ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 – மீனம்
ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார்.
குரு பகவானை ஆட்சி வீடாக கொண்ட மீன ராசி அன்பர்களே !!!
1-இல் ராகு -ஜென்ம ராகு
ராகு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமாகிறார். ஓரளவு பிரச்னைகள் குறையும் இடம், பொருள் ஏவல் அறிந்து பேசும் வித்தையை கற்றுக்கொள்வீர்கள், சமயோஜித பத்தியுடனும் நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். செலவுகளை இனி கட்டுப்படுத்துவீர்கள்.
அதேநேரம் ஆரோக்கியத்திக் கொஞ்சம் அக்கறை காட்டவேண்டும் யூரினரி இன்ஃபெக்சன், ஹார்மோன் கோளாறு, நீரிழிவு நோய் மற்றும் தலை, தோள்பட்டையில் வலி வந்து போகும் மருத்துவரின் ஆலோசனையின்படி நடந்து கொள்ளுங்கள்.
ராகுவின் நிலையால், இந்தக் காலகட்டத்தில் முன்கோபம் அதிகரிக்கும். சின்னச் சின்ன வேலைகளும் சிக்கலாகி முடியும் என்றாலும் உங்கள் ராசி நாதனான குருவுக்கு ராகு நட்புக் கிரகமாக வருவதால், அனைத்துப் பிரச்னை களிலிருந்தும் நூலிழையில் காப்பாற்றப்படுவீர்கள் வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை, விபத்துகள் நிகழக் கூடும்.
7-இல் கேது -களத்திர கேது
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்து கொண்டு ஏகப்பட்ட தொந்தரவுகளையும், மன உளைச்சல்களையும் கொடுத்து வந்த கேது, ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். இனி வீண பயம் விலகும். பிரச்னைகளை நேருக்குநேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.
தம்பதிக்கு இடையே பிரசனைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம், விட்டுக் கொடுத்து போங்கள், தேவையில்லாத பயணங்கள் இனி இருக்காது. பலரையும் நம்பி ஏமாந்த நிலை மாறும். பிரபலங்களின் அறிமுகமும் கிடைக்கும். அவர்களால் சிற்சில தருணங்களில் ஆதாயம் கிடைக்கும் நன்றி மறந்தவர்களை நினைத்து அவ்வப்போது வருத்தப்படுவீர்கள்.
சொத்துப் பிரச்னை, பங்காளிச் சண்டைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டாம். இயன்றவரையிலும் பேசித் தீர்க்கப் பாருங்கள். அரசுக் காரியங் களில் கவனமாக இருங்கள். குடும்ப விஷயங்களை வெளியே யாரிடமும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்.
பலன் தரும் பரிகாரம்
பாம்பணையில் பள்ளி கொண்டிருக் கும் பெருமாளை சனிக்கிழமைகளில் தரிசித்து, துளசி சார்த்தி வணங்கி வழிபட்டு வாருங்கள்.
வீட்டில் அனுதினமும் விளக்கேற்றி வைத்து துர்கா ஸ்தோத்திரம் படித்து வழிபடுங்கள்.