பரணி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவன்
- சிவந்த சரீரம் உள்ளவர்
- அதிக பலவான்,
- நீதிமான்,
- பகைவர்களை வெல்லும் சிங்கமாக இருப்பான்,
- சிவப்பு நிறம் ரோமம் உள்ளவன் ,
- செம்பட்டை தலைமயிர் உள்ளவன்,
- நிறைந்த செல்வம் உள்ளவன்,
- இனியவன்,
- புண்ணியம் செய்பவன்,
- மாளிகை போன்ற வீட்டில் வாழ்பவன்.
- அரசாங்கத்தால் மகிழ்ச்சி உண்டு,
- வாள் போன்ற கண்ணுடைய அழகிய மனைவியை உடையவன்,
- வலக்கையில் மரு உண்டு,
- காளியை போன்ற உக்கிரமான வடிவம் உடையவன்,
- இது பரணி முதல் பாதத்தில் பிறந்த சூரிய அங்கிசத்தில் பிறந்தவன் பலனாகும்.
பரணி முதல் பாதத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்:
பரணி முதல் பாதத்தில் சூரியன் நின்றால்:
- மெத்தப் படித்தவன் ,
- ஜோதிடக்கலை நிபுணன்,
- பெயரும் புகழும் உள்ளவன் ,
- குணமுள்ளவன்,
- கவர்ச்சியானவர் ,
- நன்னடத்தை உள்ளவன்
- கண்கள் காயம் அல்லது புரை (catract ) ஏற்படும்,
- மருத்துவம் , சட்டம் ,விலங்கு மருத்துவம் இவற்றில் ஒன்றில் பயிற்சி உள்ளவன் .
பரணி முதல் பாதத்தில் சந்திரன் நின்றால்:
- இவன் செல்வந்தன்,
- தன் சகோதர சகோதரிகளால் மிகவும் மதிக்கப்படுபவர்
- வாகன யோகம் உள்ளவன்
- முன் யோசனையற்ற அவசர முதலீடு செய்வதால் தன் செல்வத்தை இழப்பவன்
- இவன் இன்றைய தேவையை மட்டும் திட்டமிடுவான் வருங்கால திட்டம் இவனிடம் கிடையாது.
பரணி முதல் பாதத்தில் செவ்வாய் நின்றால்:
- ஆயுள் 50 வரை தான் இருக்கலாம்
- சாதாரண நோயால் வெளிநாட்டில் மரணம் நேரும்
- கூர்மையான ஆயுதங்கள் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
- வாகனங்களை தானே ஓட்ட கூடாது
பரணி முதல் பாதத்தில் புதன் நின்றால்:
- ஆயுள் மத்திமம் தான்
- குழந்தை பருவத்தில் பாலாரிஷ்டம் உண்டு,
- இதை தாண்டி பிழைத்தால் இவன் ஆயுள் மிகவும் நீண்டதாக இருக்கும்
- பல நூல்கள் எழுதுவதில் இவன் ஈடுபடுவான்
- கட்டிட குத்தகை(காண்ட்ராக்டர்)யால் சம்பாதிப்பான் அல்லது பொறியாளராக இருக்கலாம்.
பரணி முதல் பாதத்தில் குரு நின்றால்:
- உண்மையானவன்,
- சிறந்த பேச்சாளன்,
- தந்தையிடம் அதிகம் பாசம் உண்டு.
- பிறர் இவனை கடவுளாக மதிப்பார்கள்.
- ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியுண்டு.
- தொழிற்சாலை தலைவராகவோ , வங்கி அதிகாரியாகவோ பணி செய்வான்.
- மூளை சம்பந்தமான நோய்கள் காணலாம் இந்த வகையில் விழிப்பு தேவை
பரணி முதல் பாதத்தில் சுக்கிரன் நின்றால்:
- உயர்ந்த சங்கீத வித்துவான்.
- பாடகன்.
- குறைவாக உண்பவன்
- எல்லோரும் இவனை விரும்புவர்
- புகை ,குடி பழக்கம் அதிகம் .
- கண்ணுக்கு மேல் நெற்றியில் காயம் ஏற்படும் .
- விளையாட்டு போட்டிகளில் வித்தகன்
- சுகபோக விருப்பமுள்ளவன்
- சங்கீத கருவிகள் (வாத்தியங்கள் )விற்பனை மற்றும் எவை ஆனாலும் இவனுக்கு சம்பாத்தியம் உண்டு
பரணி முதல் பாதத்தில் சனி நின்றால்:
- சமய மத சம்பந்தமான விஷயங்களில் ஆராய்ச்சி உள்ளவன்
- இதனால் அதிக சம்பாத்தியம் உண்டு
- இவன் அறிவாளி.
- பல பெரிய அந்தஸ்து உள்ளவர்களால் மதிக்கப்படுபவர்.
- நயமாக பேசுபவன்.
- தலையில் காயத்தால் வடு ஏற்படும்.
- மூளை அறுவை ஏற்படும் அதிக தலை வலி ஏற்படும்.
பரணி முதல் பாதத்தில் ராகு நின்றால்:
- மிகவும் பலவான் .
- மிகவும் பிரசித்தி அடைவான்.
- மரியாதை அந்தஸ்து இவனை வந்தடையும்.
- இவன் பணம் நிறைய சம்பாதிப்பான். ஆனால் இறக்கும் போது ஏழையாகி விடுவான்
- வழக்காடல் முதலியவற்றால் நாய்கடி, காய்ச்சல் முதலிய நோய்கள் காணலாம்.
பரணி முதல் பாதத்தில் கேது நின்றால்:
- இவன் மிகவும் சொகுசாக வாழ்வான்
- இவனுக்கு ஆயுள் தாயம் சரியில்லை என்றால் இருபது வயதில் அற்பாயுள் சம்பவிக்கலாம்.
விருச்சிக செவ்வாய் தசை | 7 வருடம் |
துலாம் சுக்கிர தசை | 16 வருடம் |
கன்னி புதன் தசை | 9 வருடம் |
கடக சந்திரன் தசை | 21 வருடம் |
சிம்மம் சூரிய தசை | 5 வருடம் |
மிதுன புதன் தசை | 9 வருடம் |
ரிஷப சுக்கிர தசை | 16 வருடம் |
மேஷ செவ்வாய் தசை | 7 வருடம் |
மீன குரு தசை | 10 வருடம் |
ஆக பரம ஆயுள் | 100 வருடம் |