கள் . கருப்புநிறத் தழும்பு தலை பாகத்தில் இருக்கும் .

Leave a Comment

error: Content is protected !!