லக்னாதிபதி 12 பாவங்களில் நிற்கும் பலன்கள்
லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால்!
- சிறுவயதிலேயே மதிப்பு மரியாதை கிடைக்கும்
- ஆளுமை திறன் இருக்கும்
- அவருக்கு கீழே பணி செய்ய ஆட்கள் தானக அமைந்து விடுவர்
- சுப கிரகமாக இருந்து வலுத்தாலும் ,லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி லக்னாதிபதிக்கு நட்பு கிரகமாக இருந்து சுபத்துவம் பெற்றால் பிறக்கும்போதே கோடீஸ்வரராகவும் , வாழ்நாள் முழுவதும் மன்னராகவும் திகழ்வார் ,கடைசி வரை பதவி, பணம், புகழ், நீண்ட ஆயுள் உடன் இருப்பார்.
- லக்னாதிபதி லக்னத்தில் பலம் பெற்றால் நிலையான முடிவெடுக்கும் திறன் இருக்கும்,குழப்பமில்லாத மாணவராக எதையும் சாதிப்பார்
- லக்னாதிபதி பாபக் கிரகமாக இருந்தால் அதிகார தோரணையுடன் நடப்பார்
- லக்னத்தில் பாவ கிரகங்கள் இணைந்து அல்லது பார்த்து பகை நீசம் பெற்றால் இரக்கமற்றவர்களக நடந்து கொள்வார்
- நோயாளியாகவும், கடனாளராகவும் , பல எதிரிகளை பெற்றவராகவும், ஆயுள் குறை கொண்டவராகவும் இருப்பார்.
- குடும்பம் குடும்பமாக இருக்கும் பூர்வீக சொத்துக்கள் பலவகையில் சிதறிப் போய்விடும்
- குடும்ப பாரம்பரியத்திற்கு மாறான குணம் கொண்டவராக இருப்பார்
லக்னாதிபதி இரண்டில்!
- லக்னாதிபதி தன ஸ்தானத்தில் இருந்தால் சிறு வயது முதல் குடும்பத்திற்கான உழைப்பு ,சிக்கனம், அக்கறை, உடன் பிறந்தவர்களுக்கு உதவிகள், பெற்றோர்களை கடைசி காலங்களில் கவனித்தல், விட்டுக் கொடுக்கும் பண்பு, கொடுத்த வாக்கை நேர்மையாக காப்பாற்றும் எண்ணம், கொண்டவராக இருப்பார்.
- அவருடைய அறிவுரையை ஆலோசனைகள் பலருக்கு பயன் தரும்
- ஆட்சி பெற்ற பாவ கிரக பார்வை இருந்தால் பிடிவாத குணம் இருக்கும்
- உண்மையை பேசுகிறேன் என எல்லார் முன்னிலையிலும் மறைக்காமல் வெளிப்படையாக போட்டு உடைத்து விடுவார்
- இவர் சேர்த்து வைக்கும் சொத்து குடும்பத்திற்கு அதாவது பரம்பரைக்கே தொடர்ந்து தனத்தை தரும்
- பாவ கிரக வலிமை பெற்றால் ஜாதகர் பழி வாங்குவார்
- இரண்டாம் இடத்திற்கு பாவ கிரக பார்வை பெற்றால் கொடுத்த வாக்கை மீறுவராகவும் இருப்பார்.
லக்னாதிபதி மூன்றில் நின்றால்!
