சிவராத்திரி
ஏகாதசி விரதத்தை அடுத்து மிகவும் உத்தமமான விரதம் ‘சிவராத்திரி’ விரதமே. பகலில் உபவாசம் இருந்து, மாலையில் இரண்டாவது முறையாக ஸ்நானம் செய்து உடல் முழுவதும் விபூதி தரித்து, ருத்ராட்சங்கள் அணிந்து ஒவ்வொரு ஜாமமும் சிவபெருமானுக்கு 11 திரவியங்களால்(பால் ,தயிர்,தேன் ,நெய் ,கரும்புச்சாறு,தேங்காய் துருவல்,வாழைப்பழம்,பலாப்பழம்,மாம்பழம் கலந்த பஞ்சாமிர்தம்,எலுமிச்சை சாறு,சந்தனக்குழம்பு,குங்குமக் குழம்பு,விபூதி,கலச நீர், அபிஷேகம் செய்ய வேண்டும்.
பூஜையின் போது கூறவேண்டிய மந்திரம்
ஓம் வ்யோம வ்யோமினே வ்யோம ரூபாய சர்வ வியாபினே
சிவாய அநந்தாய அநாதாய அநாச்ருதாய
த்ருவாய சாச்வதாய யோக பீட சம்ஸ்திதாய
நித்ய யோகிநே த்யாநா ஹராய நமச்சிவாய
சர்வப்ரபவே சிவாய ஈசான மூர்த்தாய
தத்புருஷ வக்தராய அகோர ஹ்ருதயாய
வாமதேவ குஹ்யாய ஸத்யோஜாத மூர்த்தாய
ஓம் நமோ நம: குஹ்யாதி குஹ்யாய கோப்த்ரே
அநிதநாய சர்வ யோகாதி க்ருதாய சர்வ
வித்யாதிபாய ஜோதி ரூபாய பரமேச்வா பராய
அசேதநா சேதந வ்யோமின் வ்யோமின்
வ்யாபின் வியாபின் அருபின் அருபின் ப்ரதம
ப்ரதம தேஜஸ் தேஜஸ் ஜோதிர் ஜோதிர் அரூப
அநக்னீ அதூம அபஸ்ம அநாதே நாநா நாநா
தூதூ தூதூ ஓம் பூ: ஓம் புவ: ஓம் சுவ அநித்த
நித்த நித்தோத்பவ சிவ சர்வ பரமாத்மன்
மகேச்வர மகாதேவ சத்பாவேச்வர மஹாதேஜ:
யோகாதி பதே முஞ்ச முஞ்ச ப்ரதம ப்ரதம சர்வ
சர்வ பவபவ பவோத்பவ சர்வபூத சுகப்ரத சர்வ
சாந்நித்யகர ப்ரம்ம விஷ்ணு ருத்ர பர
அநிர்ச்சித அநிர்ச்சித அஸம்ஸ்துத
அஸம்ஸ்துத பூர்வஸ்தித சாட்சி சாட்சின்
பூர்வஸ்திதி துரு துரு பதங்க பதங்க பிங்க
பிங்க ஞான ஞான சப்த சப்த சூக்ஷ்ம சூக்ஷ்ம
சிவ சர்வ சர்வதய ஓம் நமோ நம: சிவாய நமோநம: ஓம்.
மந்திரத்தை கூறி முடித்தவுடன் வில்வத்தால் அர்ச்சனை செய்வது மிகுந்த புண்ணியத்தை தரும் சிவ பூஜை செய்ய இயலாதவர்கள் கூட இரவு முழுவதும் உறங்காமல் இருப்பது மிகுந்த புண்ணியத்தை தரும்.