குரு பெயர்ச்சி பலன்கள் (Guru Peyarchi Palangal) :மேஷம்
சித்திரை மாதம் 9ம் தேதி (22.04.2023) சனிக்கிழமை, உதயாதி நாழிகை 43:30 அதாவது இரவு 11: 27 மணிக்கு ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம் மீன ராசியில் இருந்து அஸ்வினி நட்சத்திரம் 1ம் பாதம் மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார்.
மேஷ ராசிக்கு 9ஆம் இடமான தனுசுவுக்கும் 12-ஆம் இடமான மீனத்துக்கும் உரியவர் குரு பகவான். இதுவரை 12ம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் தற்போது உங்கள் ஜென்ம ராசியான மேஷத்திற்கு வருவது அவரது விசேஷப் பார்வைகள் முறையே உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் களத்திர ஸ்தானம் பித்ரு ஸ்தானங்களில் பதியும்.
உங்கள் உழைப்புக்கு உரிய உயர்வுகள் கிடைக்கக்கூடிய காலகட்டமாக வரும் காலகட்டம் இருக்கும் பணியிடத்தில் இதுவரையில் நிலவி வந்த குழப்பமான சூழ்நிலைகள் விலகி அனுகூலமான காற்று வீசத் தொடங்கும் மேலதிகாரிகள் பாராட்டும் அதன் மூலமாக ஆதாயமும் கிடைக்கும் எந்த எந்த செயல் செய்தாலும் சரியான திட்டமிடலும் நேரம் தவறாமையும் இருந்தால் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி ஊதிய உயர்வுகள் கிடைக்கும்.
சோம்பலை விரட்டினாலே சோதனைகளும் தானாகவே விலகி விடும் சிலர் முதன்முறையாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உருவாகும்.
குடும்பத்தில் குதூகலம் இடம்பிடிக்கும் பிரிந்திருந்த உறவுகள் திரும்ப வருவார்கள் குதர்க்கமும் குத்திக் காட்டலும் நீங்கள் அறவே தவிர்த்தால் அன்பும் அரவணைப்பும் நிலைக்கும் உங்கள் வாழ்க்கை துணை உடன் அன்னியோன்யம் அதிகரிக்கும் இதுவரை சுப காரியங்களில் ஏற்பட்டு வந்த தடைகள் விலகும்.
திருமணம் நடக்காமல் தடைபட்டுக் கொண்டிருந்த மேஷ ராசி அன்பர்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும் குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும். ஆடை ஆபரணம் சேரும் அசையா சொத்து வாங்கும் சமயங்களில் மிக கவனமாக இருத்தல் அவசியம் எந்த சமயத்திலும் குடும்ப ரகசியம் எதையும் பொதுவெளியில் பேச வேண்டாம்.
செய்யும் தொழிலில் படிப்படியாக வளர்ச்சி ஏற்படும் புதிய தொழில் அமைப்புகளில் பிறரை நம்பாமல் உங்களுடைய முழுமையான முயற்சிகளாலேயே முன்னேற வேண்டி இருக்கும். அரசு அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு நிலைக்கும் அதே சமயம் துஷ்ட சவகாசம் கிட்ட நெருங்காமல் பார்த்துக் கொண்டால் இஷ்டம் எல்லாம் ஈடேறும். கோப்புகளில் கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருத்தல் அவசியம்.
கலைத்துறையினருக்கு திறமைக்கு ஏற்ப கணிசமான வாய்ப்புகள் வரும் மாணவர்கள் சோம்பலை விரட்டி அன்றாட பாடங்களை அன்றே படிப்பது நல்லது. வெளிநாட்டு கல்வி,கல்வி உதவித்தொகைகள் பெற பெற்றோர்கள் வழிகாட்டலை அவசியம் கேளுங்கள்.
வாகனத்தில் சிறு பழுது ஏற்பட்டாலும் உடனே சரி செய்வது நல்லது கழிவு உறுப்புகள் அடிவயிறு ஜீரண உறுப்புகள் சர்க்கரை ரத்த அழுத்தம் இடது பக்க உபாதைகளில் உடனடியாக சிகிச்சை அவசியம்.
பலன்தரும் பரிகாரம்
குலதெய்வ வழிபாடு நன்மை பயக்கும் முடிந்தால் மாதம் ஒருமுறை குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது. ஒருமுறை திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் இந்த குரு பெயர்ச்சி சிறப்பான பலன்களை தரும்.















