சுவாமியே… சரணம் ஐயப்பா…! ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

கார்த்திகை மாதத்தின் சிறப்பு

இதோ கார்த்திகை மாதம் பிறந்து விட்டது எங்கெங்கும் ஐயப்பன் அவர்களின் சரண கோஷம் விண்ணை பிளக்கிறது. சபரிமலை சந்நிதானத்தை நோக்கி விரதம் இருந்து பக்தர்கள் கூட்டம் அலை அலையாக செல்கிறது. இது சகல ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் இந்த மாதத்தில் தான் சிவபெருமான் ஜோதியாக எழுந்தார், விஷ்ணுவும் ஜோதிஸ்வரூபமாக தோன்றினார். (காஞ்சியில் திருத்தண்காவில் விளக்கொளி பெருமாளாக தோன்றினார்) இரண்டு ஒளியும் சேர்ந்து மணிகண்ட ஜோதியாக பிரகாசிக்கும் இந்த மாதத்தின் முதல் நாளில் சபரிமலை விரதத்தை தொடங்க வேண்டும். அன்று முதல் 41 நாட்கள் “மண்டல விரதம்” இருக்க வேண்டும்..

இந்த வருடம் கார்த்திகை மாதத்தில் அப்படி என்ன சிறப்பு?

இந்த ஆண்டு கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி சனிக்கிழமை அன்று பிறக்கிறது. முதல் நாள் பௌர்ணமியும் அன்று தொடர்கிறது. நட்சத்திரமும் கார்த்திகை நட்சத்திரம். ஒரு விஷயம் பாருங்கள் பௌர்ணமி சந்திரனை குறிக்கும் கார்த்திகை நட்சத்திரம் சூரியனைக் குறிக்கும் சனிக்கிழமை சூரியனின் பிள்ளையை குறிக்கும் இங்கே தாய் தந்தை பிள்ளை என்ற மூன்றும் ஒன்றாக இருக்கிறது அதேபோலவே மகாவிஷ்ணு சிவனுக்கு பிறந்த பிள்ளையாக சபரிமலை ஐயப்பன் இருக்கின்றார். மும்மூர்த்திகளில் இருவரான சிவ விஷ்ணுவின் அருள் ஐக்கியத்தின் விளைவாக உதித்த ஜோதிதான் ஐயப்பன் என்பதை மறந்துவிடக்கூடாது கார்த்திகை மாதம் என்பது ஒளிமாதம் கார்த்திகை நட்சத்திரம் என்பது சூரியனுக்கு உரிய நட்சத்திரம் இறைவனின் அவதாரத்தை ஜோதிஸ்வரூபமாக கொண்டாடுவது வழக்கம். அப்படிதான் மணிகண்டன் மகரஜோதியாக காட்சி தருகிறார்.

மாலை போடுவது எப்போது எத்தனை நாள் விரதம் இருக்க வேண்டும்?

கார்த்திகை மாதம் முதல் நாள் மாலை(16.11.2024) அணிந்து விரதம் இருக்க வேண்டும் அப்படி வாய்ப்பு இல்லாவிட்டால் அடுத்து வரும் சனிக்கிழமை அல்லது உத்தர நட்சத்திரம் வரும் நாளில் மாலை அணியலாம். குருநாதரின் கையால் ருத்ராட்ச மாலை அல்லது துளசி மாலையாய் வாங்க வேண்டும் தீஷா வஸ்திரமும் வாங்க வேண்டும் இவைகளை அணிந்த பின் கோயிலை வலம் வந்து தேங்காய் உடைத்து வழிபட வேண்டும் இன்னொரு விஷயமும் உண்டு சபரிமலைக்கு முதன்முறையாக செல்பவர்கள் பதினெட்டாம் படியில் ஏற வேண்டும் என்பதற்காக பம்பையில் நீராடி உடனே இரு மூடி கட்டுகின்றனர் இது சரியான முறை அல்ல 41 நாள் (ஒரு மண்டலம்) என்பார்கள் விரதம் இருக்க வேண்டும்.

ஒரு காலத்தில் 60 நாள் விரதம் இருந்தார்கள் கார்த்திகை மார்கழி முடிந்து தையில் மகரஜோதியை பார்த்து விரதத்தை முடிப்பார்கள். ஒருவேளை 41 நாள் விரதத்திற்கு முன்னதாக சபரிமலை செல்ல நேர்ந்தால் ஊர் திரும்பி மகர விளக்கு முடியும் வரை விரோதத்தை தொடர வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுகின்றனர். வீட்டில் மாலை அணிவதாக இருந்தால் தாயார் கையால் மாலை அணிந்து கொள்ள வேண்டும். துக்க விஷயம் போன்ற காரணங்களால் மாலையை கழற்ற நேர்ந்தால் அடுத்த வருடம் மறுபடி முறையாக மாலை அணிந்து செல்ல வேண்டும்.

