வைரம்
மேஷம் இராசி என்றால் பவழம், ரிஷப இராசி என்றால் வைரம் என்று அணியக் கூடாது. கிரகங்களின் இட அமைப்பைப் பொறுத்தே கல் அணிய வேண்டும். வைரம் பலபேருக்கும் ஒவ்வாததாய் இருக்கும். “காதில் வைரத்தோடு இருக்கலாம். மனத்தில் வைரத்தோடு இருக்கக் கூடாது” என்பது பழமொழி.
வைரம் என்றால் நகையை மட்டுமின்றிப் பகையையும் குறிக்கும். புகழ்பெற்ற கோகினூர் வைரத்தால் எவ்வளவு கஷ்டம் வந்தது பார்த்தீர்களா? வைரம் பயன்படுத்தும்போது கவனமுடன் இருக்க வேண்டும்.
பொதுவாய் உடை,வங்கித் தொழில், நாடகத் தொழில் (ஃபைன் ஆரிட்ஸ்) நடத்துபவர்கள் வைரம் அணியலாம். நிர்வாகப் படிப்பு படிப்பவர்கள் அணியலாம். நல்ல வெற்றி உண்டாகும். இதை அணிவதால் பட்டு, பீதாம்பரம் போன்ற செல்வங்களைப் பெற முடியும்.
பரணி நட்சத்திரக்காரர்கள் அணியலாம் வைரம் அணிவதால் சீனா, ஜெர்மன் மொழிப் புலமையும் தெலுங்கு மொழிப் புலமையும் உண்டாகும்.
உரவியாபாரிகள், விவசாயிகள், வாழை வாணிகர்கள் அணியலாம். மீனத்தில் சுக்கிரன் இருக்கப்பட்டவர்கள் அணியலாம்.
கன்னி இராசியில் சுக்கிரன் இருக்கப்பட்ட ஜாதகர்கள் அணியக்கூடாது. இதை அணிவதால் தொண்டைக் கட்டு குணமாகும்.
சிம்ம இராசிக்காரர்கள் இதை அணியக் கூடாது.
மாமிசம்,விறகு வியாபாரிகள் அணியக்கூடாது.
வண்டி வாகனம், சினிமாத் தொழில் குறிப்பாய் வில்லன் நடிகர்கள் அணியலாம்.
ஜாதகத்தில் சுக்கிரனுடன், இராகு அல்லது கேது சேர்ந்திருந்தால் அணியக் கூடாது.
சுக்கிரன், செவ்வாய் ஜாதகத்தில் சேர்ந்திருந்தால் வைரம் அணியலாம்.