Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசிபலன் |Indraya rasi palan -06.12.2024

இன்றைய ராசிபலன் |Indraya rasi palan -06.12.2024

இன்றைய ராசி பலன்

மேஷம்

உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நீங்கள் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணிபுரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷபம்

உங்களுக்கு தாராள தன வரவு இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதூர்யமாக செயல்பட்டால் சாதகமான பலன்களை அடையலாம். உத்தியோகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.

மிதுனம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. தேவையின்றி மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.

கடகம்

indraya rasi palan kadagam

நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.

சிம்மம்

குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலப் பலன் கிட்டும்.

கன்னி

உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத சிக்கல்கள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பிரச்சினையை தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

துலாம்

நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற பொறுமையும், உடனிருப்பவர்களை அ-னுசரித்து செல்வதும் முக்கியம். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் அடைவதற்கான வாய்ப்புகள் அமையும்.

விருச்சிகம்

உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களின் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.

தனுசு

உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற நல்ல பலன்களும் கிடைக்கும்.

மகரம்

உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நிறைவேறும். உடல் உபாதைகள் குறைந்து ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கும்பம்

நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் சிறு கருத்து வேறுபாடு தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் தடைக்கு பின்பு நற்பலன் கிட்டும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

மீனம்

உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். சிலருக்கு புது பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வருமானம் பெருகும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular