சனி பெயர்ச்சி பலன்கள்-2023:மேஷம்|Sani Peyarchi Palangal 2023

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

சனி பெயர்ச்சி பலன்கள்-2023:மேஷம்யோக சனி

முருகப்பெருமானின் அருள் பெற்ற மேஷ ராசி அன்பர்களே!!

இதுவரையில் மேஷ ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான், அவர் அமர்ந்த இடத்தில் வழங்கிய நற்பலன்களை விட அவர் பார்த்த இடங்களுக்கு வழங்கிய பாதகமான பலன்களை அதிகம்.

சனி பெயர்ச்சி நாள் -Sani peyarchi Date

இந்த சுபகிருது வருடம், உத்திராயணம் ஹேமந்த ருது. தை மாதம் 3-ஆம் தேதி (17.1.2023) கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) தசமி, செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திரம், 4-ஆம் பாதம், விருச்சிக ராசி. கண்ட நாம் யோகம், பவ கரணம் கூடிய யோக சுப தினத்தில் கடக லக்னத்தில் விருச்சிக ராசியில், சிம்ம நவாம்சத்தில், கடக நவாம்ச ராசியில் சனி பகவான் மகர ராசியில்இருந்து கும்பராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சனி பெயர்ச்சி பலன்கள்-2023

மகரச்சனி உங்கள் முன்னேற்றத்திற்கு தடைகளையும், உடல் உபாதைகளையும், செல்வாக்கு ,கௌரவம் போன்றவற்றிற்கு பங்கத்தையும், வீட்டிலும், வெளியிலும் பிரச்சனைகளையும், பண பற்றாக்குறையும், வருமானத்தில் சிரமத்தையும் வழங்கி உங்களை ஆட்டிப்படைத்து இருப்பார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் வருமானத்தில் சங்கடம், குடும்பத்தில் பிரச்சனை, உடலில் சங்கடம், மனதில் துயரம், கண்டம் என்று அவதிப்பட்ட உங்களுக்கு 17.01.2023 முதல் ராசிக்கு 11 ஆம் வீடான லாப ஸ்தானமான கும்ப ராசியில் பிரவேசம் செய்யவிருக்கிறார் சனி பகவான்.

சனிபகவான் 12 வீடுகளில் சஞ்சரித்து வரும்போது அவர் சஞ்சரிக்கும் வீடுகளுக்கு ஏற்ப ஒரு ஒரு ராசிக்கும் ஒரு பலன்களை வழங்குவார் என்றாலும் எல்லா ராசியினருக்கும் 3,6,11 வீடுகளில் அவர் சஞ்சரிக்கும் காலங்களில் அந்த வீட்டிற்குரிய பலன்களை யோகப் பலன்களாக வழங்கி வாழ்வின் மேல் மட்டத்திற்கு அந்த ராசியினரை கொண்டு செல்வார் சனி பகவான்.

மேஷ ராசிக்கு தொழில் ஸ்தானத்திற்கும், லாப ஸ்தானத்திற்கும் உரியவர் சனி பகவான். கடந்த இரண்டரை ஆண்டுகளாக பத்தாமிடமான தொழிற்ஸ்தானத்தில் சஞ்சரித்து அவர் அமர்ந்த இடத்திற்கு வழங்கிய நற்பலன்களை விட பார்த்த இடங்களுக்கு வழங்கிய பாதகமான பலன்களை அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் 17.1.2023 மாலை06.03 மணி முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகும் சனி பகவான் உங்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கப் போகிறார்.

தனவரவு இந்த காலத்தில் மிகவும் அதிகமாக இருக்கும். எண்ணியவை யாவும் எளிதில் முடியும். பதவி, பாராட்டு, பரிசு போன்றவற்றை எதிர்பார்க்கலாம். எல்லாவகையிலும் ஒருவிதமான மகிழ்ச்சியான சூழ்நிலையை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க இது மிகவும் வாய்ப்பான காலம்.

சிலருக்கு அன்னிய பெண்கள் மூலம் லாபம் ஏற்படலாம். மூத்தவர்கள் வகையில் பரிபூரண ஒத்துழைப்பு கிடைக்கும். நம்பிக்கையோடு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கலாம். எண்ணியவை யாவும் ஈடேறும். இழந்த பொருள் மீண்டும் வரும்.

இளம் பெண்கள் தொடர்பு, குடும்பத்தில் மகிழ்ச்சி, குதூகலம், ஒப்பந்த தொழிலாளர் உயர்வு போன்ற நல்ல பலன்கள் ஏற்படும்.

சனி பெயர்ச்சி பலன்கள்-2023

சனிபகவானின் மூன்றாம் பார்வை பலன்கள்

சனிபகவான் தனது மூன்றாம் பார்வையால் உங்களது ராசியை பார்க்கிறார். ஆகையால் உங்கள் உடல் நலத்தில் கவனம் தேவை. தேவையற்ற வீண் விவாதங்களில் பங்கெடுக்க வேண்டாம். மேலும் யாரிடமும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

சனியின் ஏழாம் பார்வை பலன்கள்

தனது ஏழாம் பார்வையால் உங்கள் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தை பார்க்கும் சனி பகவானால் புத்திரர்-புத்திரிகளால் வேதனைகளை சந்திக்க வேண்டிய நிலையும், குடும்பத்தில் குழப்பமும், பூர்வீக சொத்துகளில் பிரச்சனையும், சண்டை, சச்சரவுகளும் உண்டாகலாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் குழப்பத்தில் சிக்கித் தவிப்பீர்கள். வேதனை தரும் நிகழ்ச்சிகளால் அதிர்ச்சிக்கு ஆளாகலாம்.

சனியின் பத்தாம் பார்வை பலன்கள்

தனது பத்தாம் பார்வையால் உங்கள் ஆயுள் ஸ்தானத்தை பார்க்கும் சனிபகவானால் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். பல்வேறு இடர்பாடுகளும் ஏற்படும். இவையெல்லாம் ராசிக்கு 11 ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி பகவான் ஸ்தான பலனும், பார்வை பலன்களால் உண்டாகும் பலன்களும் ஆகும். என்றாலும் 11ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி பகவானால் உங்கள் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்

ஒரு முறை சனி கிழமை சனி ஓரையில் திருக்கொள்ளிக்காடு சென்று சனி பகவானை வழிபாட்டு வரவும்.முடிந்த வரை உடல் ஊனமுற்றவர்களுக்கு ஏதேனும் உதவி செய்யவும்.

Leave a Comment

error: Content is protected !!