திருநெல்வேலி பேராத்து செல்லி அம்மன்
வரலாறு:
திருநெல்வேலி மாவட்டத்தில் கடையநல்லூர் அருகே வடக்கு வாசல் என்ற இடத்தில் பேராத்து செல்லிஅம்மன் ஆலயம் உள்ளது. இவளுக்கு பிட்டபுரத்து செல்லி அம்மன் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
சிறப்பு:
பல்லாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவில் தனிச்சிறப்பு பெற்றது. இத்திருத்தலம் தீர்த்தத்தை நோயாளிகள் முகத்தில் தெளிப்பதன் மூலம் அவர்களை துன்புறுத்தும் நோய் விரைவில் குணமாவதை பலர் கண்கூடாக கண்டு வியந்துள்ளார்கள். இது இக்கோவிலின் தலையாய சிறப்பாகும். இதற்காகவே ஏராளமான பக்தர்கள் இத்தளத்திற்கு திரண்டு வருகின்றனர்.
பரிகாரம்:
பிறந்த குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் தன் குழந்தைகளுடன் இங்கு வந்து அம்மனை வணங்கி அங்கு கொடுக்கப்படும் தீர்த்தத்தை குழந்தைகளின் முகத்தில் தெளிப்பதன் மூலம் குழந்தைகள் பூரண நலம் பெறுவர். மேலும் இங்கு கட்டப்படும் மஞ்சள் கயிறும் மிக சக்தி வாய்ந்தது ஆகும். அனைத்து விதமான தீயசக்திகளிடம் இருந்து நம்மை காப்பாற்றி அச்சமின்றி வாழ செய்பவள்.
வழித்தடம்
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் என்னும் ஊருக்கு அருகில் வடக்கு வாசல் என்னும் ஊரில் இத்தலம் உள்ளது. திருநெல்வேலி கடையநல்லூர் வழித் தடத்தில் இருந்து பேருந்து வசதிகள் இவ்வாலயத்திற்கு உள்ளது.