லக்னம் நின்ற நட்சத்திர பலன்கள்- பரணி- பூரம்- பூராடம்-கார்த்திகை-உத்திரம்-உத்திராடம்-மிருகசீரிடம்-சித்திரை-அவிட்டம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

லக்னம் நின்ற நட்சத்திர பலன்கள்

 பரணி- பூரம்- பூராடம்-கார்த்திகை-உத்திரம்-உத்திராடம்-மிருகசீரிடம்-சித்திரை-அவிட்டம்

சுக்கிரனின் பரணி, பூரம் ,பூராடம் நட்சத்திரங்களில் லக்னம் நின்றால்

  • அழகானவராகவும் , அழகை ஆராதிப்பவராகவும் , அழகின் மீது நாட்டம் கொண்டவராகவும் இருப்பார்கள்
  • சொகுசாக வாழவும் வழி தானாக கிடைக்கும்
  • உலகை ரசித்து ருசிப்பர் ,
  •  குரு பார்வை பெறும் போது அதிக அலட்டல் இல்லாமல் தான் மட்டுமின்றி தன்னைச் சுற்றி இருப்பவற்றையும் நன்றாக வைக்க வேண்டும் எனும் நற்குணம் கொண்டவராக்கும் .
  • வலியச்சென்று உதவுவர்,மக்கள்  மேல் அக்கறை இருக்கும் ,மக்களின் உரிமைக்காக பாடுபடுபவர்
  • அரசாங்க நன்மை, அரசாங்க பதவி பெறுவார்
  • புதன் பார்வை இருந்தால் மக்களுக்கு எளிமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்கும் ஆற்றல் இருக்கும் .
  • காலை துறையில் பல சாதனைகள் புரிய வைப்பார்
  • வளர்பிறை சந்திரன் இருந்தால் நகைச்சுவை உணர்வுகளை மக்களுக்கு பிடித்தபடி கொடுத்து, நாட்டின் அவலங்களை எளிமையாக எடுத்துரைப்பார்
  • எதிரிகளும் ரசிக்கும் தன்மை கொண்டவர், பன்முக சிந்தனை கொண்டவர்
  •  வலுக்குறைந்த கெட்ட ஆதிபத்தியம் கொண்ட சுபர் கிரக பார்வை பாவகிரக வலு பெற்று பார்த்தல் பிறர் ஏளனம் செய்யும் அளவு சூழ்நிலை உருவாகும்
  • எதிரி முன்  வாழ்ந்து காட்ட முடியாமல், எதிரியை அல்லது பிடிக்காதவர் காலடியில் கிடக்க நேரிடும்
  • திறமைக்கேற்ற ஊதியமோ ,புகழோ  கிடைக்காது, அடுத்தவரின் வளர்ச்சிக்கு இவரது திறமை பயன்படும்
astrosiva

லக்னம் குரு ,சுக்கிரன் ,வளர்பிறை சந்திரன் ,புதன் என சுபகிரக நட்சத்திரங்களில் நின்று 

  • சுபகிரக பார்வையும்  பெற்றால், சுபகிரகம் வலுத்தால் நேர்மையாக, பிறர் பொருள் மீது ஆசை இல்லாதவராக, இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ்வார்
  • நல்ல ஆதிபத்தியம் தசா புத்திகளில் எதிர்பாராத வளர்ச்சி, மகிழ்ச்சி பெறுவர்
  • பாவ கிரக நட்சத்திரங்களில் லக்கினம் இருந்து  சுபகிரக பார்வை கூட்டு இருந்து சுபகிரக பார்வை பெற்றால் அதிகாரமிக்க பதவி கிட்டும்  எதிரியை வீழ்த்தி விடும் பராக்கிரமம் மிக்கவராக்கும்
  • பாவ  கிரகங்களுக்குள்  நட்பு கிரகங்களின் பார்வை அதிகார பலத்தையும், பகை கிரகங்களின் பார்வை ஆக்ரோஷத்தையும் அதிகப்படுத்தும்.
  • லக்கினாதிபதி  பகை கிரகமாகி  பலம் பெற்றால் லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி கிரகத்தின் பலம் குறையும்
  • எதிர்மறை சிந்தனைகளை அதிகப்படுத்தும்

பாப கிரகமான சூரியனின் கார்த்திகை, உத்திரம், உத்திராடம்  ஆகிய நட்சத்திரங்களில் லக்கினம் இருந்தால் 

  • இளையவராக பிறந்தாலும் மூத்தவர்கள் எல்லோருக்கும் தந்தை ஸ்தானத்திலிருந்து கடமைகள் அனைத்தையும் செய்வார்
  • அவருடைய பேச்சுக்கு மூத்தவர்கள் கட்டுப்பட்டு நடப்பர்
  • எதிலும் நேர்மையாக நடந்து கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள்
  •  தொழில் செய்யும் இடங்களில் கட்டளையிடும் பொறுப்பில் இருந்து வேலை வாங்குவார்கள் ,
  • அடக்கும் ஆற்றல் ,ஆளுமை திறனால்  அவர் சொல்வதை செய்ய ஆட்கள் இருப்பர்
  • சூரியன் பலமின்றி இருந்தாலோ ,பாவக் கிரகங்களின் பார்வையால் பாதிக்கப் பட்டாலோ , அடிமை போலவும் வாழ நேரும்
  • ஆணவத்தாலும், அறியாமையாலும், வாழ்க்கையை இழப்பர்
  • தசாபுக்திகள் மோசமாக இருந்தால் அரசாங்க தண்டனை, தற்கொலை, விபத்துக்களால் பாதிக்கப்படுவர்

செவ்வாயின் மிருகசீரிடம், சித்திரை ,அவிட்டம் நட்சத்திரத்தில் லக்னம் நின்றால்

  • எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவராக இருப்பார்
  • பிடிவாதமாக நினைத்ததை சாதிப்பவர்
  • சுபகிரக பார்வை பெற்றால் ஊர் மெச்சும்  குணம் படைத்தவராகவும், குடும்ப பற்று  மிக்கவராகவும் இருப்பர்
  • கூட்டு சுபகிரக பார்வை இருந்தால் எளிதில் புகழ் அடைவர்
  • லக்கினாதிபதி பலம் பெற்றால் சுயநலவாதியாக இருப்பர்
  • பாவ கிரக பார்வை பலமாக இருந்தால் மந்தமாக, சோம்பலாக இருப்பர்
  • பலமின்றி இருந்தால் அடுத்தவருக்கு வேலை செய்யும்போது சோம்பேறி போல காட்டிக்கொண்டு தனக்கென்றால் மட்டும்  வேகமாக செயல்படுவர்
  •  நட்பு கிரக பார்வை இருந்தால் தன்னம்பிக்கை தந்து எந்த சூழலையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவார் ,காரியம் முடிந்ததும் கழட்டி விடவும் செய்வர்
  • தான் சாதிப்பதற்காக எந்த எல்லைக்கும் போவர்
  • சனி பார்வை பெற்றால் முறையற்ற சட்டத்திற்குப் புறம்பான காரியங்களில் துணிந்து செய்வர்
  •  பிரச்சனை வரும்போது தான் அகப்பட்டுக் கொள்ளாமல் இருக்க தன்னை சார்ந்த வரை சிக்க வைத்து எளிதாக நல்லவராக காட்டிக் கொள்ளும் திறமை மிக்கவர்
  •  நல்ல தசா புத்திகளில் சிக்காமல் கெட்ட தசா புத்திகளில் சிக்கிக்கொண்டு  தண்டனை பெறுவர்

Leave a Comment

error: Content is protected !!