வைகாசி விசாகம் 2023

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

வைகாசி விசாகம்

முருகனுக்கு விசாகன் என்ற திருப்பெயரும் உண்டு. விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பதால் இந்தத் திருநாமம் வந்தது என்பார்கள். வேறொரு விதமாகவும் விளக்கம் தருவார்கள். பெரியோர்கள். ‘சாகன் என்றால் சஞ்சரிப்பவர்; வி-பறவை. ஆக, மயில் மீதேறி சஞ்சரிக்கும் முருகப்பெருமானை விசாகன் என்று போற்றுகிறோம் என்பது ஆன்றோர் வாக்கு.

வைகாசி விசாகம் – சிறப்பு

நிதிகளில் சஷ்டி, வார நாள்களில் செல்வாய், நட்சத்திரங்களில் விசாகம், கிருத்திகை, பூசம், உத்திரம் ஆகியவை முருகப்பெருமானுக்கு உகந்தவை. இந்த வகையில் ஆடி மற்றும் தை கிருத்திகை, தைப்பூசம், பெரிய கார்த்திகை, ஐப்பசி சஷ்டிப் பெருவிழா, பங்குனி உத்திரம் ஆகிய திருநாள்களில் முருகப்பெருமானுக்குச் சிறப்பு வழிபாடுகளும் விழாக்களும் நடைபெறும். இப்படியான புண்ணிய தினங்களில் முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசளகம் தனிச் சிறப்பு பெறுகிறது. வைகாசி மாதத்தில் பௌர்ணமியுடன் சேர்ந்து வரும் விசாக நட்சத்திர நாளையே வைகாசி விசாகமாகக் கொண்டாடுகிறோம்.

வைகாசி விசாகம் 2023

ஜோதிட சாஸ்திரப்படி சந்திரனை மனோகார்கள் என்பார்கள். ஆக, சந்திரன் பூரண ஆற்றனுடன் பொவியும் பௌர்ணமித் திருநாளில் செய்யும் வழிபாடுகளால் மனத்தின் சஞ்சலங்கள் யாவும் நீங்கும் மமைது செம்மையாகும். வைகாசி விசளாகத் திருநாளில் முருகனின் திருவருளும் ஒருங்கே கிடைக்கும் என்பதால், நம் அல்லல்கள் அனைத்தும் நீங்கி வாழ்க்கை செம்மையுறும், மனக் கவலைகள் நீங்கி புத்தொளி கிடைக்கும். என்பது நிச்சயம்.

வைகாசி விசாகம் வழிபாட்டு முறை!

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்தும் முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். இந்த நாளில் முருகப்பெருமானின் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடுவது மிகச்சிறப்பு. இயலாதவர்கள், தங்கள் வீட்டியிலேயே கந்தப் பெருமானை உரிய துதிப்பாடல்கள் கூறி வழிபடலாம்.

வைகாசி விசாகம் 2023

விசாக தினத்தின் காலையிலேயே நீராடி திருநீறு அணிந்து முருகப்பெருமானைத் துதிக்க வேண்டும். முருகனின் திருவுருவச் சிலை அல்லது வேல் இருப்பின் பாலபிஷேகம் செய்து பூக்களால் அலங்கரிக்கவேண்டும். திருவுருவப்படம் இருந்தால், பால்வைத்து நைவேத்தியம் செய்யலாம். அத்துடன் சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, திருப்புகழ், கந்த சஷ்டிக் கவசம், கந்தகுரு கவசம், குமாரஸ்தவம் போன்ற தோத்திரங்களைப் பாராயணம் செய்து தூப தீப ஆராதனைகள் செய்து பூஜையை நிறைவுசெய்யலாம். வைகாசி விசாகத்தில் முருகனை வழிபட்டு வேண்டிக்கொள்ள, நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்; தொழிலில் முன்னேற்றம், பணியில் பதவி உயர்வு கிடைக்கும். முருகனருளால் கல்யாண வரம், குழந்தைப் பேறு வாய்க்கும்.

வைகாசி விசாகத்தின் சிறப்புகள்

வைகாசி விசாகம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். ஏனென்றால், அன்றைய தினம்தான் அவர் அவதரித்தார்.

