Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 கன்னி

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 கன்னி

குரு பெயர்ச்சி பலன்கள் (Guru Peyarchi Palangal) – கன்னி

சித்திரை மாதம் 9ம் தேதி (22.04.2023) சனிக்கிழமை, உதயாதி நாழிகை 43:30 அதாவது இரவு 11: 27 மணிக்கு ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம் மீன ராசியில் இருந்து அஸ்வினி நட்சத்திரம் 1ம் பாதம் மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 கன்னி
குரு பெயர்ச்சி கிரக நிலைகள் -2023

புதன் பகவானின் அருள் பெற்ற கன்னி ராசி அன்பர்களே!!! வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 4 மற்றும் 7-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு ஆயுள் ஸ்தானமான எட்டாவது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே விரயம்(12-மிடம் ) வாக்கு(2-மிடம்) தாய்(4மிடம் ) ஸ்தானங்களில் பதியும்.

இன்மை எட்டினில் வாலி பட்டமிழந்து போம்படியானது

வாலி பட்டம் இழந்த காலம்.எனவே எந்த வகையிலும் இழப்பீடு என்பது இருந்தே தீரும்.அட்டம குரு தொட்டது துலங்காது என்பார்கள்.

கேளப்பா எட்டுக்கு வேசி கள்ளன் கெடுதியுள்ள மனைவியும்
பகை நோயால் கண்டம் ,ஆளப்பா பகையுடன் பொருள் சேதம்
அப்பனே அவமானம் கொள்வான் -புலிப்பாணி

ஆக பொருள் இழப்பீடு ,புகழ் இழப்பீடு,உயிர் இழப்பீடு ஆகிய இழப்பீடுகள் உண்டு.புதிய முயற்சி தடை,சுபகாரிய தடை,விரும்பத்தகாத இடமாற்றம்,பிள்ளைகளால் தொல்லை ஆகியவை ஏற்படலாம்.

வேலை -அலுவலகம்

பணி செய்யும் இடத்தில் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிடைக்கும். அதே சமயம் வீண் தர்க்கமும், வேண்டாத வாதங்களும் யாரிடமும் கூடாது. உடன் இருப்போரின் வழிகாட்டலை அவசியம் கேளுங்கள். அதே சமயம் அதில் சரி எது தவறு எது என்பதை சிந்தித்து தீர்மானியுங்கள். பொறுப்புகள் அதிகரித்தாலும் புலம்பலும், சலிப்பும் இல்லாமல் செயல்பட்டால் சீக்கிரமே சீரான முன்னேற்றம் வரத் தொடங்கும். பிறர் குறைகளை பெரிதுபடுத்தி பேசுவது கூடவே கூடாது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 கன்னி

குடும்பம்

குடும்பத்தில் கசந்த காலம் மாறி வசந்த காலம் தொடங்கும். தம்பதியினர் இடையே இருந்த மனக்கசப்புகள் மாறும். இந்த சமயத்தில் பழைய சினத்தை புதுப்பிக்க வேண்டாம். சுப காரிய தடைகள் விலகும். உறவுகள் மத்தியில் ஒதுங்கியும் பதுங்கியும் என்ற நிலை மாறும் போது பாசத்தை காட்டுங்கள். பாய்ந்து கெடுத்து விடாதீர்கள். வாரிசுகளிடம் கண்டிப்பை விட கனிவு தான் நல்லது. வரவை சேமிக்க பழகுங்கள்.

தொழில்

செய்யும் தொழிலில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகள் முழுமையாக இருந்தால் முன்னேற்றம் தொடர்ச்சியாக இருக்கும். அயல் நாட்டு வர்த்தகத்தில் நேரடி கவனம் செலுத்துங்கள். சோம்பலை அறவே விரட்டுங்கள். வர்த்தக கடன்களை அவசியம் இல்லாமல் வாங்க வேண்டாம்.

அரசு -அரசியல்

அரசு அரசியல் சார்ந்தவர்களுக்கு செயல்கள் எதிலும் நிதானமும், நேர்மையும் அவசியம். மேல் இடத்தில் உரிய அனுமதி இல்லாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டாம். வாக்குறுதி தருவதோ, எதையும் படித்துப் பார்க்காமலேயே கையெழுத்திடுவதோ உங்களுக்கு நீங்களே சங்கடத்தை தேடிக் கொள்வதாக ஆகிவிடலாம் உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.

மாணவர்கள் மற்றும் கலை துறையினர்

மாணவர்கள் அன்றைய பாடங்களை அன்றன்றே படிப்பது நல்லது. நட்பு வட்டாரங்களில் வேண்டாத சவகாசம் இருந்தால் உடனே உதறி விடுங்கள். கலை படைப்புத் துறையினர் ரகசியங்கள் எதையும் பராம ரகசியமாக வைத்துக் கொள்வது சிறிய வாய்ப்பாக இருந்தாலும் சின்சியராக செயல்படுங்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 கன்னி

கவனம்  

வாகன பயணத்தில் கவனச் சிதறல்கள் கூடாது. வழிப்பாதையில் இருட்டான இடங்களில் இறங்குவதை தவிர்த்து விடுங்கள். ரத்தத் தொற்று நோய்கள், விஷ பூச்சிக்கடி, பரம்பரை நோய் , சுவாச குறைபாடு, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம்.

பலன் தரும் பரிகாரம்

அருகில் இருக்கும் நரசிம்மர் கோவிலுக்கு சென்று வாருங்கள். பரிக்கல், சிங்கர் குடி, பூவரசன் குப்பம் ஆகிய நரசிம்ம தலங்களுக்கு ஒருமுறை சென்று வணங்கி விட்டு வாருங்கள். ஆளரிநாதர் அருளும் குருவின் அருளும் உங்கள் வாழ்க்கையை பசுமையாக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!