கிருஷ்ண ஜெயந்தி
மேஷம்
கிருஷ்ண பகவானை சிவப்பு ஆடையால் அலங்கரித்து கற்கண்டு மற்றும் மாதுளையை பிரசாதமாக கொடுப்பது நல்லது.
ரிஷபம்
வெள்ளை நிற பழங்கள் மற்றும் தேங்காய் லட்டு போன்ற வெள்ளை நிற இனிப்புகளை படைப்பது சிறந்தது.
மிதுனம்
கிருஷ்ண பகவானை பச்சை நிற ஆடைகள்,இலைகள் மற்றும் மயில் இறகு கொண்டு அலங்கரித்து பச்சை நிற பழங்களை நைவேத்தியமாக படைக்கலாம்.
கடகம்
வெள்ளை மற்றும் வெள்ளி நிறங்களால் கிருஷ்ணரை அலங்கரித்து, பால், வெண்ணை போன்ற வெள்ளை நிற நைவேத்தியங்களை வழங்குவது நல்லது.
சிம்மம்
சிவப்பு நிற பழங்கள், பூக்கள் மற்றும் ஆடைகளை கிருஷ்ணருக்கு அணிவித்து, ஆப்பிள், மாதுளை பயன்படுத்தி தயாரித்த இனிப்புகளை கொடுக்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் கிருஷ்ணருக்கு பச்சை நிற ஆடைகள், பச்சை நிற பழங்கள் போன்றவற்றை வழங்குவது நல்லது.
துலாம்
கிருஷ்ணருக்கு வெள்ளை நிற ஆடை சாற்றி, வெள்ளை நிற இனிப்புகள், வெண்ணெய், தயிர், நெய் போன்றவற்றை வழங்கலாம்.
விருச்சிகம்
சிவப்பு நிற ஆடைகளை கிருஷ்ணருக்கு அணிவித்து ஆப்பிள், மாதுளை, தர்பூசணி, போன்ற சிவப்பு நிற பழங்கள் மற்றும் பூக்களை வழங்குதல் நல்லது.
தனுசு
மஞ்சள் நிற ஆடைகள் மற்றும் பூக்களைச் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகள் அல்லது பானங்களை கிருஷ்ணருக்கு பிரசாதமாக படைக்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து கிருஷ்ண பகவானுக்கு மஞ்சள் மற்றும் சிவப்பு நிற பலகாரங்களை படைப்பது சிறந்தது.
கும்பம்
நீல நிற ஆடைகளால் கிருஷ்ண பகவானை அலங்கரித்து அவருக்கு பிடித்த தயிர் மற்றும் பாதுஷா இனிப்பை வழங்குவது நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் மஞ்சள் நிற ஆடைகளை கிருஷ்ணருக்கு அணிவித்து மஞ்சள் நிற இனிப்புகளை படைப்பது நல்லது.