மாலை அணிந்தவுடன் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

கடுமையான விரதம் என்று அஞ்சுவார்கள், பழகிவிட்டால் அற்புத அனுபவமாக இருக்கும். மாலை போட்டவர்கள் கடுமையான பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும். அதிகாலையில் பச்சை தண்ணீரில் தான் குளிக்க வேண்டும் என்பது நியதி, உடல்நிலை சரியில்லை என்பவர்கள் தண்ணீரின் குளுமையை குறைத்து சற்று வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம். நெற்றியில் சந்தனம், விபூதி, குங்குமம் போன்ற மங்கல சின்னங்களை அணிந்து கொள்ள வேண்டும். ஐயப்பனின் திருவுருவப்படத்திற்கு புதிதாக மலர் அணிவித்து தினமும் ஏதாவது நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும். மிக எளிமையாக ஏதாவது ஒரு பழம் வைத்து வழிபடலாம். சரணம் சொல்லி வழிபட வேண்டும். சுத்த சைவமாக இருந்து இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். சாந்தமாக பேச வேண்டும். பார்க்கும் அனைவரையும் ஐயப்பனின் ரூபமாக பார்க்க வேண்டும். பேசுவதற்கு முன்பும் சரி பேசி முடித்த பிறகும் சரி ‘சுவாமி சரணம்’ என சொல்ல வேண்டும்.

சரணம் ஐயப்பா

மாலை போட்டவர்கள் செய்யக்கூடாத விஷயங்கள்

என்ன செய்வது என்பதை விட, என்ன செய்யக்கூடாது என்பதில் கவனம் தேவை. சந்தேகம் இருந்தால் அனுபவம் மிக்க குருமார்களின் ஆலோசனை பெற வேண்டும். கோபம் கூடாது, தகாத வார்த்தைகள் கூடாது, சண்டை போடக்கூடாது, காலணி கண்டிப்பாக அணியக்கூடாது, அலுவலக கட்டுப்பாடு காரணமாக வண்ண உடை அணிய முடியாமல் காலணி அணிய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் தாராளமாக அணிந்து கொள்ளலாம். மாலையும் நீராடி பூஜை செய்ய வேண்டும். இரவு உறங்கும் போது தரையில் தான் படுத்துக்கொள்ள வேண்டும். புதிதாக ஒரு பாய் வாங்கி அதை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கன்னி சாமி பூஜை

சபரிமலை யாத்திரைக்கு செல்லும் புதிய சாமிகளை ‘கன்னி சாமி’ என்பர், அவர்களுக்கு வழிகாட்டி நடத்தி செல்லும் சாமிகளை குருசாமிகள் என்று சொல்லும் வழக்கம் உண்டு. முதன்முறையாக சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் கன்னி பூஜை என்னும் சடங்கு நடத்திச் செல்வார்கள். இதனை வெல்லக்குடி, படுக்கை, ஆழி பூஜை என்று சொல்வார்கள். பொதுவாக கார்த்திகை மாதம் முதல் தேதியில் ஆரம்பித்து மார்கழி மாத பதினோராம் தேதிக்குள் இச்சடங்கு நல்ல நாள் பார்த்து நடத்த வேண்டும். வீட்டில் தான் இதைச் செய்ய வேண்டும். ஒரு தனி பகுதியை தூய்மையாக வைத்து அங்கே ஐயப்பன் படம் வைத்து, விநாயகர், மாளிகை புரத்து அம்மன், கருப்பண்ண சுவாமி, கருத்தை சுவாமி, ஆழிக்குரிய இடங்களை ஒதுக்கி விளக்கேற்ற வேண்டும். எல்லா தெய்வங்களுக்கும், அவல்பொரி, வெற்றிலை பாக்கு,சித்திரங்கள் சித்தரன்ங்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். மிக முக்கியமாக பக்தர்களுக்கு அவசியம் அன்னதானம் செய்ய வேண்டும்.

அன்னதானம் பிரதானம்

ஐயப்பனுக்கு “அன்னதான பிரபு” என்றொரு நாமம் உண்டு. அதிலும், கன்னி சாமியாக இருப்பவர்கள், வீட்டில் அன்ன தானம் அளிப்பது மிகவும் விசேஷமானது. உறவுகளையும் சக கன்னி சாமிகளையும் அழைத்து, பஜனை பாடி, பூஜை செய்து, ஐயப்ப பிரசாதத்தை அன்னதானமாகச் செய்ய வேண்டும். இதை அவரவர்கள் சக் திக்கு ஏற்றபடி செய்யலாம். ஐயப்பனை தினமும் பூஜை செய்துவிட்டு வெளியில் செல்லும்போது, தினமும் உங்களால் முடிந்த அளவு ‘அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா’ என்று சொல்லி உணவு வழங்குங்கள். இது ஐயப்பனுக்கு மிகவும் பிடிக்கும். அவன் அன்னதானப் பிரபு. அன் னதானத்தில் மகிழ்பவன். அன்னதானம் செய்வோரை வாழச் செய்பவன்.

குருசாமி யார்?

சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருந்து 18 முறை தொடர்ச்சியாகச் சென்றவர்கள் குருசாமி எனப்படுவார்கள் (ஒரே ஆண்டில் 18 முறை செல்லக் கூடாது). 18 ஆண்டுகள் மகர விளக்கு அல்லது மண்டல பூஜைக்கு இருமுடி கட்டி 41 நாட்கள் முதல் 60 நாட் கள் வரை விரதமிருந்து சென்றவர்களை குருசாமி தகுதியைப் பெறுவார்கள். இவர் கள் குரு சாமியாக இருந்து,மற்ற பக்தர் களுக்கு மாலை அணிவிக்கலாம். சபரிமலை அல்லாத நாட்களிலும், வீட்டில் இவர்கள்நித்திய பூஜையை சுவாமிக்கு செய்ய வேண்டியது அவசியம்

