சமயபுரம் அம்மன்
அம்பாளுக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் மஞ்சள் அபிஷேகம் செய்து வைத்தால் தீராத வியாதிகளும் தீரும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
‘தேவி கட்கமாலா’ எனும் அற்புத ஸ்தோத்திரம் உண்டு. என்றால் இந்த ஸ்தோத்திரத்தை சொன்னால் அம்பிகையின் பாதுகாப்பு எப்போதும் நம்மைச் சுற்றி இருக்கும்.
இந்த ஸ்தோத்திரத்தை சொல்லி சமயபுரத்தாளை வழிபடலாம். நம்பிக்கையோடு இந்த அம்மனை வேண்டிக்கொண்டால் கேட்பது அனைத்தும் கிடைக்கும். திருமணம், குழந்தைப்பேறு, கடன் நிவர்த்தி, செல்வ செழிப்பு, ஆரோக்கியம் மேம்படும் என எதைக் கேட்டாலும் நம் எதிர்பார்ப்பை விட அதிகமாகவே கொடுத்து மகிழ்விப்பாள் சமயபுரத்தாள்.
தேவி கட்கமாலா:-
தேவி, என்றால் “சக்தி” வடிவான தெய்வீக அன்னை, கட்க என்றால் பாதுகாப்பு தரும் ஆயுதம் (வாள்), கவசம் போன்றது. மாலா – மாலை. ஸ்தோத்ரம் – கீர்த்தனை அல்லது ஸ்துதி , பாட்டு ஆகும்.
எவர் இந்த ஸ்துதியை ஸ்துதிக்கிறார்களோ, அவர்களின் கழுத்தில் அணிந்த மாலை போன்று, கவசமாக இருந்து அவர்களை அன்னை காப்பாள். மிகவும் சக்தி வாய்ந்த, ஆற்றல் மிக்க, மந்திர அதிர்வுகளைக் கொண்ட ஸ்துதி இது. ஸ்ரீ சக்ரத்தில் வாசம் செய்யும் தெய்வங்களின் பெயர்களைத் தன்னகத்தே கொண்டது.
மத்தியத்தில் அமர்ந்த ஸ்ரீ லலிதையைச் சுற்றி, அமர்ந்துள்ள 98 யோகினிகளையே இதனில் வணங்குகிறோம். அவர்களுக்கு உரிய இடம் மற்றும் சக்திகளை, அவர்களின் செயல்களை மனதினால் நினைத்து, பெயரினை பூரண அன்போடு உச்சரிக்க, நம்முள் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கும் அதிர்வுகளை தன்னகத்தே கொண்ட மந்த்ரஆற்றல் மிக்க சொற்களால் ஆனது.
இதனை பாராயணம் செய்தாலே இயல்பான தியானம் நிகழ்கிறது. அம்பிகையை நோக்கி செல்லும் பாதை கணித அமைப்பு கொண்டதே ஸ்ரீ சக்ரத்தின் அமைப்பாகும். சாதகன் இந்த பிரபஞ்சத்தைக் கடந்து நிற்கும் பேரறிவான, ஆற்றலை எவ்வாறு அடைகிறான் என்பதே அடுத்தடுத்த யோகினிகள் அமைப்பிடமும், அவர்களின் செயல்பாடுகளையும் சாதகன் தன்னுள் மெல்ல , மெல்ல தன்னகத்துள்ளே உணர்ந்துகொள்கிறான். இவ்வண்டம் கடந்த பேரறிவே தானாகிறான். உடல் வேறு, தான் வேறு என்ற அனுபவம் பெற்ற பின் மிஞ்சி இருப்பது ஆன்மா. ஆன்மாவே அறிவுமயம். மனமற்ற எண்ணங்களற்ற ஆனந்தமயம்.
அன்னையே ! உன்னை நீயே உள்ளபடி காண்பித்து அருள்க என பிராத்தித்து தினமும் இதனை பாராயணம் செய்தல் மிகவும் நன்று. ஸ்ரீ வித்யா உபாசகர்கள் நவாவர்ண பூஜையில் கிடைக்கும் பலனை ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்திரத்தின் மூலம் பெறலாம் என்பர்.
