மாங்காடு காமாட்சி அம்மன்
மாங்காடு காமாட்சி அம்மன் வரலாறு
‘மாங்காடு காமாட்சி’ (Mangadu Kamakshi Amman) அம்மன் கோவில் பழமையான காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சிறப்பு:
‘காமா’ என்ற வார்த்தைக்கு அன்பு, ஈர்ப்பு, காந்தத்தன்மை என்று பொருள். காமாட்சி என்றால் கவர்ச்சி தன்மை உடைய கண்களைக் கொண்டவர் என்பது பொருள். சிவபெருமானின் கட்டளைப்படி பஞ்சாக்கினி என்ற இடத்தில் காமாட்சி அம்மன் தவம் மேற்கொண்டார். தவத்தின் முடிவில் அவ்விடம் முழுவதும் நெருப்பு மையமானது. அப்போது ஆதிசங்கரர் தோன்றி ஸ்ரீ சக்கரம் ஒன்றை அமைத்து நெருப்பை குளிர வைத்தார். இக்கோவிலில் இருக்கும் அச்சக்ரத்திற்கு குங்கும அர்ச்சனை மட்டும் செய்யப்படும். அம்மன் மக்களின் வளர்ச்சிக்காக பத்மாசன வடிவில் அருள் புரிகின்றார்.காஞ்சிபுரத்தில் இந்த ஒரு பார்வதி அம்மன் கோவில் மட்டுமே உள்ளது.
தலவிருட்சம்: மாமரம்
பரிகாரம்:
எலுமிச்சை பழத்தை பயன்படுத்தி 6 வாரம் விரதம் மேற்கொண்டு இந்த(Mangadu Kamakshi Amman) அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.
இதையும் கொஞ்சம் படிங்க : திருமண வரம் அருளும் மதுரை மீனாட்சி அம்மன்!!
இந்த அம்மன் திருமணத்திற்காக தவத்தை மேற்கொண்டார் கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைக் கட்டிக்கொண்டு இந்த அம்மனை வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும். இந்த தவத்தை ஆண்களும் மேற்கொள்ளலாம். விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டவும், உயர்பதவி கிடைக்கவும் வழிபடுகின்றனர்.
எப்படி செல்வது:
சென்னையில் கோயம்பேடு, பூந்தமல்லி பேருந்து நிலையங்களில் இருந்து பூந்தமல்லி செல்லும் வழியில் குமணன் சாவடி என்ற இடத்தில் இறங்கி ஷேர் ஆட்டோ, ஆட்டோ ஆகியவற்றில் பயணித்து ‘மாங்காடு காமாட்சி அம்மன்’ ஆலயத்தை அடையலாம்.