மாலை போடும்போது சொல்ல வேண்டிய மந்திரம்

“ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்

வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம்

நமாம்யஹம்

சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வருத முத்ராம்

நமாம்யஹம்

சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ

குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே

சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தார யாம் யஹம்

சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்

சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நமஹ”

சரணம் ஐயப்பா

இருமுடிப் பொருள்கள்

ஒருதுணிப் பையில் இரண்டு பகுதிகளா கப் பிரித்து, ஒரு பகுதியில் ஐயப்பன் சந்நதிக் குத் தேவையான பூஜை பொருள்களையும், ஒரு பகுதியில் தங்களுக்கு வேண்டிய உணவு முதலிய அத்தியாவசியப் பொருட்களை யும் ஒன்றுக்கு ஒன்று கலக்காமல் கட்டிக் கொள்ள வேண்டும். அதற்கு முன், யாத்ரா தானம் உண்டு. யாத்திரை புறப்பட்டு விட்டால், எக்காரணத்தை முன்னிட்டும்ஐயப்பன் தரிசனம் கிடைக்கும் வரை, அந்த மூட்டையை கீழே வைப்பதோ, யாத்திரை யில் இருந்து திரும்ப வருவதோ கூடாது. இருமுடியில் உள்ள பொருள்கள், மஞ்சள் பொடி 100 கிராம் (மலை நடை பகவதி. மஞ்சள் மாதாவுக்காக) சந்தன பாக்கெட், குங்கும பாக்கெட், நெய் தேங்காய் ஒன்று. சுத்தமான பசு நெய், விடலைத் தேங்காய் ஐந்து, (எருமேலி சபரிபீடம் சரங்குத்தி பதினெட்டாம் படி ஆழி), கற்பூர பாக்கெட், பச்சரிசி. இந்த பொருட்களை பாலித்தீன் பைகளில் கொண்டு சென்று அங்கங்கே வீசிவிட வேண்டாம்.

பயணத்தின் போது….

மலைக்குக் கிளம்பும்பொழுது, ஐயப்ப னின் திருவடிகளில் மனம் முழுமையாக ஒன்றுபட்டு யாத்திரையை மேற்கொள்ள வேண்டும். ஆங்கங்கே குளிக்கும் போது, நீர் நிலைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். போகும் போது வழியிலோ. திரும்பி வரும் போதோ பிற தெய்வங்களின்கோயில்களுக்குச் செல்பவர் கள், அந்தந்த கோயில் விதி களை மதிக்க வேண்டும். பொது அமைதிக்கு பங்கம் வராமலும், மற்றவர்கள் வழிபாடு தங்கள் செயல்களால் கேடாமலும் கவன மாகவும், கட்டுப் பாட்டுடனும் நடந்து கொள்ள வேண்டும். எந் தக் கோயிலுக்குச் சென்றாலும், அந்தந்த மூர்த்திகளை வணங்குங் கள். அந்த கோயில் மரபு அனும திக்காத செயல்களைச் செய்ய வேண்டாம்.யாத்திரை தரிசனம் முடிந்து மாலையைக் கழற்றிய பின்னும் விரத விதிகளில் முக் கியமான விதிகளைக் கடை பிடிப்பது நல்லது.

சபரிமலை விரத விழா

துருவன் என்னும் குழந்தைக்கு தெய்வம் வந்தது. பிரஹலாதன் என்ற குழந்தைக்கு தெய்வம் வந்தது. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். தெய்வங் களும் குழந்தை வடிவில் வரவே ஆசைப்படுகின்றன. குருவாயூரப் பன், கண்ணன், முருகன் என்று வரிசையாகச் சொல்லலாம். அதனால் குழந்தைத் தெய்வங்க ளையும், குழந்தைகளையே தெய் வங்களாகவும் கொண்டாடும்மரபு நமக்கு உண்டு. கண்ணனுக்கு ஒரு கிருஷ்ணஜெயந்தி, விநாயகருக்கு ஒரு விநாய கர் சதுர்த்தி, முருகனுக்கு பங்குனி உத்திரம், கந்தசஷ்டி முதலிய விழாக்கள் வரிசையில், குழந்தை தெய்வமான மணிகண்டனுக்கு ஏற்பட்ட ஒரு அற்புதமான விழாதான் கார்த் திகை ஐயப்பன் மாலை அணிந்து சபரிமலை செல்லும் விரதவிழா.

மகிஷி எனும் அரக்கி

பெரும்பாலும் புராணங்களில் ஒரு கதை யோடு தொடர்புடைய இன்னொரு கதை வந்து விடுகிறது. உதாரணமாக ஹிரண் யாக்ஷன் என்கின்ற அசுரனை வராக அவ தாரம் எடுத்து திருமால் அழித்தார்.அடுத்து அந்த ஹிரண்யாக்ஷனுடைய அண்ணன் ஹிரண்யகசிபு வந்துவிட்டான். அவனை நரசிம்ம அவதாரம் எடுத்து பகவான் வதம் செய்தார். அதைப் போலவே மகிஷாசு ரன் என்ற அரக்கன் தவம் செய்து, யாரா லும் அழிக்க முடியாத வரத்தைப் பெற் றான். ஆனால் பராசக்தி, மகிஷாசுரனைமர்த்தனம் (வதம்) செய்து மகிஷாசுரமர்த் தனி என்ற பெயரைப் பெற்றாள். அந்த மகிஷாசுரனின் சகோதரி மகஷி சகோதரனு டைய இறப்புக்கு பழி தீர்க்க தவம் செய்து, ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் பிறந்த குழந்தையால்தான் தனக்கு மரணம் நேர வேண்டும் என்று வரம் கேட்டாள். அவளை அழிக்கஹரிஹரசுதனாக அதாவது திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் அருள் குழவியாக அவதரித்தவன்தான் ஐயப்பன்.