- உடன் பிறந்தவர்கள் மீது அதீத பற்று கொண்டவர்
- எதற்கும் அஞ்சாதவர்
- பராக்கிரமசாலி
- இசை அறிவு குறைவாக இருந்தாலும் இசை ஞானம் மிக்கவர்
- சகோதரர் சொல் கேட்டு உடனடியாக உணர்ச்சிகளை வெளிக்காட்டும் நபர்
- வாய்ப் பேச்சால் எதிரிகளை ஏற்படுத்திக் கொள்வார்
- எதிலும் நிறையுவடைய மாட்டார்
- பொறாமை குணம் கொண்டவர்
- பேசிவிட்டு வருத்தப்படக் கூடியவர்
- செல்வாக்கும் சொல்வாக்கும் இருப்பதைக் கொண்டு வாழத் தெரியாதவன்
- பாவ கிரக பார்வை சேர்க்கை பெற்றால் யாருக்கு உதவி செய்தாலும் செய்நன்றி மறப்பார்கள்
- முன்கோபத்தால் வாழ்க்கையை இழப்பார்
- சகிப்புத்தன்மையும் மன்னிக்கும் குணம் இருக்காது
- எதற்கெடுத்தாலும் குற்றம் குறை கூறிக் கொண்டே இருப்பார்
- இவரின் நல்ல எண்ணம் நல்ல குணம் பிறருக்கு தெரியாமலே போய்விடும்
- 6 ,8 ,12 அதிபதி சம்பந்தமானது கோழையாகி தற்கொலை எண்ணத்தை தரும் மனம்
- நொந்தே நோயாளி ஆவார்
- கிடைத்த நல்வாழ்க்கையை தக்கவைக்க தெரியாமல் நஷ்டத்தையும் கஷ்டத்தையும் அடைவார்
- ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது போல் இவர்களது பேச்சை சபைகளில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், நியாயமான கோரிக்கைகளுக்கு கூட நீதி கிடைக்காது
லக்னாதிபதி நான்கில்!
- நான்காம் இடத்தில் லக்கனாதிபதி நின்றால் தாய் போல குணம் கொண்டவர்
- தாய் பாசம் மிக்கவர்
- தாயாரின் ஆதரவு ஆசி பெற்று சொகுசான வாழ்க்கை பெறுவார்
- சொந்த பந்தம் என கூட்டுக்குடும்ப வாழ்க்கை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை கொண்டவர்கள்
- நம்பி வந்தவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்
- உறவுகளை மதிக்க கூடியவர் செல்வந்தன்
- எண்ணம் போல் வாழ்க்கை அமையும் சுகவாசி
- கொடுப்பதை நிறுத்தினால் கெடும்
- தாய்வழி சொத்துக்கள் கிடைக்கும்
- வீடு வாகன வசதி தானாக அமையும்
- அனைவராலும் விரும்பத்தக்க அவர் நீண்ட ஆயுளும் நிறைவான வாழ்க்கை நீடித்த புகழும் அடைவான்
- நான்காம் அதிபதி லக்னாதிபதி பாவ கிரக சேர்க்கை பார்வை பெற்றால் சோதனைகளும், வேதனைகளும் போராட்டங்களும் நிறைந்த வாழ்க்கை கிடைக்கும்
- பிடிக்காத வீடு, நிம்மதி கெடுக்கும் உறவுகள், பழுதான வீடு, வாகனம் அடிக்கடி கெடுக்கும் சம்பவங்கள் அமையும்
- கெட்ட தசாபுக்திகள் நடந்தால் நித்தம் ஒரு பிரச்சனை சுகம் இன்றி தவிக்கும் சூழல் 6, 8, 12ம் அதிபதிகள் சேர்க்கைப் பெற்றால்
- நோயால் சுகம் இழப்பு ஏற்படும்
- எதிரி ,கடன் ,ஊர்மாற்றம், இடமாற்றம், வாகன மாற்றம் செய்ய நேரும்
லக்னாதிபதி ஐந்தில்!
- பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் லக்னாதிபதி நின்றால் குலதெய்வ அருள் பரிபூரணமாக பெற்றவர்
- இளம்வயதிலேயே நிதானம், பொறுமை, பெரியவர்களை மதித்து நடத்தல், பிறர் பொருள், பணம், புகழுக்காக ஆசைப்படாதவர்
- கிடைத்ததைக் கொண்டு எல்லாம் நன்மைக்கே என வாழக் கூடியவர்
- நல்ல குணத்தை பொறுமையாக சோதித்தாள் சாது மிரண்டால் காடு கொள்ளாது என விரட்டி அடிப்பார்
- எல்லோரும் வேண்டும் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என ஆசைப்படுபவர்
- அன்பாக சகிப்புத்தன்மையுடன், விட்டுக் கொடுக்கக் கூடியவர்
- பரம்பரை பெருமை மிக்கவர்
- கௌரவமான குடும்பத்தை சேர்ந்தவர்
- ஏமாளியாக இருக்க விரும்பாதவர்
- எளிமையாக வாழ்க்கை வாழக்கூடியவர் , எதிலும் நேர்த்தியாக இருக்க முயல்வார்
- கெட்ட குணங்களை விரும்பாதவர்
- அதிர்ஷ்டத்தால் பெரிய பதவி கிடைத்து , திடீர் புகழும் பிள்ளைகள் பிறந்த பின் வாழ்க்கையில் மாற்றம் பிள்ளைகளால் ஏற்றம் உண்டாகும்
- பிள்ளைகளுக்கு தேவையானதை செய்வார்
- ஜாதகரால் குழந்தைகளுக்கு அதிக பயன் உண்டு
- 6, 8, 12ஆம் அதிபதிகள் தொடர்பு ஏற்பட்டால்
- குணத்தை கெடுக்கும், பூர்வீக சொத்துகளை அழிப்பார்
- பிறர் துன்பத்தை ரசிப்பார்
- குரூர எண்ணத்தால் யாரும் நெருங்க முடியாத இடத்தில் இருப்பார்
- பொறாமை ,நோய் ,எதிரி, கடன், அடிக்கடி பாதிக்கப்படுவார்கள்.
லக்னாதிபதி ஆறாம் வீட்டில் நின்றால்!
- தனக்கு எதிரி தானேதான்
- தான் பேசும்வார்த்தையாலும் , செய்யும் செயலால் நஷ்டமும், கஷ்டமும் அடைவார்கள்
- பொது மக்களால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்படும் நிலை ஏற்படும்
- தனக்கு நிகர் தானே என்னும் ஆணவம் இருக்கும்
- நோய் ,எதிரி, கடன் அவதிப்படுவார்
- எதிரிகளை சம்பாதித்து எதிரிகளால் அழிக்கப்படுவார்
- எதிரிகளிடம் அனைத்தையும் இழந்து அடிமையாய் வாழ நேரும்
- நோயால் பாதிக்கப்படுவார்
- உடலில் அறுவை சிகிச்சை செய்ய நேறும்
- லக்கனாதிபதி தசையாக இருந்தால் தோல்வி ஏற்பட்டு, வெற்றியும் பெரிய வெற்றி பெற்ற அதே வேகத்தில் தோல்வியடைந்து ,புகழடைந்த வேகத்தில் காணாமல் போய்விடுவார்
- எளிதில் பாதிக்கக்கூடியவர்
- கடன் கொடுத்தால் வாங்க முடியாது வாங்கினால் தரமாட்டார்கள்
- எதற்கெடுத்தாலும் தடையை சந்திப்பார்
- வாழ்க்கை மீது ஒரு வகை இருந்துகொண்டே இருக்கும்
- எளிதாக எவரையும் பகைத்துக் கொள்வார்
- நிதானமின்றி முடிவுகளை எடுத்து அதன் மூலம் பாதிப்புகளை அடைவார்
- பாவ கிரக பார்வை சேர்க்கை இருந்தால் முறையற்ற வாழ்க்கை சட்டத்திற்கு, நியாயத்திற்குப் புறம்பான காரியத்தை ஈவு இரக்கம் இன்றி துணிந்து செய்வார்
- யாரை பற்றியும் கவலைப்படாத சுயநலவாதியாக இருப்பார் ஆறாம் அதிபதி கெட்டு சுப கிரக வலிமை பெற்றால் எதிரியையும் நேசிக்கும் வல்லமை நற்குணம் நிறைந்தவராக இருப்பார்
இந்த கட்டுரையின் தொடர்ச்சியை படிக்க .