வாஸ்து சாஸ்திரம்
நான்கு திசைகளும் நான்கு மூலைகளும் வாஸ்துவில் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றது. முதலாவது இடத்தை பெறுவது வடகிழக்கு மூலை
வடகிழக்கு மூலை:
வடக்கும் கிழக்கும் சந்திக்கும் பகுதியே வடகிழக்கு மூலை எனப்படுகிறது. சாதாரணமாக இது ‘ஈசானிய மூலை’ என்று அழைக்கப்படுகிறது .இந்த மூலையின் வாயிலாகத்தான் பிரபஞ்ச ஆற்றல் நம் இல்லத்தில் நுழைகின்றது.
எதிர்காலம் செல்வச் செழிப்புடன் இருக்க வடகிழக்கு மூலையை மிகச் சிறப்பாக செதுக்கிக் கொள்வது நன்று. வடகிழக்கு மூலையில் அதிக கவனம் செலுத்தி வீட்டை அமைத்துக் கொள்வது சிறப்பான பலன்களை தரும்.
இயற்கையின் அமைப்பு:
நமது பூமி 23 1/2 அடி வடகிழக்காக சாய்ந்து தன் அச்சில் தானும் சுழன்று கொண்டு சூரியனையும் சுற்றிக் கொண்டு வருகின்றது. எனவே இயற்கையாகவே பூமியின் தென்மேற்கு பகுதி உயந்தும் ,வடகிழக்கு பகுதி சாய்ந்தும் காணப்படுகிறது.
வாஸ்துவும் இயற்கையும்:
வாஸ்து இயற்கை அடிப்படைய கொண்டது. இயற்கையோடு இணைந்து வாழும் போது ஆரோக்கியம் மேம்படும் மேலும் மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும். அந்த வகையில் வீட்டின் வடகிழக்கு மூலையு,ம் மதில் சுவரின் வடகிழக்கு மூலையும் மிக கவனமாக அமைத்துக் கொள்வது மிக அத்தியாவசியமாகும்.
மதில் சுவரின் வடகிழக்கு பகுதி:
ஈசானிய பகுதி இழுத்து இருந்தால் குடும்பத் தலைவருக்கு நல்லது என்று தவறான கருத்து மக்களிடையே நிலவி வருகின்றது. ஒரு மூலை இழுக்கப்படும் போது அதற்கு நேர் எதிரே உள்ள ஒரு மூலையோ இரு மூலைகளுமே குறையக்கூடிய வாய்ப்பு உள்ளது. இது குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை விளைவிக்கும்.
வீட்டின் வடகிழக்கு பகுதி:
- திறப்புகள் அதிகம் இருக்க வேண்டிய பகுதி
- உச்ச வாசல் அமைக்க ஏற்ற பகுதி
- கனமில்லாமல் இருக்க வேண்டிய பகுதி
- மிகவும் சுத்தமாக இருக்க வேண்டிய பகுதி
இம் மூலையில் நாம் தெரியாமல் செய்யும் சிறு தவறுகளும் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.எனவே அதி சிறப்பு வாய்ந்த பிரபஞ்ச ஆற்றலை வசீகரிக்கும் வல்லமை படைத்த வடகிழக்கு மூலையினை வாஸ்துப்படி அமைத்து கொள்வது சிறப்பு.