Homeஆன்மிக தகவல்மகாளய அமாவாசையின் சிறப்புகள் என்ன ?முன்னோர்கள் வழிபாடு எப்படி செய்வது ?என்னென்ன பொருட்களை தானம் செய்ய...

மகாளய அமாவாசையின் சிறப்புகள் என்ன ?முன்னோர்கள் வழிபாடு எப்படி செய்வது ?என்னென்ன பொருட்களை தானம் செய்ய வேண்டும்?

மகாளய அமாவாசை

மகாளய அமாவாசையில் முன்னோர்கள் வழிபாடு

ஒவ்வொரு வருடமும், மகாளய அமாவாசை நாளில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் அளித்து வழிபடுவது வழக்கம்.

தர்ப்பணம் செய்ய இருப்பவர்கள் புரோகிதர்களை அழைத்து அல்லது புரோகிதர்களின் ஆலோசனைபடி அல்லது அவரவர்களின் குடும்ப வழக்கப்படி வீட்டில் அல்லது பக்கத்தில் இருக்கும் நதிக்கரைகளுக்கு சென்று முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டினை மேற்கொள்ளலாம். முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் விட்டு வேண்டி கொள்வது அவசியம்.

அன்னம்,உடை, பசு, செருப்பு, குடை ஆகியவைகளை தானமாக கொடுக்கலாம். இதில் உங்களுக்கு எந்த தானத்தை செய்ய முடியுமோ அந்த தானத்தை செய்யுங்கள். நம்முடைய முன்னோர்கள் அதனை ஏற்றுக்கொண்டு உங்களுக்கு ஆசி கொடுப்பார்கள்.

மகாளய அமாவாசை

வீட்டில் செய்ய வேண்டியவை

தரப்பணம் செய்த பின் வீட்டிற்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, துளசி மாலை சாற்ற வேண்டும்.

முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும்.

முன்னோர்களுக்கு பிடித்த இனிப்பு, காரம் மற்றும் பழ வகைகளை படைக்க வேண்டும்.

கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே ஊறவைத்து பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும்.

வீட்டில் தெய்வங்கள் சம்பந்தமான பூஜைகளை, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை ஒத்திவைப்பது நல்லது. தர்ப்பணம் செய்து முடித்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.

மகாளய அமாவாசை

தானம் செய்யுங்கள்

அன்று உங்களால் எந்த தானம் செய்ய முடியுமோ? அந்த தானத்தை செய்யுங்கள் நம்முடைய முன்னோர்கள் அதனை ஏற்றுக்கொண்டு உங்களுக்கு ஆசி கொடுப்பார்கள்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நாம் மறக்கக்கூடாது. அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அமாவாசை, புண்ணிய கால தர்ப்பணம், வருஷ சிரார்த்தம், மகாளய பட்சம் ஆகிய 96 நாட்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஏழைகளுக்கு தானம்

புனிதமான மகாளய அமாவாசை நாளில் ஏழைகள், இல்லாதோர் அல்லது இயலாதோர்களுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் செய்ய, நாம் செய்த பாவங்கள். கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கை.

மகாளய அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால் அது ஆயிரம் மடங்கு புண்ணிய பலன்களை தரவல்லது. புண்ணிய மாதமான இந்த புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களது பரிபூரண ஆசிகளை பெறுவோமாக.

மகாளய அமாவாசை

மகாளய பட்ச காலத்தில் என்னென்ன பொருட்களை தானம் செய்ய வேண்டும்?

அன்னதானம் – மகாளய பட்சத்தில் பித்ரு லோகத்தில் இருந்து நம்மை தேடி வரும் முன்னோர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து அவர்களின் பசியை போக்குவதோடு, பசியோடு இருக்கும் ஏழை மக்களுக்கும் உணவு கொடுப்பதனால், நம்முடைய பல தலைமுறையினருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக சந்ததிகளின் வாழ்க்கையில் இருக்கும் தடை மற்றும் துன்பங்கள் என அனைத்தும் நீங்கும்.

ஆடை தானம்

மகாளய பட்சத்தில் ஏழை, எளியோர் மற்றும் பிராமணர்களுக்கு அன்னதானம் கொடுப்பதோடு, ஆடைகளையும் தானம் செய்ய வேண்டும் வேட்டி, துண்டு போன்றவற்றை தானமாக கொடுக்கலாம்.

நெய் தானம்

மகாளய பட்சத்தில் சுத்தமான பசு நெய் தானமாக வழங்குவதன் மூலம் குடும்ப பிரச்சனைகள் நீங்கி முன்னோர்களின் ஆசிகள் முழுமையாக கிடைக்கும் எனவே, இந்த காலத்தில் நெய் தானம் செய்வது நல்லது.

தங்கம் மற்றும் வெள்ளி தானம்

மகாளய பட்ச காலத்தில் தங்க பொருட்களை தானம் செய்வதன் மூலம் தானம் செய்பவர் சந்தித்து வரும் குரு தோஷம் அல்லது குரு கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், எல்லா நோய்களிலிருந்தும் விடுபட்டு நிம்மதியான வாழ்வு கிடைக்கும். அதே நேரத்தில், வெள்ளி சந்திரனை குறிப்பதாக கருதப்படுகிறது. எனவே, இந்நாட்களில் வெள்ளியை தானம் செய்வதால் அனைத்து விதமான நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஒற்றுமை போன்றவை உண்டாகும்.

எள் தானம்

மகாளய படச காலத்தில் கருப்பு எள் தானம் செய்வதன் மூலம்அனைத்து தடைகளிலிருந்தும் விடுதலை பெறுவர். இதுமட்டுமின்றி கிரகங்கள் மற்றும் ராசியினால் ஏற்படும் தடைகள் விலகும், மேலும், நெருக்கடிகள் நீங்கும்.

உப்பு தானம்

மகாளய பட்சத்தின் போது உப்பு தானம் செய்வது எதிர்மறை சகதியிலிருந்து விடுதலை அளிக்கிறது. அதுமட்டுமின்றி இந்நாட்களில் உப்பை தானம் செய்வதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

எனவே மறக்காமல் இந்த மகாளய பட்ச காலத்தில் நம்மால் முடிந்த தானங்களை செய்து வழிபடுவோம்.

மகாளய அமாவாசை

மகாளய பட்சத்தின் சிறப்பு

மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும்.

இந்த காலக்கட்டத்தில் வரும் பரணி மஹாபரணி என்றும், அஷ்டமி மத்யாஷ்டமி என்றும், திரியோதசி கஜச்சாயை என்றும் கூறப்படுகிறது. மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம் செய்ய முடியாதவர்கள் இந்த காலத்தில் தானங்களை செய்வதால் 12 மாதங்களிலும் தானம் செய்த பலன்கள் கிடைக்கும்.

வேத நூல்கள் சொல்லும் கதை

பல தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து பிதுர் தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மை பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர்.

இந்நாட்களில் நம் வீடுகளை மிக தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக்கூடாது. உடலையும்,உள்ளத்தையும் தூய்மையாகவைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!