செய்ய வேண்டியதெல்லாம் இதனை தினசரி பாராயணம் செய்தலே. பின்னர் அன்னையின் காட்சியும், குருவும் தாமே வந்து அடுத்த படிக்கு அழைத்துச் செல்வார்கள்.
இதனை பாராயணம் செய்யுமிடத்தில் ஏழ்மை, துன்பம், நோய்கள், மனக் குழப்பங்கள், எல்லா வித துயரங்களும் அகன்று விடும். சகல தேவதைகளுடன் கூடி அன்னை லலிதாம்பிகை அங்கு வாசம் செய்வாள். ஆனந்தம் பொங்கும் செயல்கள் நித்தியமாய் அங்கு நிகழும்.
சக்தி விளங்கும் அருள்வாக்கும் மகா
சாந்தி விளங்கும் அருள் நோக்கும்
பக்திபுரியும் அருள் வாழ்க்கையும் தருவாய். ஆதி தேவியே அம்மா
எனை ஆள வா வா அம்மா. என பக்தியுடன் பாடி துதிப்போம்.
ஸ்ரீ தேவீ கட்கமாலா ஸ்தோத்ரம்:-
ஓம் நமஸ்த்ரிபுரஸுந்தரி ஹ்ருதயதேவி சிரோதேவி சிகாதேவி கவச தேவி நேத்ரதேவி அஸ்த்ரதேவி
காமேச்வரி பகமாலினி நித்யக்லிந்நே பேருண்டே வஹ்நி வாஸிநி மஹா வஜ்ரேச்வரி சிவதூதி த்வரிதே குலஸுந்தரி நித்யே நீலபதாகே விஜயே ஸர்வமங்களே ஜ்வாலாமாலினி சித்ரே மஹாநித்யே பரமேச்வர பரமேச்வரி
மித்ரேசமயி ஷஷ்டீசமயி உட்டீசமயி சர்யா நாதமயி லோபாமுத்ராமயி அகஸ்த்யமயி காலதாபநமயி தர்மாசார்யமயி முக்தகேசீச்வரமயி தீபகளா நாதமயி விஷ்ணுதேவமயி ப்ரபாகரதேவமயி தேஜோதேவமயி மநோஜ தேவமயி (கல்யாண தேவமயி வாஸுதேவமயி ரத்நதேவமயி ஸ்ரீராமாநந்தமயி)
அணிமா ஸித்தே லகிமாஸித்தே (கரிமாஸித்தே) மஹிமாஸித்தே ஈசித்வஸித்தே வசித்வஸித்தே ப்ராகாம்ய ஸித்தே புக்தி ஸித்தே இச்சாஸித்தே ப்ராப்திஸித்தே ஸர்வகாமஸித்தே
ப்ராஹ்மி மாஹேச்வரி கௌமாரி வைஷ்ணவி வாராஹி மாஹேந்த்ரி சாமுண்டே மஹாலக்ஷ்மி
ஸர்வ ஸம்க்ஷோபிணி ஸர்வ வித்ராவிணி ஸர்வாகர்ஷிணி ஸர்வ வசங்கரி ஸர்வோந்மாதிநி ஸர்வமஹாங்குசே ஸர்வகேசரி ஸர்வபீஜே ஸர்வயோநே ஸர்வத்ரிகண்டே
ப்ரகடயோகினி பௌத்ததர்சனாங்கி த்ரைலோக்ய மோஹந சக்ரஸ்வாமினி
காமா கர்ஷிணி புத்த்யா கர்ஷிணி அஹங்காரா கர்ஷிணி சப்தா கர்ஷிணி ஸ்பர்சா கர்ஷிணி ரூபாகர்ஷிணி ரஸா கர்ஷிணி கந்தா கர்ஷிணி சித்தா கர்ஷிணி தைர்யா கர்ஷிணி ஸ்ம்ருத்யா கர்ஷிணி நாமா கர்ஷிணி பீஜா கர்ஷிணி ஆத்மா கர்ஷிணி அம்ருதா கர்ஷிணி சரீரா கர்ஷிணி குப்தயோகினி ஸர்வாசா பரிபூரக சக்ரஸ்வாமிநி
