Homeவாஸ்து மர்மங்கள்வாஸ்து:வீடு கட்டுவதற்கு எப்படிப்பட்ட மனையை வாங்க வேண்டும்? எதை வாங்கக்கூடாது ?

வாஸ்து:வீடு கட்டுவதற்கு எப்படிப்பட்ட மனையை வாங்க வேண்டும்? எதை வாங்கக்கூடாது ?

வீடு கட்டுவதற்கு எப்படிப்பட்ட மனையை வாங்க வேண்டும்

வீடு கட்டுவதற்கு நாம் வாங்கக்கூடிய நிலத்தை (மனை) ‘கல்யாண பூமி’ என்று கூறுவார்கள். பூமியை வாங்குவதற்கு முன்னால் அது எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்த்து வாங்க வேண்டும். வாங்கும் பூமிக்கு வடகிழக்கில் நீர் இருக்கலாம். வடக்கு திசையில் கிணறு, குளம், ஆழ்துளை கிணறு ஆகியவை இருக்கலாம்.

  • பூமிக்கு தெற்கு திசையில் மலை, உயரமான கட்டிடம் இருக்கலாம். தெற்கு உயரமாக இருக்க வேண்டும். மேற்கும் உயரமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பூமியை நாம் வாங்கினால் நல்லது.
  • வாங்கும் பூமிக்கு எதிரில் வடக்கில் அல்லது கிழக்கில் தோட்டம் இருக்கலாம் அதனால் நன்மை இருக்கும்.
  • வாங்கும் பூமிக்கு வடக்கு திசையில் சற்று தூரத்தில் கோவில் இருக்கலாம்.
  • நாம் வாங்கும் பூமி மேற்கிலும் தெற்கிலும் உயரமாக இருந்தால் நல்லது நடக்கும்.
  • நீரோட்டம் கிழக்கு அல்லது வடக்கு பக்கத்தில் இருக்க வேண்டும். வடக்கில் ஆறு இருக்கலாம் அல்லது அது லட்சுமி கடாட்சம்.
  • குளம் ,கிணறு இருந்தால் பணவரவு இருக்கும்.
  • வடகிழக்கில் நீர் இருந்தால் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். பண வரவு இருக்கும்.
  • வாங்கும் பூமி வட கிழக்கில் வளர்ந்திருந்தால் அதை வாங்கலாம். அதனால் நமக்கு லட்சுமியின் அருள் கிடைக்கும்.
வீடு கட்டுவதற்கு எப்படிப்பட்ட மனையை வாங்க வேண்டும்

எப்படிப்பட்ட மனையை வாங்க கூடாது?

  • நாம் வாங்கும் பூமிக்கு வடக்கிலும்,கிழக்கிலும் மலைகள், உயரமான கட்டிடம் இருந்தால் அதை நாம் வாங்க கூடாது.
  • பூமியின் தெற்கில் பள்ளம் இருக்கக் கூடாது. தென்மேற்கு திசையிலும் பள்ளம் இருக்கக் கூடாது.
  • நாம் திட்டமிடும் பூமிக்கு தென்கிழக்கில் நீர் இருக்கக் கூடாது.
  • பூமிக்கு கிழக்கில், தென்கிழக்கில் வாசல் இருக்கக் கூடாது.
  • பூமிக்கு தென்மேற்கில் வழி இருக்கக்கூடாது.
  • வடக்கில், வடமேற்கில் பிரதான வாசல் இருக்கக் கூடாது.
  • பூமிக்கு தெற்கில் ஆறு, கிணறு, ஆழ்துளை கிணறு இருக்கக் கூடாது.
  • வாங்க இருக்கும் பூமிக்கு தெற்கு திசையில் மலை இருந்தால் அதன் உச்சியில் குகை இருக்கக் கூடாது.
  • பூமிக்கு தெற்கில், தென்மேற்கில் பள்ளம், குகை இருக்கக்கூடாது.
  • வாங்க நினைக்கும் பூமிக்கு தெற்கு திசையில், தென்மேற்கு திசையில் குளம், ஆறு இருக்கக் கூடாது.
  • பூமிக்கு மத்திய பாகத்தில் கிணறு இருக்கக் கூடாது.
  • பூமியை நாம் வாங்க செல்லும்போது அங்கு எலும்புகள், ஆலமரம், அரசமரம், எருக்கம் மரம் அதிகமாக இருந்தால் அதை வாங்கக்கூடாது.
  • பூமியின் வடகிழக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தால் அதை வாங்கக்கூடாது.
  • வாங்கும் பூமியின் தென்கிழக்கு அதிகமாக வளர்ந்து இருந்தால் அதை வாங்கக்கூடாது.
  • பூமிக்கு தென்மேற்கு திசை வளர்ந்து இருந்தால் அதை வாங்க கூடாது.
  • வாங்க இருக்கும் பூமிக்கு வடமேற்கு வளர்ந்திருந்தால் அதை வாங்கக்கூடாது.
  • வாங்க திட்டமிடும் பூமிக்கு தென்மேற்கு திசையில் கிணறு, ஆழ்துளை கிணறு, பூமிக்கு அடியில் நீர் தொட்டி ஆகியவை இருந்தால் அதை வாங்கக்கூடாது. அவற்றை நீக்கிவிட்டல் வாங்கலாம்.
  • கோவிலுக்கு எதிரில் குறிப்பாக உக்கிர கடவுள்களின் கோவில்களுக்கு எதிரில் இருக்கும் பூமியை வாங்கக்கூடாது.
  • தேவாலயம் மசூதிக்கு எதிரில் இருக்கும் பூமியை வாங்கக்கூடாது.
  • பள்ளிக்கூடத்திற்கு எதிரில் இருக்கும் பூமியை வாங்கக்கூடாது.
  • பூமிக்கு தெற்கில் பெரிய தோட்டம் இருந்தால் அதை வாங்கக்கூடாது. .
  • நாம் வாங்க நினைக்கும் பூமிக்கு எதிரில் பெரிய தொழிற்சாலை, கால்நடைகளை கட்டும் இடம் வடக்கில் அல்லது கிழக்கில் இருந்தால் அதை வாங்கக்கூடாது.
  • நாம் வாங்க திட்டமிடும் பூமிக்கு தென்கிழக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படும் அதனால் அதை வாங்கக்கூடாது.
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular