கார்த்திகை நட்சத்திரத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்
கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் நின்றால்:
- உக்கிர அதாவது கோப குணம் உள்ளவன்.
- தலை நீண்டு இருக்கும்.
- கடின கொடுஞ்சொல் பேசுபவன்.
- அழகற்ற விகாரமான பல்வரிசை உள்ளவன்.
- சாதாரண அறிவாளி.
கார்த்திகை நட்சத்திரத்தில் சந்திரன் நின்றால்:
- சூடான தேகம் உள்ளவன்.
- அதிகம் முரடன்.
- தலையை பற்றிய நோய்கள் உண்டு.
- கொடுஞ்சொல்லான்.
- இவனுக்குப் படிப்பு அதிகம் இருக்காது
கார்த்திகை நட்சத்திரத்தில் செவ்வாய் நின்றால்:
- தலையில் அடிபட்டு காய வடு உண்டாகும்.
- அதிக காய்ச்சல் காணும்.
- வைசூரி ஏற்படும்.
- பல்நோய் காணும்
- உஷ்ண தேகி.
- அவசர புத்தி.
- குறைந்த படிப்பு ,சிடுமூஞ்சி தனம், அடிதடி சண்டையில் ஈடுபாடு, ஏமாற்றுபவன்.
- மருத்துவத் துறை படிப்பு அல்லது மருத்துவ தேர்ச்சி, அதிகம் சிவந்த நிறம் அதிகம் எதிலும் பற்று இல்லாதவன்
- ஆயுதம் நெருப்பு விபத்துக்களால் பயம் உண்டு.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
கார்த்திகை நட்சத்திரத்தில் புதன் நின்றால்:
- சாதாரண அடங்கிய சுபாவம்.
- எழுத்து சொல் இவற்றில் திறமை.
- தொண்டை நோய் மற்றும் தோல் நோயும் உள்ளவன்
கார்த்திகை நட்சத்திரத்தில் குரு நின்றால்:
- புத்திர பாக்கியம் இல்லை.
- தலையில் காயம், அறிவாளிகள் வித்வான்கள் உடன் சண்டை,பூசல்,எழுதுதல், சொற்பொழிவு இவற்றில் திறமை.
- செல்வம் மற்ற தரித்திரன்.
கார்த்திகை நட்சத்திரத்தில் சுக்கிரன் நின்றால்:
- சுக்கிரன் நின்றால் இரு மனைவிகள் அமையலாம்.
- பெண்ணானால் கடின சுபாவம் உள்ளவள்
- காம இச்சை அதிகம்.
- கணவன் மனைவி சண்டை ,காதலில் தோல்வி, ஆயுதம், ரசாயனப் பொருள்கள் முதலிய துறைகளில் தொழில், மருத்துவம், துணி வெளுக்கும் தொழில், சாயம் போடுபவன், பொறியியல் தொழில் போன்றவை அமையலாம்.
கார்த்திகை நட்சத்திரத்தில் சனி நின்றால்:
- எப்பொழுதும் நோயாளி
- பயங்கரமான ஆபத்து விபத்துக்களில் அடிக்கடி சிக்கிக் கொள்பவன்.
கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்படும் நோய்கள் கண்டங்கள் முதலியவை:
- பிறந்த ஆண்டில் புரியாத பல காரணங்களால் கண்டம்.
- மூன்றாவது வயதில் வெதுப்பு அல்லது வெப்ப நோயால் கண்டம். வெப்ப நோய் என்பது காய்ச்சலும் ஆகலாம்.
- ஐந்தாவது வயதில் ஜல கண்டம்.
- ஏழாவது வயதில் நெருப்பால் கண்டம்.
- பத்தாவது வயதில் உயரத்திலிருந்து விழுவதால் கண்டம்.
- பதினோராவது வயதில் நாலுகால் மிருகத்தால் கண்டம்.( நாலு சக்கர வண்டிகள் மோதி கொள்வதையும் குறிக்கும்)
- 15வது வயதில் விஷத்தால் கண்டம். அதாவது நச்சு உணவு முதலியன.
- 21-வது வயதில் பெண்களால் கலகம். அவர்கள் செய்யும் கலகம் சூழ்வினை முதலியன.
