குரோதி வருட பலன்கள் 2024-மீனம்
குரு பகவானின் அருள் பெற்ற மீனராசி அன்பர்களே!! வரும் குரோதி வருடத்தில் துணிவை விட பணிவு தான் வெல்லும் என்பதை உணர்ந்து நடக்க வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் எதிர்பார்த்த மேன்மைகள் கைகூடும். பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.எந்த சந்தர்ப்பத்திலும் எல்லாம் தெரியும் என நினைப்பதும், பிறரை மட்டும் தட்டும் பேச்சும் கூடவே கூடாது.
குரோதி வருட கிரகநிலைகள்
வீட்டில் ஒற்றுமை உருவாகும். விசேஷங்கள் அணிவகுத்து வரும். வாழ்க்கைத் துணையால் பெருமை சேரும். குடும்பத்து பிரச்சினைகளை மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீண்ட காலமாக விலகி இருந்த உறவுகள் உங்கள் மனம் புரிந்து திரும்பி வருவார்கள். அதனால் ஆதாயமும் ஏற்படும். வீடு, மனை தொடர்பான வழக்குகளில் விட்டு தருவதுதான் நல்லது.
செய்யும் தொழிலில் செழிப்பு நிச்சயம் ஏற்படும். வர்த்தக கடன்கள் தாமதமானாலும் நிச்சயம் கைகூடும். முதலீடுகளை முறையாக யோசித்து செய்தால் முடங்கி இருந்த நிலை மாறும். கொடுக்கல், வாங்கல் எதையும் முழு கவனத்தோடு நேரடியாக செய்யுங்கள். உடனுக்குடன் குறித்து வைத்துக் கொள்வது அவசியம்.
குரோதி வருட குரு பார்வை
அரசு,அரசியல் துறையினருக்கு நாவடக்கமே நன்மை தரும். தன்னடக்கத்தோடு செயல்பட்டால் தலைமைக்கும் உங்களுக்கும் இடையில் இருந்த விரிசல் மறையும். சுயநலத்திற்காக சிலர் உங்களை தூண்டில் புழுவாக பயன்படுத்தலாம். முகஸ்துதியை உணர்ந்து ஒதுங்கினால் வில்லங்கத்தில் சிக்காமல் விலகலாம்.
கலை, படைப்பு துறையினருக்கு வாய்ப்புகள் வாசல் தேடி வரும். திறமைகள் பளிச்சிட வேண்டுமென்றால் திட்டமிட்ட உழைப்பு முக்கியம். பயண பாதையில் அறிமுகம் இல்லாதவர்கள் தரும் உணவு, பானத்தை தவிர்ப்பது அவசியம்.
காது, மூக்கு, தொண்டை அலர்ஜி, தலைவலி, அல்சர் உபாதைகள் வரலாம்.
பரிகாரம்
இந்த வருடம் முழுக்க பெருமாள், தாயார், அனுமனை வணங்குங்கள். பெருமைகள் சேரும்.