தாந்த்ரீக பரிகாரங்கள்-பகுதி-3
🔹கொடுத்த கடன் தொகைகள் திரும்ப கிடைக்காமல் இருப்பின் ஆண்கள் தொடர்ந்து புதன்கிழமைகளில் காலை 6 மணிக்கு முன்னர் சவரம் செய்து வர கடன் வசூலாகும்.
🔹வியாபாரம் மற்றும் குழந்தைகள் கல்வியில் தடைகள் ஏற்பட்டால் ஆன்மீக புத்தகங்களை அச்சிட்டு இலவச விநியோகம் செய்ய தடைகள் விலகும்.
🔹சிவன் கோவிலுக்கு தொண்டுகள் செய்ய அரசாங்கத்தால் வியாபாரத்திற்கு ஏற்படும் தொல்லைகள் நீங்கும்
🔹நவதானியங்களை மஞ்சள் துணியில் முடிந்து கடை ஆபீஸ் வாசலில் கட்டி கல்லாவிலும் போட்டு வைக்க வியாபாரம் நஷ்டம் என்பதே இருக்காது.
🔹பூர்வீக சொத்து கிடைக்க வீட்டிலேயே திருச்செந்தூர் முருகன் படம் வாங்கி வைத்து செவ்வாய் தோறும் செவ்வரளி பூவால்27 வாரங்கள் ( செவ்வாய்ககிழமைகள் மட்டும் ) அர்ச்சித்து வர கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்கும்.
🔹சித்திரை நட்சத்திரத்தில் விரதமிருந்து முருக பெருமானையும் வள்ளியையும் வழிபட காதல் முயற்சிகள் கை கூடும் .
🔹பொருளாதார முன்னேற்றம் ஏற்பட உங்கள் மனைவிக்கு செருப்பு வாங்கிதரவும் வெள்ளிக்கிழமையில்.
🔹மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்கள் வ்ருமான தடை அகல மீனுக்கு பொரி போடவும்
🔹ஜாதகத்தில் பெண்களுக்கு செவ்வாய் கடகத்தில் நீசமாக இருந்தால் கோவிலுக்கு குங்குமம் தானம் தரவும்.