மகிழ்ச்சி பொங்கும் மகத்தான தீபாவளி!!!

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

தீபாவளி

தீபாவளி வந்துவிட்டது. எத்திசையிலும் இந்த தீபாவளி பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ‘தீபம்’ என்றால் விளக்கு என்று பொருள். ஆவளி என்றால் வரிசை என்று பொருள். வரிசையாக விளக்கேற்றி இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகையை “தீபாவளி” ஆகும். சில பண்டிகைகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கொண்டாடப்படுகின்றன. ஆனால் தீபாவளி அப்படி அல்ல, இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் பல பகுதிகளிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மக்கள் குதூகலமாக இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். இப்பண்டிகையின் பல்வேறு சிறப்புகளை நாம் பார்க்கலாம்.

தீபாவளிக்கு முன்னும் பின்னும்

ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி தான் தீபாவளி நாள். அதைத் தொடர்ந்து அமாவாசை வந்துவிடும். தொடர்ந்து முருகனுக்கு கந்த சஷ்டி விரதம் ஆரம்பித்து விடும். தீபாவளி குதூகலத்துடன் இறைவழிபாட்டிற்குரிய விரதங்களும் இணைந்து இருப்பது தீபாவளியின் மிகப்பெரிய சிறப்பாகச் சொல்லலாம். வைணவர்களுக்கு கண்ணனை கொண்டாடும் நாள். சைவர்களுக்கு பாற்கடலை கடைந்த போது சிவபெருமான் ஆலகால விஷம் உண்டு உலக உயிர்களை காப்பாற்றிய நாள். பெண்களுக்கு கேதார கௌரி எனப்படும் தீபாவளி நோன்பு விரதம் இருக்கும் நாள்.எப்படி ஒவ்வொருவருக்கும் தீபாவளி என்பது ஒவ்வொரு காரணத்திற்காக இருந்தாலும், எல்லோருக்குமான பண்டிகையாக இருக்கிறது தீபாவளி.

தீபாவளி

பிதுர்களுக்கு தர்ப்பணம்

இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உரிய நாள். ஒவ்வொரு மாதத்தின் பெயரும் சூரியன் எந்த ராசியில் இருக்கிறாரோ அதை பொறுத்துதான் இருக்கிறது. தீபாவளி மாதமான துலாம் ராசியில் சூரியன் இருக்கிறார். பொதுவாக அங்கே அவர் நீசம் அடைவார். அதாவது சூடு தணிந்து பலகீனமாக இருப்பார். ஆனால் இந்த ஆண்டு குருவின் பார்வையில் இருப்பதால் அந்த தோஷம் பெருமளவு நீங்குகிறது. இதனால் உலகம் சுபிட்சம் பெறும். தீபாவளி தினத்தன்று வரும் அமாவாசையில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

சர்ப தோஷம் நீக்கும் தீபாவளி

பாற்கடலை கடைந்து அமுதம் வெளிவந்த நாள் தான் தீபாவளி. அன்று வைத்யோ நாராயண ஹரி: என்றபடி பகவான் நாராயண அம்சமான தன்வந்திரியும் மருந்து மூலிகைகளோடு தோன்றினார். அதனால்தான் உடலுக்கு நன்மை செய்யும் தீபாவளி மருந்து என்கிற அவுஷத்தை அன்று சாப்பிடுகின்றோம். இந்த அமுதம் கிடைத்த நாளில் தான் ராகு கேது என்ற இரண்டு சர்ப்ப கிரகங்கள் தோன்றின. அதில் ராகுவுக்கு உரிய சுவாதி நட்சத்திரத்தில் தீபாவளி பண்டிகை வருவது மிகவும் சிறப்பு. துலாம் ராசியில் இடம்பெறும் சுவாதி நட்சத்திரம் மிகவும் பிரகாசமான நட்சத்திரம்.. தீபாவளியில் தீபம் எனும் ஒளியை தானே ஏற்றுகின்றோம். ஒளிமயமான நட்சத்திர நாளில் நாமும் தீபம் ஏற்றுவது சிறப்பு அல்லவா! எனவே சுவாதி நட்சத்திர நாளில் எண்ணெய் குளியல் செய்து முறையாக இறைவனை தீபம் ஏற்றி வழிபட்டு கொண்டாடினால் சர்ப்ப தோஷங்களினால் ஏற்படுகின்ற துன்பங்கள் விலகும்.

தீபாவளி

கங்கையும் தீபாவளியும்

தீபாவளி என்றாலே முதல் கேள்வி கங்கா ஸ்தானம் ஆச்சா? என்பதுதான். தீபாவளியின் பிரதான நிகழ்வே கங்கை நீராட்டம் தான். கங்கை வடநாட்டில் அல்லவா ஓடுகின்றது. தீபாவளி அன்று வடநாட்டில் ஓடுகின்ற கங்கையில் எப்படி நீராட முடியும்? என்ற கேள்வி எழலாம். ஆனால் பெரியவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால், தீபாவளி அன்று நீங்கள் எந்த நீரில் நீராடினாலும் அந்த நீரில் அன்று மட்டும் கங்கையின் புனிதம் நிறைந்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். தீபாவளி அன்று நீராடும்போது கங்கையை நினைத்து இந்த ஸ்திரத்தை சொல்ல வேண்டும்.

பாகீராதி சுக -தாயினி மாதஸ்-தவ -ஜல -மஹிமா நிகமே க்யாதஹ்

நாஹம் ஜானே தவ மஹிமானம் பாஹி க்ரு பாமாயி மாம் -அஜ்ஞானம்

பாகீரதி சுகங்களை தருபவளே, உனது புனிதம் தெரியும். உன் பெருமையை நான் அறிவேன். அடியேனை நீ காக்க வேண்டும். என் பாவங்களை நீக்கி எனக்கு கருணை காட்டி என் அறியாமை எனும் இருளை நீக்க வேண்டும்.(பகீரதன் கொண்டுவந்ததால் கங்கைக்கு பாகீரதி என்று ஒரு பெயர்)

தீபாவளி

தீபாவளி பூஜையின் பொது சொல்லவேண்டிய ஸ்தோத்திரம்

தீபாவளி அன்று யாரும் “பண்டிகை ஆயிற்றா?” என்று கேட்பதில்லை. ‘நீராடி விட்டீர்களா?” என்றும் கேட்பதில்லை. “கங்கையில் நீராடி விட்டீர்களா?” (கங்கா ஸ்நானம் ஆச்சா?) என்று தான் கேட்கிறார்கள். பதில் சொல்லும் போது கங்கையில் நீராட்டம் ஆயிற்று என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு என்ன காரணம் என்று சொன்னால், கேட்டாலும் பதில் சொன்னாலும் கங்கை என்கின்ற வார்த்தை நம்முடைய வாயிலிருந்து வந்து விட வேண்டும். அது புனித நீராடலுக்கு சமம். இதை பெரியாழ்வார் ஒரு பாசுரத்திலே அழுத்தமாக சொல்லுகின்றார்.

தங்கையை மூக்கும் தமையனைத் தலையும்

தடிந்த எம் தாசரதி போய்

எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட

எம் புருடோத்தமன் இருக்கை

கங்கை கங்கை என்ற வாசகத்தாலோ கடுவினை களைந்திடுகிற்கும்

கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற

கண்டம் என்னும் கடிநகரே

பூஜை செய்யும் போது இந்த பாசுரங்களை சொல்லி பூஜை செய்தால் கங்கா ஆராதிக்கு சமம்.

Leave a Comment

error: Content is protected !!