ஐயப்பன் யார்?

பாண்டிய வம்சத்தில் வந்த அரசன் ராஜ சேகரன், பந்தள நாட்டை ஆண்டு வந்தான். அவனுடைய மனைவியின் பெயர் கோப் பெருந்தேவி. சிவனையும் விஷ்ணுவையும் அவர்கள் ஆராதனை செய்தனர். அவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லை. ஒரு நாள் பம்பை நதியோரம் அரசன் உலாவச் செல் லும் பொழுது, ஓர் அழகான ஆண் குழந் தையைக் கண்டெடுத்தான். பிள்ளையில்லா குறை தனக்கு தீர்ந்து போனதாக பெரும் கிழ்ச்சி கொண்டான். குழந்தையின் கழுத் தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்ற பெயரை வைத்தான். குழந்தையின் மீது அரச னும் அரசியும் பாசத்தைப் பொழிந்தார்கள். மணிகண்டன் வந்த நேரமோ என்னவோ,கோப்பெருந்தேவி கருவுற்றாள். ஒரு அழ கான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ராஜராஜன் என்று பெயர் வைத்தார்கள். இரண்டு குழந்தைகளுமே வளர்ந்தார்கள். ஆனால், நாள் செல்லச் செல்ல அரசிக்கு. தானே தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த குழந்தையின் மீது பாசம் அதிகரித்தது.

சரணம் ஐயப்பா

ராமாயணமும் ஐயப்பன் கதையும்

ஐயப்பன் கதை, ராமாயணம் போலவே வரும். ராமாயணத்தில் கைகேயி தன் வயிற் றில் பிறந்த பரதனுக்குப் பட்டம் கட்ட, கூனி யின் ஆலோசனைப்படி ராமனை காட்டுக்கு அனுப்பிவிடுவாள். இத்தனைக்கும் அவள் ராமனை நேசித்தவள். இந்த கதையில் அரசி, தனக்கு ஒரு குழந்தை பிறக்கும் வரை மணி கண்டனை நேசிக்கிறாள். தன் வயிற்றில் குழந்தை பிறந்தவுடன் பாசம் மாறுகிறது. அங்கேகூனிதுர்போதனை செய்தது போல, இங்கே ஒரு மந்திரி அரசிக்குதுர்போதனை செய்கிறான். அதற்காக அரசி தலைவலி என்று நாடகம் போட்டு, அதற்கு மருந்து புலிப்பால் என்று அரண்மனை வைத்தி யர் மூலம் சொல்ல வைத்து, மன்னனின் மனதை மாற்றுகின்றாள் மணிகண்டனைக் காட்டுக்கு அனுப்பிவிட்டு தனக்கு பிறந்தமகன் ராஜராஜனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்பது அரசியின் விருப்பம். மணிகண்டன் தன்னுடைய தாயின் விருப் பத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக நின்று காட்டுக்குப் புறப்பட்டான்.

முதலில் இருமுடி கட்டியவர்

மணிகண்டன் காட்டுக்குப் போகும் போது, அவனுடைய தந்தை ராஜசேகரன், வழியில் ஏற்படும் இன்னல்களில் இருந்து காத்துக் கொள்ள மூன்று கண்களுடைய சிவபெருமானின் அடையாளச் சின்னமான தேங்காய் ஒன்றை எடுத்துச் செல்லும்படி கூறுகிறார். மணிகண்டன் நீளமானதொரு துணி ஒன்றை எடுத்துக் கொண்டு அத னுள்ளே அவல், பொரி, தேங்காய் முதலிய உணவு பொருள்களை வேண்டிய அளவுக் குக் கட்டிக் கொண்டான். வில்லும் அம் புகளும் எடுத்துக் கொண்டான். இருமு டிக்கட்டை தலை மீது சுமந்து கொண்டு அரண்மனையை விட்டுப் புறப்பட்டான். அன்னையின் தலை நோவுக்கு மருந்தாக புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் சென்ற மணிகண்டன், அன்று சுமந்து சென்ற இருமுடிக் கட்டைத் தான் இன்றும் சப ரிமலைக்குப் பயணம் செய்யும் பக்தர்கள், சுமந்து செல்கிறார்கள். இதற்குப் பிறகு மகி ஷியின் வதமும் நடக்கிறது.

கண்ணனும் மணிகண்டனும்

கண்ணனுடைய வாழ்க்கையில் நடந்தது போலவே, மணிகண்டன் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் நடைபெற்றது. கண்ணன் தனக்கு கல்வி தந்த சாந்தி பினீ முனிவரின்குழந்தையைக் காப்பாற்றி அவருக்கு குருதட் சணையாக கொடுத்தார் என்று வரலாறு. அதைப் போலவே மணிகண்டன் (ஐயப்பன்) தன்னுடைய ஆசிரியருக்கு என்ன குரு தட் சணை தர வேண்டும் என்ற போது, அந்த ஆசிரியர் “என்னுடைய பையன் பிறவியில் இருந்தே பேச முடியாமலும், செவித்திறன் குறைபாட்டுடன் இருக்கின்றான். அவனு டைய வாழ்க்கை இனிப் பிரகாசம் அடையச் செய்ய வேண்டும். அதுவே நீ எனக்கு அளிக் கும் குரு தட்சனை” என்றார். குருநாதரின் அந்த வேண்டுகோளை உடனடியாக ஏற் றுக் கொண்ட மணிகண்டன், தனது தெய் வீக அருள் சக்தியினால் குருநாதரின் மக னைப் பேச வைத்தான். கேட்க வைத்தான் நல்வாழ்வு அளித்தான்.

