சியாமளா தேவி அம்மன்(Sri Shyamala Devi Temple)
வரலாறு:
சரஸ்வதியின் அம்சமான மாதங்கி என்று அழைக்கப்படும் அன்னை சியாமளா தேவி பறவைகள், வனம், வேட்டை போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையவள். இவளுக்கு வனதேவதை என்ற பெயரும் உண்டு.
சிறப்பு:
தசமஹா வித்யா என்றழைக்கப்படும் 10 தேவிகளில் சியாமளாதேவி ஒன்பதாவது தேவியாவாள்.இசை , நடனம் முதலிய அனைத்து கலைகளுடன் தொடர்புடைய இவள் கையில் வீணையை கொண்டு சரஸ்வதியின் உருவமாக விளங்குகிறாள்.
சியாமளா தேவியை வழிபடுவதன் மூலம் கல்வியில் சிறந்து விளங்கலாம்.
பரிகாரம்:
ஆசிரியர்களாக விரும்புபவர்கள் சியாமளா தேவியை வழிபடுவது அவசியம். அனைத்து விதமான கலைகளிலும் சிறந்து விளங்க சியாமளா தேவியை வழிபடுவது சிறப்பாகும்.
வழித்தடம்:
சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் பேருந்து வழித்தடத்தில் அமைந்துள்ள ரத்தினமங்கலம் என்ற கிராமத்தில் 108 அம்மன் உடன் ஒரு அம்மனாக குடிகொண்டுள்ளார்.