சனிக்கிழமையன்று திருநள்ளாறு சென்று சிவனையும், தாயாரையும், வணங்கி அர்ச்சனை செய்த பிறகு சனீஸ்வரரை தரிசிக்க வேண்டும். கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்து, கருப்பு துணியை சனீஸ்வரருக்கு சாத்தி, எள் தீபம் ஏற்றி, எள் சாதம் நைவேத்தியமாக வைத்து பூஜை செய்ய வேண்டும்.
கோயிலில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் அமைதியாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்கள் கம்போதி ராகத்தில் இறைவனை பாடி வணங்க வேண்டும்.
சனீஸ்வர பகவானுக்கு பிடித்த பரிகாரமே அன்னதானமாகும்.
வடநாட்டில் நாசிக் மாவட்டத்தில் சிரபுக்கு அருகே சனீஸ்வரர் கோயில் உள்ளது. அவுரங்காபாத்திற்கும், அகமது நகருக்கும் இடையில் உள்ள கோடேகானிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அங்கணபுரம் சிறப்பான கோயில். இங்கு சனீஸ்வர பகவான் சுயம்புவாக உள்ளார். கோயிலுக்கு கூரை கிடையாது. கதவுகள் கிடையாது. வடநாட்டில் உள்ளவர்கள் இந்த ஊருக்கு வந்து சனீஸ்வரப்ரீதி செய்து கொள்ளலாம்.
சிரபு யாத்திரை செய்பவர்களும் இந்த கோயிலுக்கு சென்று வரலாம். அதேபோல தேனி மாவட்டத்தில் குச்சனூரில் தனி கோயிலாக சனீஸ்வர பகவான் இருக்கிறார். அங்கு சனீஸ்வர ப்ரீதி செய்து கொள்ளலாம்.
உங்கள் பிரச்சனைக்கு தினசரி நீங்கள் வணங்கி பாட வேண்டிய துதி!
முனிவர்கள் தேவர்கள், ஏனைய மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வின் மகிமைய தல்லால் உண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர் சேயே காகம் ஏறும்
சனிபகவானே போற்றி தமியனேற்று அருள் செய்வாயே!