பெரிய பாதை

ஆரம்ப காலத்தில் ஐயப்ப பக்தர்கள் எருமேலியில் இருந்து வனப்பகுதி வழியாக நடந்து, சபரிமலை சென்றடைந்தனர். சபரி மலை யாத்திரையின் உண்மையான அனுப வத்தைப் பெற, ஏறத்தாழ 50 கி.மீ தூரம் கொண்ட இந்தப் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்று இன்றும் நம்பப்படுகிறது. இந்த பாதை ‘பெருவழி பாதை’, ‘பெரிய பாதை’ அல்லது ‘நீண்ட பாதை’ என்று அழைக்கப்படுகிறது. பெரிய பாதை என்பது எருமேலி, பேரூர் தோடு, காளை கட்டி, அழுதை, அழுதை நதி, கல்லிடுங்குன்று, இஞ்சிப்பாறை- உடும்பாறை, முக்குழி, தாவ ளம், கரிவலந்தோடு, கரிமலை ஏற்றம், கரி மலை இறக்கம், பெரியானை வட்டம், சிறி யானை வட்டம் போன்றவற்றைக் கடந்துபம்பையின் அடிவாரத்தைச் சென்றடையும். காளைகட்டியில் வெடி வழிபாடுசெய்து பக் தர்கள் வணங்குவார்கள். அழுதாநதி நீராடி கல்லெடுப்பார்கள். பின்னர் அழவைக்கும் அழுதா மலையில் செங்குத்தாக ஏறுவார் கள். அழுதாநதியில் எடுத்த கற்களை கல்லி டும் குன்றில் வீசி வணங்குவார்கள். இஞ்சிப் பாறைக்கோட்டை, அழுதா மலை இறக்கம் கடந்து, முக்குழி தாவளத்தில் உள்ள மாரி யம்மனை வழிபடுவார்கள். கரிவலந்தோடு தாண்டி கதறவைக்கும் கரிமலை ஏற்றம்… இறக்கம் கடந்தால் வருவது பெரியானைவட்டம், சிறியானை வட்டம். இவற்றைக் கடந்தால் பம்பை நதி குறுக்கிடும். இங்கு நீராடி, பூஜைகள் செய்த பின்னரே யாத்தி ரையைத் தொடங்குவார்கள். இங்கிருந்து தொடங்குவதுதான் சிறிய பாதைப் பயணம்.

ஜோதியில் கலந்த ஐயப்பன்

ஐயப்பனின் வளர்ப்புத் தந்தையார் பந்தளராஜர், இவருக்கு உதயணன் என் னும் திருடனால் தொந்தரவு இருந்தது. இதையறிந்த ஐயப்பன், திருடனை எதிர்த்து போருக்குச் சென்றார். அம்பலப்புழர், ஆலங்காட்டு ராஜாக்கள் உதவியாகச் சென்றனர். அன்று முதல் இந்தக் குடும்பங்கள் ஐயப்ப னின் நெருங்கிய நண்பர்களாக மாறினர். ஐயப்பன், தான் பூமிக்கு வந்த கடமைகள் திறைவேறியதும், சபரிமலையில் கோயில் கொள்ள முடிவெடுத்தார். இதற்காக எரு மேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பாதையை சீரமைக்கும்படி குடும்பத்தினரி டம் தெரிவித்தார். அம்பலப்புழா குடும்பத் தினரும், ஐயப்பனின் நண்பரான வாபரும் பாதையை சீரமைக்க துணை நின்றனர். இதுவே ‘பெரிய பாதை’ எனப்படுகிறது. இதன் பிறகு ஐயப்பனும், அம்பாடத்து மாளிகை குடும்பத்தினரும் சபரிமலை சென்றனர். அங்கு பரசுராமர் ஸ்தாபித்த சிலையில் ஜயப்பன் ஜோதி சொரூபமாக ஐக்கியமானார்.

சபரிமலை கோயில் அமைப்பு

கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுப்புகளில் அமைந்துள்ள சபரி மலை ஐயப்பன் கோயில், 1535 அடி உயரத் தில் உள்ளது. கோயில் சிறியது. ஆனால் அழகானது. இயற்கை சூழலில் அமைந் தது. ஐயப்பனின் கருவறை ஒரு சதுரமான மாடியின் மையத்தில் நீண்ட சதுர வடிவில்நீளவாக்கில் அமைந்துள்ளது. அந்த நீண்ட சதுரத்தின் மீது கொட்டகை போட்டது போன்று தங்கத்தகடுகள் தட்டையாக இல் லாமல் இரண்டு புறமும் சாய்ந்தது போல் இருக்கும். இந்தக் கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் முன் பகுதியில் இடது, வலதாக அமைந்த ஓட்டு வீடு போன்ற நுழைவாயில் உள்ளது. உயரமான ஒரு பெரிய முதல் மாடி யில் அமைந்துள்ள கோயிலாக அமைந்திருப் பதால், சரங்குத்தி வந்தவுடனேயே கோயில் நம் கண்ணில் தென்படும். 18 படிகள் உண்டு. விரதம் இருப்பவர்கள் மட்டும் 18 படியேறி ஐயப்பனை தரிசிக்கலாம். இப்போது உள்ள ஐயப்பனின் திருக்கோயில் பழமையானது அல்ல. பழமையான கோயில் இருந்த இடத்தில் எழுப்பப் பெற்ற கோயிலாகும்.