அநங்ககுஸுமே அநங்கமேகலே அனங்கமதனே அநங்கமதநாதுரே அநங்கரேகே அநங்கவேகினி அனங்காங்குசே அனங்கமாலினி குப்ததரயோகினி வைதிகதர்சனாங்கி ஸர்வஸம்க்ஷோபண சக்ரஸ்வாமினி பூர்வாம்னாயாதிதேவதே ஸ்ருஷ்டிரூபே
ஸர்வஸம்க்ஷோபிணி ஸர்வ வித்ராவிணி ஸர்வாகர்ஷிணி ஸர்வாஹ்லாதினி ஸர்வஸம்மோஹிநி ஸர்வஸ்தம்பிநி ஸர்வஜ்ரும்பிணி ஸர்வவசங்கரி ஸர்வரஞ்ஜநி ஸர்வோந்மாதிநி ஸர்வார்த்தஸாதிகே ஸர்வஸம்பத்திபூரணி ஸர்வமந்த்ரமயி ஸர்வத்வந்தக்ஷயங்கரி ஸம்ப்ரதாய யோகினி ஸௌரதர்சனாங்கி ஸர்வஸௌபாக்யதாயக சக்ரஸ்வாமினி
ஸர்வஸித்திப்ரதே ஸர்வஸம்பத்ப்ரதே ஸர்வப்ரியங்கரி ஸர்வமங்களகாரிணி ஸர்வகாமப்ரதே ஸர்வது:க்க விமோசநி ஸர்வம்ருத்யுப்ரசமநி ஸர்வவிக்ந நிவாரிணி ஸர்வாங்கஸுந்தரி ஸர்வஸௌபாக்யதாயினி குலோத்தீர்ணயோகினி ஸர்வார்த்தஸாதக சக்ரஸ்வாமிநி
ஸர்வஜ்ஞே ஸர்வசக்தே ஸர்வைச்வர்ய ப்ரதே ஸர்வஜ்ஞாநமயி ஸர்வவ்யாதி நிவாரிணி ஸர்வாதார ஸ்வரூபே ஸர்வ பாபஹரே ஸர்வாநந்தமயி ஸர்வரக்ஷாஸ்வரூபிணி ஸர்வேப்ஸித பலப்ரதே நிகர்ப்பயோகினி வைஷ்ணவ தர்சனாங்கி ஸர்வரக்ஷாகர சக்ரஸ்வாமினி தக்ஷிணாம்னாயேசி ஸ்திதிரூபே
வசிநி காமேசி மோதினி விமலே அருணே ஜயினி ஸர்வேச்வரி கௌலினி ரஹஸ்யயோகினி சாக்த தர்சனாங்கி ஸர்வரோகஹர சக்ரஸ்வாமிநி பச்சிமாம்னாயேசி
தனுர் பாண பாசாங்குச தேவதே காமேசி வஜ்ரேசி பகமாலினி அதிரஹஸ்ய யோகினி சைவதர்சனாங்கி ஸர்வஸித்திப்ரத சக்ரஸ்வாமினி உத்தராம்னாயேசி ஸம்ஹார ரூபே
சுத்தபரே பிந்து பீடகதே மஹாத்ரிபுரஸுந்தரி பராபராதி ரஹஸ்ய யோகினி சாம்பவ தர்சனாங்கி ஸர்வானந்தமய சக்ரஸ்வாமினி
த்ரிபுரே த்ரிபுரேசி த்ரிபுரஸுந்தரி த்ரிபுரவாஸிநி த்ரிபுராஜஸ்ரீ: த்ரிபுரமாலிநி த்ரிபுராஸித்தே த்ரிபுராம்ப மஹாத்ரிபுரஸுந்தரி ஸர்வ சக்ரஸ்தே அனுத்தராம்னாயாக்ய ஸ்வரூபே மஹாத்ரிபுர பைரவி சதுர்வித குணரூபே குலே அகுலே குலாகுலே மஹாகௌலினி ஸர்வோத்தரே ஸர்வ தர்சனாங்கி
நவாஸனஸ்த்திதே நவாக்ஷரி நவமிதுனாக்ருதே, மஹேச-மாதவ-விதாத்ரு-மன்மத-ஸ்கந்த-நந்தி-இந்த்ர-மனு-சந்த்ர-குபேர-அகஸ்த்ய-க்ரோதபட்டாரக- வித்யாத்மிகே, கல்யாண-தத்வ-த்ரய ரூபே, சிவ சிவாத்மிகே பூர்ணப்ரஹ்மசக்தே மஹாத்ரிபுரஸுந்தரி தவ ஸ்ரீ பாதுகாம் பூஜயாமி தர்ப்பயாமி நம:
ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஓம்
