சுக்கிரன் +சூரியன்
உடல் உறவில் தேர்ந்தவர்.செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த மனைவி.அரச குல மங்கை போன்ற உருவ அமைப்பு.
சுக்கிரன் +சந்திரன்
உயர் சமூகத்தில் உதித்த மனைவி.முரண்பாடுகள் உள்ள மனைவி.
சுக்கிரன் +செவ்வாய்
ஜாதகர் காமம் மிக்கவர்.இளமையான வாளிப்பான சரீரமுடைய மனைவி.
சுக்கிரன் +புதன்
அறிவு உள்ள புத்திசாலித்தனமான மனைவி,இனம் பெருந்தன்மை மிக்க மனைவி,காமத்தை பற்றியே பேசிக்கொண்டும்,நினைத்து கொண்டும் அலைபவர்.ஒழுக்கக்கேடான இலக்கியங்கள் மீது ஆர்வம் உள்ளவர்.
சுக்கிரன் +குரு
அழகிய பரிசுத்தமான ,ஒழுக்கம் மிக்க மனைவி,நன் மக்களை ஈன்றெடுக்க கூடியவள்.ஜாதகர் திருமண பந்தத்துக்கு மாறனா வழிகளில் செல்லமாட்டார்.
சுக்கிரன் +சனி
சாந்தமான,தன்னடக்கம் உள்ள மனைவி.மண வாழ்வில் மிக நல்ல மகிழ்ச்சி உடையவர்.பாதிப்பு அடைந்த கிரக நிலையாக,மோசமான குணமுடைய மனைவி அமைவாள்.
சுக்கிரன் +ராகு
வெற்றி பெறாத இரகசிய காதல் விவகாரங்கள் உடையவர்
சுக்கிரன் +கேது
மிகவும் உணர்ச்சிகரமான காம விவரகாரங்கள் உடையவர்.
வணக்கம் ஐயா,
புதன் சுக்ரன் சேர்க்கையில் காம எண்ணத்தை பற்றியே சிந்தித்து கொண்டும் அவ்வாறான இலக்கியம் மீதும் ஆர்வமுடையவர் என குறிப்பிட்டுள்ளீர்கள். யார் அப்படி இருப்பார்கள் ஜாதகரா அல்லது வரக்கூடிய மனைவியா?
தெளிவாக குறிப்பிடுங்கள் ஐயா.
நன்றி வாழ்க வளமுடன்
ஆண் ஜாதகத்தில் இத்தகைய(புதன் சுக்ரன்) இணைவு இருந்தால் வரும் மனைவியின் குணம் நான் குறிப்பிட்டது போல் இருக்கும்.இது பொதுவான கருத்து மட்டுமே வரும் மனைவியின் ஜாதகத்தில் கிரக நிலைகள் மாறுபட்டு இருப்பின் பலன்களில் மாறுதல் இருக்கும்.