பதினெட்டாம் படி

சபரிமலை என்றாலே பதினெட்டாம் படி நினைவுக்கு வந்துவிடும். பதினெட்டாம் படியேறி தரிசனம் செய்வது தான் முறை யான தரிசனம். ஆனால், அந்த 18 படிகளை ஏற வேண்டும் என்று சொன்னால், முறை யான மண்டல பூஜையும் விரதமும் இருக்க வேண்டும். விரதமும் பூஜையும் முறையாக இல்லாதவர்கள் எத்தனை உயர்ந்த பதவி யில் இருந்தாலும் பதினெட்டாம் படி ஏறி தரிசனம் செய்ய முடியாது. இந்திய சமயநெறிகளில் பதினெட்டு என்கின்ற எண் மிக உயர்வானது புராணங்கள் ணங்கள் பதினெட்டு பகவத் கீதையின் அத்தியாயங்கள் 18 மகா பாரதப் போர் நடந்த தினம் 18. மகாபாரத பருவங்கள் 18 சித்தர்களின் எண்ணிக்கை 18. தமிழில் கீழ்க்கணக்கு நூல்கள் 18. பதி னெட்டுப் படி ஏறிவரும் பக்தர்கள் ஐந்து கர்மேந்திரியங்களையும், ஐந்து ஞானேந் திரியங்களையும், அன்னமயகோசம் முத லான ஐந்து கோசங்களையும், சத்வ, ரஜோ. தமோ குணங்கள் ஆகியமூன்று குணங்களை யும் கடந்து உள்ளுறையும் ஆத்மனையே ஐயப்பனாகத் தரிசிக்கிறார்கள்.

சரணம் ஐயப்பா

ஐயப்பன் கோயிலில் 18 படிகளுக்கு மேல், தத்துவமசி என்ற மகாவாக்கியம் எழுதப் பட்டுள்ளது. இதை தத் துவம் – அஸி என பிரித்து படிக்க வேண்டும். “நீ எதை தேடி வந்தாயோ அது உன்னிடமே உள்ளது” என்ப துதான் இதன் பொருள். ஐயப்பன் என்ற சொல்லுக்கு நான் உனக்குள் இருக்கிறேன் என்பதுதான் பொருள். அனைத்து ஆன்மா வோடு கலந்துள்ள இறைவனை உணர்ந்து. இறை நிலைக்கு மனிதன் உயர வேண்டும் என்ற மகாதத்துவத்தை உணர்த்துவதுதான் ஐயப்பவிரதம் மற்றும் வழிபாட்டின் முக்கிய அம்சமாகும்.

தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட கவசத்தால் மூடப்பட்ட 18 படிகளிலும், 18 தேவதைகள் அருள் செய்கின்றனர். இந்த 18 படிகளும் வாழ்க்கை மற்றும் 18 வகையான குணங் களை குறிப்பதாகவும், இவற்றில் தீயவற்றை நீக்கி, நல்லவற்றை சேர வேண்டும் என்பதே. 18 படிகளின் தத்துவம். 18 படிகளில் ஏறும் போது, 18 படிகளை கடந்த ஐயப்பனை தரிசிக்கும் போதும் என்ன வேண்டிக்கொள் கிறோமோ, அது அப்படியே நடக்கும் என் பது பக்தர்களின் நம்பிக்கை. 18 படிகள் உணர்த்தும் தத்துவம்.

முதல் படி – பிறப்பு நிலையற்றது. இரண்டாம் படி – சாங்கிய யோகம். மூன்றாம் படி – கர்ம யோகம். நான்காம் படி – ஞான யோகம். ஐந்தாம் படி – சன்னியாசி யோகம். ஆறாம் படி – தியான யோகம். ஏழாம் படி – ஞான விஞ்ஞான யோகம்.எட்டாம் படி – அட்சர பிரம்ம யோகம் ஒன்பதாம் படி – ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்.

பத்தாம் படி – விபூதி யோகம்.

பதினொன்றாம் படி – விஸ்வரூப தரிசன யோகம்.

பன்னிரெண்டாம் படி – பக்தி யோகம்.

பதிமூன்றாம் படி – சேஷத்ர விபாக யோகம் பதினான்காம் படி – குணத்ரய விபாக யோகம்.

பதினைந்தாம் படி – புருஷோத்தம யோகம்.

பதினாறாம் படி – தைவாசுரஸம்பத் விபாக யோகம்.

பதினேழாம் படி – ச்ராத்தாதரய விபாக போகும்.

பதினெட்டாம் படி – மோட்ச சன்னியாச யோகம்.

வேறு அர்த்தங்களும் உண்டு. இது ஒரு கோணம். ஐயப்பபக்தர்கள் ஒரு மண்டல கால விரத முறைகளை நெறியாகவும், முறை யாகவும் கடைப் பிடித்து ஒவ்வொரு படிகள் மீது ஏற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள்.24. சபரிமலை பூஜைகள்

சபரிமலையில் ஒவ்வொரு மாதமும் பூஜை உண்டு. ஆங்கில புதுவருட நாளுக்கு முன்தினம் மகரவிளக்கு பூஜை தொடங்கும். தை மாதம் ஒன்றாம் தேதி மகர விளக்கு, ஒவ்வொரு மாதமும் நான்கு முதல் ஐந்து நாட்கள் மாத பூஜைகள் நடைபெறும். பங்குனி மாதத்தில் உத்திரத் திருவிழா தொடங்கும். கொடியேற்றம் நடந்து ஆராட்டு விழா நடைபெறும். சித்திரை மாத முக்கியமான விழா சித்திரை விஷு வைகாசி மாதத்தில் வைகாசி மாத பூஜையும் பிரதிஷ்டை தின விழாவும் நடைபெறும். ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் மாத பூஜைகள் நடைபெறும். ஆவணி மாதத்தில் திருவோணம் பூஜை நடைபெறும். புரட் டாசி மாதம், ஐப்பசி மாத பூஜை நடந்து சித்திரை ஆட்டத் திருநாள் விழா இரண்டு நாள் நடைபெறும். மிக நீண்ட நாள் நடை திறந்து இருப்பது கார்த்திகை மாத மண்டல பூஜையின் போதுதான்.

சாதாரணமாக சபரிமலை பூஜை நேரங் கள்: காலை நேரப் பூஜை. கோயில் நடை சிறப்பு நிர்மால்யம் அபிஷேகம் கால் ை5 3.00 மணி உஷ பூஜை: காலை 7.30 மணி முதல் 12.30 மன்றும், உச்சிக்கால பூஜை: மதியம், 12,30 மணி; அத்தாழ பூஜை: இரவு 9.30 மணி.சபரிமலை செல்வதற்கு இரண்டு பாதைகள் உண்டு. இரண்டு பாதையும் சந்திக்கும் இடம் பம்பை நதி. இந்தப் பகு திக்கு மேலுள்ள மலைதான் சபரிமலை. இங்கிருந்து சபரிமலை ஏழு கிலோமீட்டர். இங்கே நீராடிவிட்டுதான் சபரிமலைக்குச் செல்லவேண்டும். பம்பை ஆற்றின் கரை யோரம் ஒரே கல்லில் இரண்டு பாதங்கள் இருக்கின்றன. அதை பக்தர்கள், ‘ஸ்ரீராம பாதம்’ என்று சொல்லி வழிபடுகிறார்கள். மகர விளக்கு பூஜைக்கு முன்னால், பம்பா உற்சவம் என்ற உற்சவம் இந்த நதியில் நடக்கும். விளக்கு உற்சவம் என்பார்கள். பெரிய இலைகளில் நெய்விளக்கு ஏற்றி ஜெகஜோதியாக ஆற்றில் மிதக்க விடப்ப டும். ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி அன்று, பந்தள அரண்மனையில் இருந்து ஐயப்பனின் ஆபரணங்களில் கொண்டு வரப்பட்டு, சுவாமிக்கு அணிவிக்கப்படும். அப்படி நகைகள் அணிவிக்கப்பட்டு தீபாரா தனை காட்டப்படும் போதும், பொன்னம் பலமேட்டில் ஜோதி வடிவமாக ஐயப்பன் காட்சி தருவார். இந்த மகரஜோதியை காண் பது பாவங்கள் அனைத்தையும் போக்கக் கூடியது. ஐயப்ப வழிபாட்டில் பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுவது மகரஜோதி தரிசனத்தைதான்.

ஐயப்பனுக்கு மட்டும் அன்றி, மாளிகை புரத்தம்மனுக்கும் திருவாபரணம் அரண் மனையில் இருந்து கொண்டு வரப்படுகிறது. ஐயப்பனுக்கு ஆபரணம் சாத்தி, பூஜை நடக் கும் போது, மாளிகை புரத்தம்மனுக்கும் பூஜை நடத்துவர். மகரஜோதி விழா முடிந்த பிறகும், ஆறு நாள் நடை திறந்திருக்கும். அப்போது விழாவின் நாயகியான மாளிகை புரத்தம்மன், ஐயப்ப சுவாமியை திருமணம் செய்ய வேண்டும் என்ற வார்த்தையில், ஆசையில் சரக்குத்தி வரை பவனி வருவாள்.

மலையாளத்தில் ஐயப்பன் வரலாற்றை சாஸ்தா பாட்டு என்பர். இதில் போர் வீரனாக ஐயப்பன் சித்தரிக்கப்படுகிறார். பாண்டிச் சேவம், புளிச் சேவம், இளையர சுச் சேவம், வேளிச் சேவம், ஈழச் சேவம், பந்தலாகி சேவம், வேளார் சேவம் எனும் ஏழு பிரிவுகளாக இந்த பாடல்கள் உள் ளன. சேவமென்றால், சேவகம் என்று பொருள். பாண்டிய மன்னனிடம் ஐயப் பன் போர் வீரனாகப் பணி செய்ததாக கதை சொல்வார்கள். உடுக்கை அடித்தபடி இந்த பாடல்களைப் பாடுவார்கள். இந்தபாடலைப் பாடினாலும் கேட்டாலும் சனி தோஷம் விலகும்.