- 27ஆவது வயதில் அரையப்பால் கண்டம். அதாவது முறைகேடான வகையில் பல பெண்களுடன் தொடர்பு கொண்டு அதனால் ஏற்படும் ரகசிய நோய்கள். அக்காலத்தில் அரையாப்பு எனப்படும் தற்போது இது எய்ட்ஸ் என்னும் கொடிய நோயை குறிக்கும்.
- நாற்பதாவது வயதில் கல்லீரல் கண்டம்
- 45-வது வயதில் சூலை வாதத்தால் கண்டம். விலாவிற்கு கீழே ஏற்படும் வலி. வயிறு சுருட்டி வலியை ஏற்படுத்தும் சூலை நோய் முதலியன.
- ஐம்பதாவது வயதில் வயிற்றுக் கடுப்பால் கண்டம். இது சீதபேதி, இரத்தபேதி முதலியவற்றைக் குறிக்கும்
- 55-வது வயதில் குடல் வாதத்தால் கண்டம். இது குடலில் ஏற்படும் வலி முதலியவற்றைக் குறைக்கும்.
- அறுபதாவது வயதில் மூல நோயால் கண்டம்.
- 78வது வயதில் பித்தத்தால் கண்டம்.
- இது தாண்டினால் 80 வயது சென்று வரும் கார்த்திகை மாதம் முப்பத்தி இரண்டாவது நாள் பூர்வ பட்ச திரயோதசி திதி சனிக்கிழமை சேர்ந்து வரும் நாளில் ஏழு நாழிகைக்கு மேல் மரணம்.
- இதுவும் கடந்தால் 91வது சென்று வைகாசி மாதம் அமரபட்சம் திருதியை 7 நாழிகை சென்று பித்தம் அதிகமாகி மரணம்இவன் பிறந்த லக்னம் நட்சத்திர சாரம் சூரியனுடைய தான் ஆனால் குணவான் ஆனால் தரித்திரர்
இவன் பிறந்தநாள் இலக்கின நட்சத்திர சாரம் சந்திரனுடைய தான் ஆனால் ராஜ புருஷன் அதாவது மிகவும் மேல் நிலையில் உள்ளவன் பலராலும் விரும்பப்படும்
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லக்கினம் வாங்கிய சாரத்தின் பலன் :
- இவன் பிறந்த லக்கின நட்சத்திர சாரம் சூரியன் உடையதானால் குணவான் அனால் தரித்திரன்
- இவன் பிறந்த லக்ன நட்சத்திர சாரம் சந்திரனுடையதனால் ராஜ புருஷன் ,அதாவது மிகவும் மேல் நிலையில் உள்ளவன் .
- இவன் பிறந்த லக்ன நட்சத்திர சாரம் செவ்வாய் உடையதானால் தேஜஸ் உள்ளவன், அதாவது தோற்றப்பொலிவு உள்ளவன்.
- இவன் பிறந்த லக்ன நட்சத்திர சாரம் குரு உடையதானால் ராஜ புருஷன் அதாவது மேல்நிலையில் உள்ளவன்
- இவன் பிறந்த லக்ன நட்சத்திர சாரம் சுக்கிரன் உடையதானால்பயிர் தொழில் விருத்தியும், அதனால் வருவாயும், நிறைந்த கல்வியும் உடையவன்.
- இவன் பிறந்த லக்ன நட்சத்திர சாரம் சனி உடையதானால் திருடன்
- இவன் பிறந்த லக்ன நட்சத்திர சாரம் ராகு உடையதானால் கள்ளன், மூடன் ஆனால் தெய்வ பக்தி உடையவர்.
- இவன் பிறந்த லக்ன நட்சத்திர சாரம் செவ்வாய் உடையதானால் கள்ளன் ஆனால் வீரன் ,இருப்பினும் நோயுடையவன் .
மேலும் சில தகவல்கள் :
- கிருத்திகையில் புதன் கூடினால் அமிர்தயோகம்.
- கிருத்திகையில் சுக்கிரன் கூடினால் சித்தயோகம்
- கிருத்திகையில் ஞாயிறும் பஞ்சமியும் கூடினால் விஷ யோகம்
- கிருத்திகையில் நவமியும் குருவும் கூடினால் பிராண யோகம் அதாவது உயிருக்கு ஆபத்து என கூறலாம்.
- கிருத்திகையில் பிரதமை கூடினால் வர யோகம். இதில் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர்சாதம் உண்டு புறப்படுவது நல்லது.