ஜோதிடரீதியில் வருங்கால மனைவியின் திசை மற்றும் குணம் அறியும் வழிமுறைகள்-தொடர்ச்சி

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

ஜோதிடரீதியில் வருங்கால மனைவியின் திசை மற்றும் குணம் அறியும் வழிமுறைகள்
சிம்மத்தில் சுக்கிரன் நின்றால்:
  • ஜாதகனுக்கு வரும் மனைவி நிர்வாக திறமை உடையவளாகவும் பிறந்த வீட்டில் ராணி போலவும் இருப்பாள்
  • மனைவி தந்தைவழி உறவினராக இருக்க வாய்ப்புண்டு
  • பிறந்த வீட்டில் உள்ளவர்களை நன்றாக வேலை வாங்குவாள்.
  • பெற்ற பிள்ளைகளை பராமரிக்க மாட்டாள்
  • பிள்ளைகளை தாய் வீட்டில் விட்டு வளர்ப்பாள்
  • தன்னை எல்லோரும் தலைவி போல் பாவிக்க வேண்டும் என விரும்புவாள்
  • தந்தைவழி சொத்துக்கள் தனக்கே கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தாய் வீட்டிலிருந்து எப்பொழுதும் எதையாவது எடுத்துக் கொண்டு போவதை வழக்கமாக வைத்திருப்பாள்
  • மனைவியின் பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு தெற்கு திசையில் இருக்கும்.
  • மனைவியின் வீடு கிழக்கு-மேற்கு வீதியில் வடக்கு பக்கம் வாசல் உள்ள வீடு அமைந்திருக்கும்.
கன்னியில் சுக்கிரன் நின்றால்:
  • ஜாதகருக்கு வரும் மனைவி இளமையான தோற்றமுடையவளாக அல்லது ஜாதகனை விட வயதில் மிகவும் இளமையானவளாகவும் இருப்பாள்.
  • மனைவி தன் தோழிகள் வீடுகளுக்கு செல்லாத வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரே ஒரு முறை சென்று வந்தால் போதும் அவர்கள் தன்னைக் கவனிக்கவில்லை அவமானப்படுத்தி விட்டார்கள் என்று நட்பை துண்டித்து கொள்வாள்.
  • ஆடை அலங்காரத்தில் மனைவிக்கு அக்கறை இருக்காது.
  • தனது உடமைகளை பிறருக்கு விட்டுக் கொடுப்பாள்.
  • எளிமையாக இருப்பாள்
  • மனைவிக்கு இரண்டு பெயர்கள் இருக்க வாய்ப்பு உண்டு.
  • மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு தென்மேற்கு திசையில் இருக்கும்.
  • மனைவியின் வீடு தெற்கு வடக்கு வீதியில் கிழக்கு பக்கம் வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும் அந்த வீடு தெரு முனையில் இருக்கும்.
மனைவி
துலாம் ராசியில் சுக்கிரன் நின்றால்:
  • ஜாதகருக்கு வரும் மனைவி அழகானவளாகவும் , ஆடை அலங்கார பிரியையாகவும் , எதையும் சீர்தூக்கிப் பார்த்து சரியான முடிவுகளை எடுக்கும் திறமை உள்ளவளாகவும் இருப்பாள்.
  • மனைவி பக்கத்து ஊரை சேர்ந்தவராக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
  • மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு மேற்கு திசையில் இருக்கும்.
  • மனைவியின் வீடு கிழக்கு மேற்கு வீதியில் தெற்கு பக்கம் வாசல் உள்ள வீடு அமைந்திருக்கும்.
  • மனைவியின் வீட்டை ஒட்டி கடையோ அல்லது அந்த வீடு கடை தெருவில் இருக்கும்
  • திருமணத்திற்கு பின் மனைவி அடிக்கடி தன் தாய் வீட்டிற்கு செல்ல விரும்புவாள் அல்லது தன் தாய் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவதற்கு முயற்சி செய்வாள் அல்லது தன் தாய் வீட்டிற்கு பக்கத்தில் குடி பெயர்ந்து செல்ல முயற்சிபாள்
  • மனைவி உறவினர்கள், நண்பர்கள் என யார் வீட்டிற்கும் செல்வதை விரும்ப மாட்டாள் எல்லோரும் தன் வீட்டிற்கு தன்னைத் தேடி வந்த பார்க்கட்டும் என நினைப்பாள்.
  • யாரையும் உபசரிக்க மாட்டார்
  • வீட்டை அழகாக வைத்திருப்பாள்
  • அதிகம் வெளியே செல்ல மாட்டார்
  • தன் பிறந்த வீட்டில் வந்து நிரந்தரமாகத் தங்கி விடும்படி ஜாதகரை நிர்பந்திப்பாள்
  • மனைவி இருக்கும் வீடு அதிக வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருக்கும்
விருச்சக ராசியில் சுக்கிரன் நின்றால்:
  • ஜாதகனுக்கு வரும் மனைவி இளமையான தோற்றம் உடையவள்
  • சுறுசுறுப்பானவர்
  • ஜாதகருக்கு வரும் மனைவி சொந்தக்காரி ஆகவோ அல்லது சொந்த ஊர்காரியாகவோ அல்லது சொந்த பந்தங்கள் வசிக்கும் ஊர்காரியாகவோ இருப்பாள்
  • ஜாதகருக்கு சரியான உடல் பொருத்தமுள்ள மனைவியாக இருப்பாள்
  • உஷ்ண தேகம் உடையவளாகவும் கோபக்காரியாகவும் இருப்பாள்
  • மனைவி பிறந்த ஊர் அந்த ஊருக்கு மேற்கு திசையில் இருக்கும்
  • மனைவியின் வீடு தெற்கு வடக்கு வீதியில் மேற்கு பக்கம் வாசல் உள்ள வீடாக இருக்கும்
  • திருமணத்திற்கு பின் மனைவி எப்பொழுதும் தன் கணவர் வீட்டில் இருப்பதையே விரும்புவர்
  • தான் பிறந்த வீட்டிற்கு செல்வதை விரும்ப மாட்டார் மனைவி ஒருபோதும் ஜாதகரை விட்டு பிரிய மாட்டார் .
தொடர்ச்சி அடுத்த பதிவில்
முந்தைய பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்..

Leave a Comment

error: Content is protected !!