வீடு கட்ட சிறந்த நாள் எது?
ஒவ்வொருவரும் தனக்கு சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். உழைத்து பணம் சேமித்து ஒரு வீடு கட்ட தொடங்கும்போது ஜோதிடரிடம் சென்று நல்ல நாள் பார்த்து, பண்டிதர்களை கொண்டு பூமி பூஜை செய்து, வாஸ்து நாள் பார்த்து வீடு கட்ட தொடங்குகின்றனர். இவ்வாறு தொடங்குபவர்களில் சிலர் சரியாக வீட்டை கட்டி முடித்து விடுகின்றனர். சிலர் முழுமையாக கட்டி முடிக்க முடியாமலும், சிலர் கட்டிய வீட்டை விற்கவும் நேர்கிறது. இன்னும் சிலர் வீடு கட்டும்போது விபத்துக்கள் நேரிடுவது உள்ளிட்ட பல சிக்கல்களை சந்திக்கிறார்கள்.
வீடு கட்டத் தொடங்கிய முகூர்த்த நாளன்று கோட்சாரத்தில் நிலவிய கிரக நிலைகளே இதற்கு காரணமாகும்.வீடு, கட்டடம் ஆகியவற்றை குறிக்கும் உதாரண கிரகம் சுக்கிரன். வீடு கட்ட ஆரம்பிக்கும் முகூர்த்த நாளன்று கோட்சாரத்தில் சுக்கிரன் இருக்கும் நிலையை அறிந்து தொடங்க வேண்டும்.
அந்த நாளில் சுக்கிரனுக்கு 1-5-9,3-7-11,2-12ஆகிய ராசிகளில் குரு இருந்தால் எவ்விதமான இடையூறுகள், தடைகள் இல்லாமல் நினைத்த படி வீட்டை கட்டி முடித்து விடலாம். தோஷ பாதிப்பும் இல்லாத வீடாக அமைந்து விடும்.
அந்த நாளில் சுக்கிரனுக்கு 1-5-9,2 ஆகிய ராசிகளில் கேது இருந்தால் வீடு கட்ட பணத்தட்டுப்பாடு, கடன், தடைகள் போன்றவை ஏற்பட்டு நினைத்தபடி வீடு கட்ட முடியாமல் தாமதமாகும்.
சுக்கிரனுக்கு 1-5-9,2 ஆகிய ராசிகளில் ராகு இருந்தால் வீட்டின் உரிமையாளருக்கு நோய் தாக்கம் அல்லது கட்டடத்திற்கு விபத்து உள்ளிட்ட சிக்கல்கள் நேரும்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …