செண்பகவள்ளி அம்மன்
செண்பகவள்ளி அம்மன் வரலாறு:
மதுரையிலிருந்து 96 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கோவில்பட்டி எனும் ஊரில் ஆலயம் அமைந்துள்ளது 1000 முதல் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் செண்பகவேந்தன் என்ற அரசனால் கட்டப்பட்டது.
சிறப்பு:
இவ்வாலயத்தில் மே, ஜூன் மாதத்தில் நடைபெறும் தேவி வளையல் பண்டிகை, ஆடிப்பூரம் மற்றும் 12 நாட்கள் நடைபெறும் திருக்கல்யாணம் ஆகியவை முக்கிய பண்டிகைகள் ஆகும். இவ்வாலயத்தில் செண்பகவல்லி அம்மன் சிலையை நிற்பது போல் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் அலங்காரங்கள் அனைத்தும் அமர்ந்து இருப்பது போலவே செய்யப்படுகின்றன.
பரிகாரம்:
நோய்களில் இருந்து விடுபட, திருமணம் கைகூட, குழந்தை வரம் பெற, வணிகத்தில் செழிக்க, விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்க, மக்கள் தங்கள் பிரார்த்தனைகளை இக்கோயிலிலுள்ள செண்பகவள்ளி அம்மனின் பாதங்களிலும் சிவ பகவானின் பாதங்களில் வைத்து பிரார்த்தனை செய்வதால் நிச்சயம் வீண் போகாது என்பது ஐதிகம்.
மேலும் அம்பாளுக்கு விளக்கு ஏற்றுவது புதிய வஸ்திரங்கள் அளிப்பது பால் மற்றும் சந்தன அபிஷேகம் செய்வது இக்கோவிலின் வழக்கமாகும்.
வழித்தடம்:
கோவில்பட்டி புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் செல்கின்றன.












