வர்கோத்தமம்
ஒரு கிரகம் ராசி சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதை குறிப்பதை வர்கோத்தமம் என்கிறோம். ராசி மற்றும் நவாம்ச சக்கரத்தில் ஒரே இடத்தில் லக்னம் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்.
லக்னம் வர்கோத்தமம் பெற்றால் நீண்ட ஆயுளுடன் இருப்பான்.
சூரியன் வர்கோத்தமம் பெற்றால் ஜாதகனுக்கு தலைமை ஏற்கும் தகுதியை கொடுக்கும்.
சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் ஜாதகனுக்கு அதீத மன வலிமை ,எதையும் எளிதாக புரிந்து கொள்ளும் தன்மையை கொடுக்கும்.
செவ்வாய் வர்கோத்தமம் பெற்றால் ஜாதகனுக்கு அதீத ஆற்றல் ,செயல் திறனை கொடுக்கும்
புதன் வர்கோத்தமம் பெற்றால் ஜாதகனுக்கு அதீத பேச்சு திறமையை கொடுக்கும் ,சிறந்த பேச்சாளராக திகழ்வார்கள்
குரு வர்கோத்தமம் பெற்றால் ஜாதகனுக்கு அதீத புத்திசாலிதனத்தை கொடுக்கும்.
சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றால் ஜாதகனுக்கு அழகையும் ,கவரும் தன்மையை கொடுக்கும்.
சனி வர்கோத்தமம் பெற்றால் ஜாதகனுக்கு ஆதீத பொறுமையும் சகிப்பு தன்மையும் இருக்கும்.
ராகு வர்கோத்தமம் பெற்றால் ஜாதகனுக்கு அதீத துணிச்சலை கொடுக்கும்.
கேது வர்கோத்தமம் பெற்றால் அதீத ஞானத்தை கொடுக்கும்.
வர்கோத்தமம் பெற்ற கிரகங்கள் தனது ஆதிபத்திய பலனை உரிய நேரத்தில் தருவதற்கு தயாராக இருக்கும்.
வர்கோத்தமம் பெற்ற கிரகங்களுக்கு பார்வை சேர்க்கை போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு பலன் கூற வேண்டும்.