ஜோதிடரீதியில் வருங்கால மனைவியின் திசை மற்றும் குணம் அறியும் வழிமுறைகள்-முடிவு

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

ஜோதிடரீதியில் வருங்கால மனைவியின் திசை மற்றும் குணம் அறியும் வழிமுறைகள்
தனுசு ராசியில் சுக்கிரன் நின்றால்
  • ஜாதகருக்கு வரும் மனைவி சாந்தமான அமைதியான தோற்றத்தில் இருப்பாள்.
  • தோற்றத்தில் ஜாதகனை விட மூத்தவர் போன்று இருப்பாள் அல்லது வயதில் மூத்தவளாக இருக்க வாய்ப்பு உண்டு.அல்லது மனைவி உடல் பருத்தவளாக இருப்பாள்.
  • மனைவி சொந்தக்காரியாக இருக்க வாய்ப்பு உண்டு.
  • மனைவி தன் வீட்டிற்கு யாரும் வந்து போவதை விரும்ப மாட்டார்.
  • தனிக்குடித்தனம் செல்வதை விரும்புவாள்.
  • மனைவி பிறந்த ஊர் ஜாதகர் பிறந்த ஊருக்கு வடமேற்கு திசையில் இருக்கும்.
  • மனைவியின் வீடு கிழக்கு மேற்கு வீதியில் வடக்கு பக்கம் வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும்.
  • மனைவியின் வீடு தெரு முனையில் அமைந்திருக்க வாய்ப்புண்டு.
  • மனைவி வீட்டிற்கு அருகே கோயில் ஒன்று இருக்க வாய்ப்பு உண்டு.
  • மனைவிக்கு இரட்டை பெயர் அல்லது இரண்டு பெயர்கள் இருக்க வாய்ப்பு உண்டு.
  • மனைவி அவசியம் இல்லாமல் காரணம் இல்லாமல் எந்த ஒரு செயலிலும் ஈடுபட மாட்டாள் .
மகரத்தில் சுக்கிரன் நின்றால்:
  • ஜாதகனுக்கு வரும் மனைவி நல்ல உடல் உழைப்பாளியாக இருப்பாள்
  • அடக்கமாகவும் எளிமையாகவும் இருப்பாள்
  • முதிர்ச்சியான தோற்றம் இருக்கும்
  • அவள் காரியவாதியாக இருப்பாள்
  • மனைவி சொந்தம் இல்லாமல் அந்நிய பெண்ணாக இருப்பாள்
  • மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு வடக்கு திசையில் இருக்கும்
  • மனைவியின் வீடு தெற்கு வடக்கு வீதியில் கிழக்கு பக்கம் வாசல் உள்ள வீடு அமைந்திருக்கும்
  • மனைவி இருக்கும் வீட்டின் தளம் தெருவில் இருந்து அதிக உயரத்தில் இருக்கும்
  • மனைவி அடிக்கடி தோழிகளின் வீட்டிற்கு சென்று வருவதை விரும்புவாள்
  • மனைவி அடுத்தவர்களுக்கு சேவகம் புரிந்து காரியம் சாதிப்பாள்
மனைவி
கும்பத்தில் சுக்கிரன் நின்றால்
  • ஜாதகருக்கு வரும் மனைவி காரியவாதியாக இருப்பாள்
  • ஆதாயம் தேடாமல் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட மாட்டார்
  • யாரிடமிருந்து எதைப் பெறலாம் என்பதிலேயே குறியாக இருப்பார்
  • அடுத்தவர்களிடம் உதவி கேட்பதற்கு கூச்சப்படமாட்டாள்
  • அமர்ந்த இடத்தை விட்டு நகராமல் எல்லோரையும் வேலை வாங்குவார்
  • தனது பணிகளை பிறர்மீது திணிப்பாள்
  • முதிர்ச்சியான தோற்றம் உடையவள்
  • மனைவி பிறந்த ஊர் ஜாதகர் பிறந்த ஊருக்கு வடக்கு திசையில் இருக்கும்
  • மனைவியின் வீடு கிழக்கு மேற்கு வீதியில் வடக்கு பக்கம் வாசல் உள்ள வீடு அமைந்திருக்கும்
  • மனைவி தோழிகளை தன் வீட்டிற்கு வரவழைத்து அரட்டை அடிப்பாள்
  • மனைவி சொந்தம் இல்லாமல் அந்நிய பெண்ணாக இருப்பாள்
மீனத்தில் சுக்கிரன் நின்றால்
  • ஜாதகருக்கு மனைவி சாந்தமான அமைதியான தோற்றத்தில் இருப்பாள்
  • தோற்றத்தில் ஜாதகரை விட மூத்தவள் போன்று இருப்பாள் அல்லது வயதில் மூத்தவளாக இருக்க வாய்ப்பு உண்டு அல்லது மனைவி உடல் பருமனாக இருப்பார்
  • மனைவி சொந்தக்காரி ஆக இருக்க வாய்ப்பு உண்டு
  • மனைவி பிறந்த ஊர் ஜாதகர் பிறந்த ஊருக்கு வடக்கு திசையில் இருக்கும்
  • மனைவியின் வீடு தெற்கு வடக்கு வீதியில் மேற்கு பக்கம் வாசல் உள்ள வீடு அமைந்திருக்கும்
  • மனைவியின் வீடு தெரு முனையில் அமைந்திருக்க வாய்ப்பு உண்டு
  • மனைவிக்கு இரட்டை பெயர் அல்லது இரண்டு பெயர்கள் இருக்க வாய்ப்பு உண்டு
  • மனைவி அடுத்தவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வாள்
  • அடுத்தவர்கள் வீட்டிற்கு சென்று அதிகாரம் செய்வாள்
  • மனைவி ஆடம்பரப் பிரியராகவும்,பேராசைக்காரியாகவும் இருப்பாள், பிறர் பொருளை அபகரிப்பாள்

முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்

இரண்டாம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்

Leave a Comment

error: Content is protected !!