Rasi Palan Today-01.08.2021

Rasi Palan Today-01.08.2021

மேஷம்-Mesham 

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந் தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்தஒருவர் உங்களை தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ் கௌரவம் உயரும் நாள்.

ரிஷபம்-Rishabam 

சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். சிலருக்கு திடீர்ப் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரிடலாம். அலுவலகத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். மொத்தத்தில் எதையும் சமாளித்து ஏற்றம் பெறும் நாள். இந்நாள்…

மிதுனம்-Mithunam 

உடல் ஆரோக்கியம் சிலருக்கு மேம்படும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பும், அதனால் அனுகூலமும் சிலருக்கு உண்டாகும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி சிலருக்குக் கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். லாபமும் அதிகரிக்கும்.

Rasi Palan Today
ராசி பலன் 01.08.2021

கடகம்-Kadagam 

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்-Simmam 

அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி -Kanni

அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.

துலாம்-Thulam 

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் நன்மையும் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் சிலருக்குத் தேடி வரும். அதே சமயத்தில் உத்யோக ரீதியாக எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க மேலும் சில நாள் காத்திருக்க வேண்டி இருக்கும். மொத்தத்தில் பொறுப்புகள் கூடும் நாள்.

Rasi Palan Today
ராசி பலன் 01.08.2021

விருச்சிகம்-Viruchigam 

திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

தனுசு-Thanusu 

கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் விஐபிகள்வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.

மகரம்-Magaram 

உறவினர் மத்தியில் நற்பெயர் காண்பீர்கள். தொழிலில் வளர்ச்சிப் பணி இனிதாக நிறைவேறும். சிலருக்கு எதிர் காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். பெரும்பாலும் குடும்பத்தின் தேவை குறைவின்றி பூர்த்தியாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி சிலருக்கு வந்து சேரும். பெண்கள் குடும்ப நலனில் கவனம் செலுத்துவர்.

கும்பம்-Kumabm 

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் தலை தூக்கலாம். கணவன், மனைவிக் கிடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம். பொறுமையை கடைப்பிடித்து வெற்றி பெற வேண்டிய நாள். குல தெய்வ வழிபாடு நன்மை தரும்.

மீனம்-Meenam 

இன்று சிலருக்கு கோபம், படபடப்பு வந்து போகும். ராம நாமம் சொல்லி வாருங்கள். சிறு பிரச்சனை கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் அதனால் அமைதியாகவும், பொறுமையாகவும் இருந்து வெற்றி காண வேண்டிய நாளாக இந்த நாள் உள்ளது. கணவன் – மனைவி இடையே கூட அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள் இந்த நாள். நிதானத்துடன் செயல் பட்டு காரியம் சாதிக்க வேண்டிய நாள்.

பஞ்சாங்க குறிப்புகள் மற்றும் கிரக நிலைகள் -01.08.2021

தமிழ் தேதி /கிழமை/வருடம் ஆடி -16/ஞாயிறு /5123 பிலவ
ஆங்கில நாள் 01.08.2021
இன்றய சிறப்பு உலக தாய்ப்பால் தினம்
சூரியன் உதயம் 05.53AM
சூரியன் அஸ்தமனம் 06.37PM
ராகு காலம் 4.30pm -6.00pm
நாள் கீழ் நோக்கு நாள்
குறிப்புகள்
எம கண்டம் 12.00pm -1.30pm
நல்ல நேரம் காலை8.00-9.00|மாலை 3.15-4.15
திதி நவமி
நட்சத்திரம்பரணி
சந்திராஷ்டமம் கன்னி ராசி
யோகம் சித்த யோகம்
சூலம் மேற்கு
பரிகாரம் வெல்லம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!