Homeஜோதிட தொடர்ஜோதிடம் : ராகு தரும் சுப,அசுப யோகங்கள் என்ன ?

ஜோதிடம் : ராகு தரும் சுப,அசுப யோகங்கள் என்ன ?

ராகு

ஜாதகத்தில் ராகுவால் உண்டாகும் யோகங்களை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் யோகங்கள் கீழ்வருமாறு.

1.கபடயோகம்

ஜாதகத்தில் குரு அல்லது சனி இருக்கும் ராசிக்கு 1,5,9 அல்லது 2,6, 10ல் ராகுவும் சந்திரனும் கூடி இருந்தால் அது கபட யோகம் ஆகும். இத்தகைய ஜாதகர்கள் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார்கள். இவர்களுடைய நடவடிக்கைகள் எல்லாம் நாடகமாகவே இருக்கும்.

2.அஷ்டலக்ஷ்மி யோகம்

ஜாதகத்தில் குரு அல்லது சனி இருக்கும் ராசிக்கு 1,5,9 அல்லது 2,6,10-ல் ராகுவும் சுக்கிரனும் கூடி நின்றால் அது அஷ்டலஷ்மி யோகம் ஆகும். இத்தகைய ஜாதகர்கள் பெரிய செல்வந்தர்களாக இருப்பார்கள்.

3.பிசா சக்ரஸ்த யோகம்,

ஜாதகத்தில் குரு அல்லது சனி இருக்கும் ராசிக்கு 1,5,9ல் அல்லது 2,6,10ல் சந்திரன் செவ்வாய் கூடி நின்றால் அது பிசா சக்ரஸ்த யோகம், ஆகும். இத்தகைய ஜாதகர்கள் (அல்லது) இவர்களுடைய குழந்தைகளுக்கு ஏதாவது ஆபத்து உண்டாகும். தற்கொலை எண்ணம் மேலோங்கி இருக்கும்.

4. குரு சண்டாளயோகம்,

குருவுக்கு 1,5, 9ல் அல்லது 2,6,10-ல் ராகுல் என்றால் அது குரு சண்டாள யோகம் ஆகும் ஜாதகன் எல்லாவிதமான அனாச்சாரங்களிலும் ஈடுபடுவான் தெய்வ நிந்தனை செய்வான்.

5.சர்ப்ப சாபயோகம்.

சூரியனுக்கு 1,5,9-ல் அல்லது 2,6,10-ல் ராகு இருந்தால் புத்திர தோஷம் உண்டாகும். சந்திரன், சுக்கிரனுக்கு 1,5,9ல் அல்லது 2,6,10ல் ராகு இருந்தாலும் அது புத்திர தோஷத்தை ஏற்படுத்தும்.

6. பிரேத சாப யோகம்,

ஜாதகத்தில் குரு அல்லது சனி இருக்கும் ராசிக்கு 1,5,9ல் அல்லது 2,6,10ல் ராகு, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் கூடியிருந்தால் அது பிரேத சாபயோகம் ஆகும்.

7.அந்த யோகம்.

ஜாதகத்தில் சூரியனுக்கு 1,5,9 ல் அல்லது 2,6,10 ல் ராகு இருந்தால் அது அந்த யோகம் ஆகும். இத்தகைய ஜாதகர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்படும்.

8.தரித்திர யோகம்,

ஜாதகத்தில் சனிக்கு 1,5,9ல் அல்லது 2,6,10ல் ராகு இருந்தால் அது தரித்திர யோகம் ஆகும். ஜாதகன் எல்லோராலும் கைவிடப்படுவான். இளமை காலத்தில் கஷ்டப்படுவான்.

9.கன கர்ணரோக யோகம்.

ஜாதகத்தில் புதனுக்கு 1,5,9ல் அல்லது 2,6,10 ல் ராகு இருந்தால் அது கன கர்ணரோக யோகம்
ஆகும் (காது ரோகம்).

10.மரண யோகம்,

ஜாதகத்தில் குருவுக்கு 1,5,9ல் அல்லது 2,6,10ல் ராகு இருந்து மற்ற கிரகங்களின் பார்வை குருவுக்கு விழவில்லை என்றால் அது மரண யோகம் ஆகும்.

11. கூட்ட மரண யோகம்,

ஜாதகத்தில் குரு மற்றும் சனிக்கு 1,5,9ல் அல்லது 2,6,10 ல் ராகு நின்று மற்ற கிரகங்கள் குருவையோ, சனியையோ பார்க்கவில்லை என்றால் அது கூட்டு மரண யோகம் ஆகும்.

12. வஞ்சனா யோகம்,

குருவுக்கு அல்லது சனிக்கு 1,5,9ல் அல்லது 2,6,10ல் ராகு, புதன், சந்திரன் கூடியிருந்தால் அது வஞ்சனா யோகம் ஆகும். இத்தகைய ஜாதகர்கள் பொய் சொல்வதற்கோ, ஏமாற்றுவதற்கோ வெட்கப்படமாட்டார்கள்.

13. சிரசேத யோகம்.

சூரியனுக்கு 1,5,9ல் அல்லது 2,6,10ல் சுக்கிரனும் ராகுவும் கூடி நின்றால் அது சிரசேத யோகம் ஆகும்.ராகு நின்ற வீட்டுக்குடைய கிரகம் ஆட்சி உச்சம் பெற பலன் மாறுபட்டு நடக்கும் தோஷம் ஆகாது.

14. ரோக யோகம்

சனி அல்லது குருவிற்கு 1,5,9ல் அல்லது 2,6,10ல் செவ்வாயும் ராகுவும் கூடி நின்றால் அது ரோக யோகம் ஆகும். குணப்படுத்த முடியாத இன்னதென்று மருத்துவர்களால் கூற முடியாத நோய் உண்டாகும்.

15. பால மிருத்யு யோகம்.

குரு நீச்சம் அடைந்து அதற்கு 1,5,9ல் அல்லது 2,6,10 ல் ராகு இருந்தால் அது பால மிருத்யோகமாகும் குழந்தை பருவத்திலேயே மரிக்க நேரிடும்.

16.சீக்கிர மரண யோகம்.

குரு நீசம் அடைந்து அதற்கு 12 இல் செவ்வாயும் 2ல் ராகுவும் இருந்தால் அது சீக்கிரம் மரணயோகம் ஆகும். ஜாதகன் இளமையிலேயே எதிர்பாராத விதமாக மரிப்பான். (அல்லது) சனி நீசம் அடைந்து அதற்கு பனிரெண்டில் செவ்வாயும் இரண்டில் ராகுவும் நிற்க அதுவும் சீக்கிர மரண யோகம் ஆகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!