அம்பாடத்து மாளிகை குடும்பத்தை சேர்ந்த கேசவன் பிள்ளை, ஆண்டுதோறும் சபரிமலை சென்றுவந்தார். வயதான பிறகு சபரிமலைக்குச் செல்லும் வழியில் அந்தணர் ஒருவரைச் சந்தித்தார். அவர் கேசவனிடம் வெள்ளி முத்திரையுடன் கூடிய தடி,விபூ திப்பை, கல் ஆகியவற்றை கொடுத்து, சிறிது நேரத்தில் வருகிறேன் சொல்லிச் சென்றார். ஆனால் வரவில்லை. ஐயப்பனை தரிசித் துவிட்டு கேசவன் ஊர் திரும்பும் வழியில், மீண்டும் அந்த அந்தணரைச் சந்தித்தார். “தான் கொடுத்த மூன்று பொருள்களை யும் நீங்கள் பூஜித்து வந்தால் நன்மை பெறு வீர்கள்” என்று சொல்லி மறைந்தார். அந் தணராக வந்தவர் ஐயப்பனே என்பதை உணர்ந்து, அம்பாடத்து மாளிகை குடும் பத்தினர் கோயில் கட்டினர். கருவறையில் இந்த பொருட்கள் ‘தர்ம சாஸ்தாவாக’ கருதப்பட்டு பூஜிக்கப்படுகின்றன.நோய், குடும்பபிரச்னை, மனக்கஷ்டம் தீர, பக்தர் கள் வழிபட்டு பலனடைகின்றனர். எர்ணா குளத்திலிருந்து 40 கி.மீ. தூரத்தில் காலடி அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் அம்பாட்டது மாளிகை கோயில் உள்ளது. விசேஷ நாள்:
மகரஜோதி தரிசனம், பங்குனி உத்திரம். அருகில் காலடி கிருஷ்ணர் கோயில் உள்ளது.

ஐயப்பன் குளத்துப்புழையில் பாலகனாக வும், சபரிமலையில் கவுமார கோலத்திலும், ஆரியங்காவில் தாம்பத்திய கோலத்தில் பூர்ணா புஷ்பகலா சமேதனாகவும், அச் சன் கோயிலில் வானப்பிரஸ்த கோலத்தில் அரசனாகவும், காந்தமலையில் ஜோதியாக வீற்றிருப்பதாக ஐதீகம். நமது தேகத்தில் ஆறு ஆதாரங்கள் உள்ளன. முதுகுத் தண்டுக்குள் கடைசியில் உள்ளது மூலாதாரம். பிருத்வி மயமான அதில் கணபதி வீற்றிருக்கிறார். நெல்லை மாவட்டத்தில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயில் மூலாதாரம். தொப்பு ளுக்கு கீழ்ப்பகுதி சுவாதிஷ்டானம் ஜலமய மான அப்பகுதியில் நாராயணன் இருக்கி றார். அச்சன் கோயில் சுவாதிஷ்டானம். நாபி கமலத்திற்கு மணிபூரகம் என்று பெயர். அக்னிமயமான அப்பீடத்தில் இருப்பவர் சூரியன். ஆரியங்காவு – மணிபூரகமாக கருதப்படுகிறது. வாயுமயமான இருதய ஸ்தானம் அநாகதம். அங்கு பராசக்தி வீற்றிருக்கிறாள்.

குளத்துபுழா அநாகதமாக கருதப்படுகி றது. ஆகாச மயமான கண்டத்திற்கு விசுத்தி என்று பெயர் அங்கே நீலகண்டனான பரம் சிவன் வீற்றிருக்கிறார். பந்தளம் – விசுத்தி என்ற பெயர் பெற்றுள்ளது. ஆறாவது ஸ்தானம் பஞ்ச பூதங்களுக்கெல்லாம்அப்பாற்பட்ட ஸ்தானம். நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள அந்த ஸ்தா புறத்தில் ஐயப்பன் வீற்றிருக்கிறார். அது ஆக்ஞை எனப்படுகிறது.

என்ன வேண்டுதல் இருந்தாலும், இரு முடியில் நெய் ஏற்றும் போது அந்த கோரிக் கையையும் சேர்த்து வையுங்கள். மனம் உரு குங்கள். நெய் எப்படி உருகுமோ அதை போல் மனம் நெகிழ்ந்த ஐயப்பனை வழி பட்டால்தான் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் உருகி ஓடும். சபரிநாதனின் அதிசயங்கள் பரவசமூட்டுபவை. பக்தியை பெருக்கு பவை. நம்பிய பக்தர்களை ஐயப்பன் கை விடுவதேயில்லை. நினைத்தவர்கள் எல் லாம் ஐயப்பனை சென்று சேவித்துவிட்டு வர முடியாது. நாம் ஐயப்பனைப் பார்க்க விருப்பப்பட்டால், ஐயப்பனும் நம்மை பார்க்க விருப்பப்படுவான். அப்படி அவன் விரும்பினால் மட்டுமே முறையாக மாலை போட்டு, முறிவுபடாத விரதம், இருந்து முறையாக அவனை தரிசிக்க சொல்ல முடி யும். ஐயப்ப தரிசனமும் ஐயப்ப பக்தியும் ஒரு வரை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உண்டு. அதில் ஒரு சில விஷயங்களைதான் முப்பது முத்துக்களாக தொகுத்து இருக்கிறோம். சபரிமலை ஐயப்பன் என்ற ஆழ்கடலில் இன்னும் ஆயிரக்கணக்கான முத்துக்கள் இருக்கின்றன. அடுத்த வருடம் பார்ப்போம். சுவாமியே… சரணம் ஐயப்பா…!

Leave a Comment

error: Content is protected !!