அட்சய திருதியை
பொதுவாக தானம் கொடுத்தால் மிகப் புண்ணியம் சேரும். அதுவும் வளமை தரக்கூடிய அட்சய திருதியில் தானம் கொடுத்தால், நாம் நிறைய நிறைய தானம் செய்யும் தகுதி உண்டாகும். இதன் உள்ளீடான கருத்து நமக்கு செல்வம், தனம், இவற்றின் வளம் பெருகும் என்பதுதான்.
- மலர் ,செடி தானம்- மங்கலம் பெருகும்.
- அன்னதானம் மோட்சம் கிட்டும்.
- பசுவுக்கு புல், கீரை கொடுத்தால்- பிள்ளை வரம் கிடைக்கும்.
- கோவில் திருப்பணி செய்தால்- மேன்மை கிட்டும்
- பானகம், மோர் தானம் செய்தால் -சன்னதி ஷேமம் உண்டாகும்.
- தொழு நோயாளிக்கு விருந்து படைத்தால்- கர்மம் அகலும்.
- அந்தணருக்கு விருந்து கொடுத்தால்- ஆபத்து விலகும்.
தானம் கொடுக்கும் போது தங்கம், பசு, நிலம் இவைகளை தானம் கொடுத்தால் மிகப்பெரிய புண்ணியம் கிடைக்கும் தான். ஆனால் ‘ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க’ என்ற கதையில் வாழ்க்கை வண்டி தட்டுப்பாடுடன் ஓடினால் என்ன செய்வது?
எனவே இம்மாதிரி மனிதர்களுக்காக அதற்கு ஈடான மாற்று வழிகள் கூறப்பட்டுள்ளது. தங்கம் கொடுக்க ஆசைப்பட்டு அதற்கு காசு இல்லை என்றால் உழவாரப்பணி செய்தால் தங்கம் தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
பசு தானம் செய்ய விரும்பி அதற்குரிய பணமில்லை எனில் மட்டையுடன் தேங்காய் தானம் செய்வது பல மடங்கு புண்ணியம் சேரும்.
நில தானம் செய்ய விரும்பி பண வசதி தோது படாவிட்டால் ஒரு சந்தன கட்டையை தானம் செய்து புண்ணியம் சேர்த்துக் கொள்ளவும். தான தர்மம் செய்ய மனசு தான் முக்கியம். செய்யும் தர்மத்தை விளம்பரப்படுத்தாமல் செய்வது அதைவிட முக்கியம் உங்களின் தர்ம கணக்கை இறைவன் அறிந்தால் போதுமானது.