ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 – மகரம்
ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார்.
சனி பகவானை ஆட்சி வீடாக கொண்ட மகர ராசி அன்பர்களே !!!
3-இல் ராகு- தைரிய வீரிய ராகு
இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்திருந்த ராகு பகவான், இப்போது ராசிக்கு 3-ம் வீட்டிற்கு வந்து அமர்கிறார்.
எதிலும் வெற்றி உண்டாகும். முயற்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் யாவும் நீங்கும். கழுத்தை நெருக்கிப் பிடித்த கடன் தொல்லைகளை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.
கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிட்டும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு தள்ளிப்போய்க் கொண்டிருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு கூடி வரும்.
தாயாருக்கு இருந்து வந்த சர்க்கரை நோய், மூட்டுவலி எல்லாம் குறையும் வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். பாதியிலேயே நின்றுபோன வீடு கட்டும் பணியை முடிக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும்.
வி.ஐ.பிகள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் என உங்களின் நட்பு வட்டம் விரிவடையும். வெளியூர்ப் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
பெரிய நோய் இருக்குமோ என்ற பயம், கனவுத் தொல்லை, தூக்கமின்மை எல்லாம் நீங்கும்.
9 இல் -கேது -பாக்கிய கேது
இதுவரையில் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் அமர்ந்திருந்த கேதுபாவான். எந்த வேலையையும் முழுமையாகச் செய்யவிடாமல் உங்களை தந்தளிக்க வைத்தார். உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றங்களையும், அவமானங்களையும் சந்திக்க வைத்திருப்பார்.
இப்போது அவர், ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்து அமர்கிறார். ஆகவே, வேலைச்சுமை குறையும் குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் குழப்பங்கள் மாறும். மூத்த சகோதார் பக்கபலமாக இருப்பார்.
1.5.24 முதல் கேதுவை குரு பார்ப்பதால் சகோதரர்களின் கல்பாணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். உத்தியோகத்தில் நெடுநாளாக எதிர்பார்த்த சம்பள உயர்வும், பதவி உயர்வும் இப்போது கிட்டும்.
ரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்றாலும் 9-ம் இடத்தில் கேது அமர்வதால், உங்கள் தந்தையாரின் உடல்நிலை சற்று பாதிக்கப்படலாம். அவருடன் சின்னச் சின்ன கருத்துமோதல்கள் வந்துபோகும். கௌரவச் செலவுகள் அதிகரிக்கும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.
பலன் தரும் பரிகாரம்
அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று வில்வத்தால் அர்ச்சனை செய்து சிவ வழிபாடு செய்து வாருங்கள்.
பிரதோஷ காலத்தில் நந்தி பகவானுக்குக் காப்பரிசி சமர்ப்பிக்கலாம்.
வாய்ப்பு கிடைக்கும் போது சிவாலய உழவாரப் பணிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்ளுங்கள்; அதீத நன்மைகள் உண்டாகும்.
மேலும், நாகராஜன் பூஜித்து பேறுபெற்ற ஊர். நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள நாகூர். இங்கே அருளும் ஸ்ரீநாகவல்லி சமேத ஸ்ரீநாகநாதரை வழிபடுங்கள். ஏழை நோயாளிகளுக்கு உதவுங்கள்; தொட்டது துலங்கும்.