(லலிதோபாக்யானம் அத்யா 38)
தேவி கட்கமாலா கூறும் நவ ஆவரணம் – சிறு விளக்கம்:-
ஸ்ரீமேரு முதல் நவாவரனத்தில்;
முதல் ரேகை:-
அணிமா சித்தி = சாந்த ரசம்
லகிமா சித்தி = அற்புத ரசம்
மகிமா சித்தி = கருணை ரசம்
ஈசித்வா சித்தி = வீர ரசம்
வசித்த்வ சித்தி = ஹச்ச்பய ரசம்
ப்ராகாம்ய சித்தி = பீபத்ச ரசம்
புத்தி சித்தி = ரௌத்ர ரசம்
இச்சா சக்தி = பயானக ரசம்
ப்ராப்தி சித்தி = சிருங்கார ரசம்
இரண்டாம் ரேகை:-
பிராஹ்மி = காமம்
மாகேஸ்வரி = குரோதம்
கௌமாரி = லோபம்
வைஷ்ணவி = மோகம்
வாராஹி = மதம்
மாகேந்திரி = மாத்சர்யம்
சாமுண்டி = புண்ணியம்
மகாலட்சுமி = பாபம்
மூன்றாம் ரேகை:-
சர்வ சம்க்ஷோபினி =சஹச்ர கமலம்
சர்வ வித்ராவினி = மூலாதாரம்
சர்வாகர்ஷினி =ச்வாதிச்டானம்
சர்வ வசங்கரி = மணி பூரகம்
சர்வோன்மாதினி = அனாகதம்
சர்வ மகான்குசா =விசுத்தி
சர்வ கேசரி = லம்பிகா ஸ்நானம்
சர்வ பீஜா = ஆக்ஞை
சர்வ யோனி = துவாத சாந்தம்
சர்வ த்ரிகண்டா = ஒன்பது ஆதாரம்
இரண்டாம் ஆவரணம்:-
காமாகர்ஷினி =ப்ரித்வி
புத்தியா கர்ஷ்சினி =அப்பு
அஹங்கார கர்ஷினி =தேஜஸ்
சப்தா கர்ஷினி = வாயு
ச்பர்சா காசினி =ஆகாசம்
ரூபா கர்சினி =ச்ரோத்திரம்
ராசா கர்ஷினி =த்வக்
கந்தா கர்ஷினி =சக்சுஸ்
சித்த கர்ஷினி = ஜிக்வை
திரியா கர்ஷினி = க்ராணம்
ச்ம்ருத்யா கர்ஷினி = வாக்
காமா கர்ஷினி = கைகள்
பீஜா கர்ஷினி = பாதம்
ஆத்மா கர்ஷினி = பாயு
அம்ருதா கர்ஷினி = உபஸ்தம்
சரீரா கர்ஷினி = மனம்
சமயபுரத்து அம்மனை வீட்டிலேயே வழிபடுவது எப்படி?
விரத நாள்களில் சமயபுரம் வந்து தரிசனம் செய்ய முடியவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருந்து அம்மனை வழிபட்டு வரம் பெறலாம்.
வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து இளநீர், மோர், பானகம், வெள்ளரிப்பிஞ்சு, துள்ளு மாவு ஆகியவற்றை சமர்ப்பித்து வழிபட வேண்டும். பச்சரிசி மாவு நாட்டுச் சர்க்கரையும் கலந்து துள்ளுமாவு செய்வார்கள்.
பூஜைக்கு பின்னர் அந்த பிரசாதத்தை ஏழை குழந்தைகளுக்கு வினியோகித்து நாமும் உண்ணலாம். இதனால் சகல நன்மைகளும் உண்டாகும் சமயபுரத்தாள் எப்போதும் நம்முடன் இருந்து நம்மை காப்பாள்.