கடன் தொல்லை நீக்கும் யந்திரம்
விநாயக நாமாவளிகளை உச்சாடனம் செய்து விநாயகர் வழிபாடு செய்த பிறகு அன்னபூரணி இயந்திரத்தை தயார் செய்து பூஜையில் வைக்க வேண்டும். அன்னபூரணியிடம் அமைந்துள்ள பொதுவான அருளாற்றல் வாழ்க்கையில் அமைதியையும் கவலையற்ற நிலையும் தோற்றுவிப்பது தான் வாழ்க்கையில் அமைதி குறைவும், கவலையும் ஏற்பட காரணமாக இருப்பவை பலவாக இருப்பினும் கடன் தொல்லை காரணமாக ஏற்படும் கவலைக்கு மன சஞ்சலத்துக்கும் நிகரான வேறு எதையும் கூற முடியாது. “கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று கூறுவார்கள்.
போர் முனையில் தனது போர் கருவிகளை இழந்து ராமன் முன் நிராயுதபாணியாக நின்ற ராவணனுடைய மனநிலையை விளக்கும் போது கடன் பட்ட நெஞ்சத்தையே சான்று காட்டப்பட்டது என்றால் கடன் பட்டோரின் மனவேதனை எந்த அளவுக்கு இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். அத்தகைய தாங்க இயலாத மனவேதனையை அன்னபூரணி தீர்த்து வைப்பார் என்பது உறுதி.
அன்னபூரணி இயந்திரத்தை டெல்லி அல்லது செப்பு தகட்டில் முறைப்படி எழுதிக் கொள்ள வேண்டும் மாதிரி படம் மேலே தரப்பட்டிருக்கிறது..
அன்னபூரணி இயந்திரத்தை வளர்பிறை காலத்தில் ரோகினி அல்லது மிருகசீரிடம் அல்லது சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜையில் வைப்பது சிறப்பு..
மலர்களால் சம்பகம், மல்லிகை, சம்பங்கி, பவளமல்லி போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பூஜையின் போது பயன்படுத்தலாம்.
நிவேதனப் பொருள்களாக தேங்காய்,பழம், சர்க்கரை பொங்கல் ,திராட்சை முதலியவை இருக்கலாம்..
கீழ்கண்ட மந்திரத்தை நாள்தோறும் 51 முறை உச்சரிக்க வேண்டும் இயந்திரத்தை தொடர்ந்து 24 நாட்கள் வைத்திருந்து பூஜை செய்வது சிறப்பான பலனை தரும்…
உச்சாடனம் செய்ய வேண்டிய மூல மந்திரம் கீழே கொடுத்துள்ளேன்…
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் கலீம் ஓம் நமோத் பகவத் அன்ன பூர்னே மம பிரிஷித் அன்னம் தேஹி சுவாஹா…
