Homeஆன்மிக தகவல்சனி மகாபிரதோஷத்தின் மகிமை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

சனி மகாபிரதோஷத்தின் மகிமை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

சனி மகாபிரதோஷம்

சாதாரண நாட்களில் வழிபடுவதை விட, பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை வழிபடுவது 10 மடங்கு பலனை கொடுக்கும். இதில் சனிக்கிழமை அன்று வருகின்ற ‘சனி மகாபிரதோஷம், 100 ஆண்டு தரிசன பலனை கொடுக்கும்.

சிவன் விஷம் அருந்திய தினம்

அமிர்தம் எடுப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது வெளிவந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்திய தினம் ஒரு சனிக்கிழமை பிரதோஷ நேரம் என்பதால் ‘சனி மகாபிரதோஷம்’ சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

குபேரனை போன்ற செல்வம் கிடைக்கும்

சனி மகாபிரதோஷ தினத்தில் செய்யப்படும் தானத்திற்கு ஈடாக எதையும் கூற முடியாது. இந்நாளில் சிவபெருமானுக்கு விளக்கேற்றி வழிபட்டால் லட்சதீபம் ஏற்றியதற்கு சமமாகும். அது மட்டுமல்ல அது குபேரனை போன்ற வாழ்க்கை கிடைக்கும்.

2024 வருடம் எத்தனை சனி மகாபிரதோஷம் ?

2024 ஆம் ஆண்டில் மொத்தம் 4 சனி மகா பிரதோஷம் வருகிறது

1.ஏப்ரல் 6

2.ஆகஸ்ட் 17 ,31

3.டிசம்பர் 28 என நான்கு நாட்கள் வருகிறது ஆனால் இந்த நான்கு நாட்களும் மறக்காமல் சிவன் கோவிலுக்கு செல்வது நல்லது.

முக்கிய கோவில்கள்

சனி மகா பிரதோஷ தினத்தன்று உள்ளூரில் இருக்கும் சிவன் கோயில் மட்டுமல்ல எந்த சிவன் கோயிலுக்கு சென்றாலும் சிறப்பாகும். இருப்பினும் திருவண்ணாமலை, சிதம்பரம், திருவானைக்காவல், காஞ்சிபுரம், திருக்குற்றாலம், திருவாலங்காடு போன்ற கோயில்களுக்கு செல்வது நல்லதாகும்.

பிரதோஷ விரத பலன்

‘சனி மகாபிரதோஷ’ விரதம் இருப்பதால் சகல காரியங்களும் வெற்றி கிடைக்கும். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். இதுவரை மணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். சிவன் அருளால் முக்திப்பேறு கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!