வைகாசி என்ற பெயரில் வட இந்திய புண்ணிய தலமான காசி பெயரும் வருவதால், அந்த மாதத்தில் காசிக்கு சென்று வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. காசிக்கு சென்று கங்கை யில் புனித நீராட முடியாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு.

வள்ளலார் ராமலிங்க அடிகளார், வடலூரில் சத்தியஞான சபை என்னும் அமைப்பை வைகாசி மாதத்தில்தான் தோற்றுவித்தார்.

வைகாசி பவுர்ணமி அன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்மரக கற்களால் ஆன மாலை அணிவித்து, எள் சாதம் நிவேதனம் செய்து வழிபட் டால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

வைகாசி விசாகம் 2023

சென்னை திருமுல்லை வாயிலில் உள்ள மாசிலாமணிஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும், லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அம்மன் கோவில்களில் இந்த வைகாசி மாதத்தில் தான் கொடை விழாக்கள் நடைபெறுகின்றன.

இஷ்வாகு வம்சத்திற்குரிய நட்சத்திரமாக இருப்பதால் விசாகம் அமைந்துள்ள கோள் நிலையில் ராமராவண யுத்தம் நடந்ததாக ராமாயணம் கூறுகிறது.

மணிபல்லவத் தீவில் தீவதிலகை என்ற காவல் தெய்வ தோன்றி மணிமேகலையிடம் வைகாசி பவுர்ணமி அன்று கோமுகி என்ற பொய்கையில் அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி என்னும் அட்சயப் பாத்திரம் வெளிவரும். உலக மக்களின் பசிப்பிணியை போக்கு வதற்காகவே இப்படிப்பட்ட அட்சய பாத்திரத்தை உனக்கு வழங்குகிறேன் என்று கூறி மறைந்தது. இதன்படியே மணிமேகலையும் புத்தர் பிறந்த வைகாசி முழு நிலவில் கோமுகி பொய்கையில் இருந்து வெளிவந்த அட்சய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு புகார் நகருக்கு திரும்பினாள்.

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் அடுத்துள்ள பைரோத் நகரின் எல்லையோரத்தில் ஓடும் பான் கங்கா நதிக்கரையில் அமைந்துள்ள ராதாகிருஷ்ணன் கோவில். இங்கு ஆண்டுதோறும் வைசாக பௌர்ணமி நாளில் பான்கா விழா நடக்கிறது. இந்த நாளில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பான் கங்கா நதியின் நீராடி பூஜைகளும் யாகங்களும் செய்து ராதாகிருஷ்ணனை வழிபடுவார்கள்.

தெய்வங்கள் மற்றும் மகான்களின் அவதாரத் தொடர்புடன் கூடிய நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றன. அவ்வகையில் வைகாசி விசாகம் பலராலும் பல தெய்வங்களுக்கு உரியதாகவும் கொண்டாடப்படுகிறது.

பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை போன்ற முருகன் திருத்தலங்களில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

விசுவாசம் குருவிற்குரிய நட்சத்திரமாவதால் குருவிற்கு உரிய தளமான திருச்செந்தூரில் வைகாசி விசாக பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

தெற்கு திசையின் அதிபதியும் மரண தேவதையுமான எமதர்மராஜனுக்குரியது வைகாசி விசாகம். அன்று எமதர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

திருமணப்பாடு திருத்தளத்தில் மழை வேண்டிய சிவபெருமான் திரு நடனம் புரிந்த நன்னாள் வைகாசி விசாகம் ஆகும்.

பஞ்சபாண்டவரில் ஒருவரான அர்ஜுனனுக்கு இறைவன் வாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில் தான். இந்நாள் திருவேட்கலம் எனும் திருத்தளத்தில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

ஆந்திர மாநிலம் சிம்மசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லக்ஷ்மி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தன காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகநாளில் சந்தன பூச்ச கலைவார்கள் மூல விக்கிரகத்தின் இயற்கை தோற்றப்பொலிவு அன்று தரிசனம் ஆகும். பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தன பூச்சு செய்வார்கள்.

கன்னியாகுமரி அம்மனுக்கு ஆராட்டு விழா வைகாசி விசாக நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக சொல்லப்படும் காஞ்சி கருட சேவை வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெற்று வருகிறது.

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தி அடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்பூரில் உள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடைபெற்று வருகிறது.

இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.

Leave a Comment

error: Content is protected !!