அருள்மிகு பாண்டவ தூத பெருமாள்
காஞ்சிபுரக் கோயில்கள் அத்தனைக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புண்டு. திருமால் பலமுறை பக்தர்களுக்கு நேரிடையாகக் காட்சி தந்த புண்ணிய பூமி யமுனைக் கரையிலிருந்த கிருஷ்ண பரமாத்மா காஞ்சிபுரத்தில் அருள்பாலித்த பல அதிசய சம்பவங்கள் இங்கு உண்டு, பிரார்த்தனை செய்தால் பகவான் எங்கு வேண்டுமானாலும் வந்து அருள்பாலிப்பார் என்பதை காதால் கேட்டதுண்டு. ஆனால் இந்த திருப்பாடகத்தில் நடைமுறையாக நடந்ததும் உண்மை,
காஞ்சிபுரம் திரு ஏகாம்பரநாதர் கோயிலுக்கு தென்மேற்கே அமைந்திருக்கிறது திருப்பாடக பெருமாள் கோயில்.மூன்று நிலை இராஜ கோபுரம் ஒரே ஒரு பிராகாரம்.
மூலவர் ஸ்ரீ பாண்டவத் தூதப் பெருமாள் |
விமானம் சத்ர விமானம் 28 அடி உயரத்தில் பெருமாள் வீற்றிருக்கிறார் |
தாயார் ருக்மணி தேவி |
தீர்த்தம் மத்ஸ்ய தீர்த்தம் |
பாண்டவர்களின் பெரிய பலம் கிருஷ்ணன், இதையறிந்த துரியோதனன் கண்ணனை அழித்து விட்டால் பாண்டவர்களை எளிதில் வென்று விடலாமென்று எண்ணி, கண்ணனை தன் இடத்திற்கு நயவஞ்சகமாக அழைத்தான் கண்ணன் அமரக்கூடிய இடத்தில் ஒரு ஆசனத்தைப் போட்டு அதனடியில் ஒரு நிலவறையை அமைத்தான் அந்த ஆசனத்தில் அமர்ந்தவுடன் கண்ணன், அந்த ஆசனத்தோடு பாதாளத்தில் விழுவான், அங்கிருக்கும் மற்போர் வீரர்கள், உடனே கண்ணனைக் கொல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டி அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை யெல்லாம் செய்தான் துரியோதனன். கண்ணனும், துரியோதன் அழைப்பை ஏற்று, அவனிடத்திற்கு வந்து அங்கு தனக்காகப் போடப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்தான் துரியோதன் திட்டப்படி அந்த ஆசனம் பாதாளக் குகையில் விழ – அங்கு இருந்த வீரர்கள் கிருஷ்ணனை கொல்ல முயற்சி செய்தனர் பசுவால் கிருஷ்ணனோ விஸ்வரூபம் எடுத்து அந்த மல்யுத்த வீரர்களைக் கொன்றார்.
இந்தக் கதையைக் கேட்ட ஜெனமே ஜய அரசள், காஞ்சிபுரத்தில் அச்வமேத யாகம் செய்து பகவான் கிருஷ்ணனை வரவழைத்து அன்றைக்கு பாதாள் அறையில் விஸ்வரூபம் எடுத்துக் கொன்ற காட்சியை நினைவுபடுத்தி – தனக்கு இங்கேயே அந்த விஸ்வரூபக் காட்சியைக் காட்ட வேண்டும் என்று வேண்டினான் பக்தர்களுக்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அந்த விஸ்வரூப காட்சியை காஞ்சிபுரத்தில் காட்டிய இடம்தான் இந்த திருப்பாடகம் திருமங்கை பூதத்தாழ்வார் பேயாழ்வார் திருப்பாடக ஸ்தலத்தை மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.
பரிகாரம்:
பசுவான் நமக்கு மறைமுகமாக உதவி செய்ய வேண்டும் என்றால் அதற்கு மிக சாதாரண பிரார்த்தனைகளே போதும் ஆனால் பகவாள் நேரிடையாகவும் தரிசனம் தர வேண்டுமெனில் ‘ஹோமம்’ செய்வதின் மூலம் அந்த பாக்கியத்தைப் பெறலாம் என்பது உண்மை காரியத் தடைகள் நீங்க வேண்டுமென்றாலும் புதிய முயற்சியில் வெற்றி வாகை சூட வேண்டும் என்றாலும் திருப்பாடகம் வந்து இங்குள்ள கோயிலில் வளர்பிறை சதுர்த்தி அன்று பெருமாளை வேண்டிக் கொண்டு ஹோமம் செய்தால் போதும் பகவான் அத்தனைத் தடங்கல்களையும் போக்கி ஆனந்தமான வாழ்க்கையை அள்ளித் தருவார்.